பூஜை செய்த பலனை முழுமையாக பெற வேண்டும் என்றால், நீங்கள் செய்யும் பூஜையில் அவசியம் இருக்க வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன?

poojai
- Advertisement -

செவ்வாய் வெள்ளி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது வீட்டில் செய்யக்கூடிய பூஜை தான். பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடவில்லை என்றால் அந்த நாள், செவ்வாய் கிழமை வெள்ளிக்கிழமை என்ற அடையாளத்தை இழந்து விடும். அந்த அளவுக்கு நம்முடைய சாஸ்திரத்தில், இறை வழிபாட்டிற்கு இந்த இரண்டு கிழமைகளில் முக்கியத்துவத்தை கொடுத்து வைத்துள்ளார்கள். மன நிறைவைத் தரும், இறை ஆசிர்வாதத்தை பெற்று தரக்கூடிய அந்த பூஜையில் முழு பலனை நாம் பெற வேண்டும் என்றால் வழிபாட்டின் போது பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும்.

சாமி கும்பிடும் போது கட்டாயமாக வைக்கக்கூடிய பொருட்களின் பட்டியலை எடுத்தால், அது கொஞ்சம் நீண்டு கொண்டே செல்லும். இன்றைய காலகட்டத்தில் நம் வீட்டில் செய்யக்கூடிய பூஜையில் அத்தனை பொருட்களையும் கொண்டு வந்து சேர்ப்பது என்பது சாத்தியம் அல்ல. சரி, சுலபமான முறையில் நம் வீட்டில் செய்யக்கூடிய பூஜையில் என்னென்ன பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதையாவது நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா. அதற்கான பதிலை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பூஜையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்:
வீட்டில் பூஜையை தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய முதல் விஷயம் வாசனை நிறைந்த தூபம் ஏற்றப்பட வேண்டும். அது சாம்பிராணி வத்தியாக கூட இருக்கலாம். ஆக மொத்தத்தில் வாசனை நிறைந்த ஒரு புகை உங்கள் வீட்டு முழுவதும் நிரம்பி இருக்க வேண்டும்.

அடுத்தபடியாக விளக்கு. மண் அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, பித்தளை விளக்கு, எதுவாக இருந்தாலும் ஒரு தீபம் எறிய வேண்டும். அடுத்தபடியாக இறைவனுக்கு காட்ட வேண்டிய கற்பூர ஆரத்தி. மெழுகு கற்பூரத்தை தவிர்த்து விட்டு, பூ கற்பூரம் அல்லது பச்சை கற்பூரத்தை இதற்கு பயன்படுத்துங்கள். அடுத்து இறைவனுக்கு நாம் சூட்டக்கூடிய வாசனை நிறைந்த பூக்கள்.

- Advertisement -

சில சமயம் பூக்கள் நமக்கு கிடைக்கும். சில சமயம் பூக்கள் நமக்கு கிடைக்காது. பூக்கள் கிடைக்காத பட்சத்தில் வெள்ளியில் இப்போது பூக்கள் கடைகளில் விற்கின்றது. அதை வாங்கி பயன்படுத்தலாம். நிறைய வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. குறைந்த விலையிலேயே வெள்ளியில் சின்ன சின்ன பூக்கள் இருக்கிறது. அதிலிருந்து மூன்று அல்லது ஐந்து வாங்கி வைத்து நீங்கள் பயன்படுத்தினால் கூட போதும்‌.

அடுத்தபடியாக சொல்லக்கூடிய விஷயம் சந்தனம். சுத்தமான சந்தனத்தில் பன்னீர் ஊற்றி பூஜையறையில் வைத்து விட்டு பூஜை செய்து பாருங்கள். அந்த பூஜையில் உங்களுக்கு மன நிறைவு என்பது ரொம்ப ரொம்ப அதிகமாக கிடைக்கும். சந்தன வாசம் நேர்மறை ஆற்றலை அதிகப்படியாக ஈர்க்கக்கூடிய பொருளாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வாசம் இறைவனுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

இது தவிர இறுதியாக நாம் இறைவனுக்கு செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் நெய்வேத்தியம். தினம் தினம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமிக்கு நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு ஒரு உயிரோட்டம் கிடைக்கும். இறைவன் உங்கள் வீட்டில் வசிப்பதை நீங்கள் உணர வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் நித்தம் நித்தம் நிவேதியம் வைத்து இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.

தினமும் இறைவனுக்கு நிவேதியம் செய்து வழிபாடு செய்யக்கூடிய வீட்டில் இறை சக்தி நிலையாக நிற்கும் என்பது நம்பிக்கை. இனி உங்கள் வீட்டில் பூஜை செய்யும் போது மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக மன நிறைவான சந்தோஷமான வாழ்க்கையை பெறுவீர்கள்.

- Advertisement -