கடன் அடைய முருகன் வழிபாடு

murugan mudichu
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் நினைப்பது கடன் இல்லாத நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான். செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதெல்லாம் அடுத்த கட்டம் முதலாவதாக கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும். அப்படி வாழ்வதற்கான அருளை அருளக்கூடியவர் கந்த பெருமான்.

அவரை வழிபடுவது மூலம் நம்முடைய கடன் தொல்லை முற்றிலுமாக நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அது குறித்தான தகவலை ஆன்மீகம் பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர முருகன் வழிபாடு

கடன் தீர நாம் செய்யக் கூடிய இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். முருகர் வழிபாடு என்றாலே அது செவ்வாய்க்கிழமை தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதற்கு காரணம் ஒருவர் தீராத கடன் தொல்லையால் அவதிப்படுகிறார் என்றால் அதற்கு செவ்வாய்காரகன் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

அந்த செவ்வாய் காரகனுக்கு உரிய அதி தேவதையாக விளங்க கூடியவர் இந்த முருகப்பெருமான். இவரை வணங்கும் பொழுது இந்த இருவரின் அருளையும் முழுவதுமாக பெறலாம். அது மட்டும் இன்றி கடனால் துன்பம் அடைவதற்கு மற்றொரு காரணம் நம்முடைய கர்மா என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து விடுபடுவதற்கும் முருகப்பெருமானின் அருள் தேவை.

- Advertisement -

சரி இப்போது வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். அதற்கு செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை நேரத்தினை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் காலையில் வரும் 6 லிருந்து 7 வரையிலான நேரம் சரியானதாக இருக்கும். அந்த நேரத்தில் முருகர் படத்தினை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி மாலை சூட்டுங்கள். அதே போல் அகல் விளக்கில் நெய் ஊற்றி ஒரு தீபம் ஏற்றி வைத்து எளிமையான நெய்வேத்தியம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு சிகப்பு நிற துணியில் 11 ரூபாய் காணிக்கையாக கட்டி முருகர் படத்தில் முன்பு வைத்து விடுங்கள். இதை வைக்கும் போது நீங்கள் யாருக்கு தர வேண்டுமோ அவர்கள் மனதார நினைத்துக் கொண்டு அவர்களுக்கு தருவதாகவே நினைத்து இந்த முடிச்சை கட்ட வேண்டும். அந்த நேரத்தில் முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அருகில் உள்ள முருகர் ஆலயத்திற்கு சென்று நீங்கள் யாரிடம் கடன் வாங்கி உள்ளீர்களோ அவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படியாக ஆறு வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள். ஆறாவது வாரம் இந்த அர்ச்சனை வழிபாடு எல்லாம் முடிந்த பிறகு நீங்கள் முடிந்து வைத்த நாணயத்தை கொண்டு முருகர் ஆலயத்தில் உள்ள உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நடக்க முருகன் வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் செய்து முடிப்பதற்குள்ளாகவே உங்களுடைய கடன் அடைவதற்கான வாய்ப்புகளை முருகர் காட்டுவார் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் முருகனை வழிபட்டு கடன் நீங்கி வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. இந்த வழிப்பாட்டு முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -