- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனை அடைக்கும் கிராம்பு எண்ணெய்

கடனை அடைக்கும் கிராம்பு எண்ணெய்

- Advertisement -

ஒரு ரூபாய் கூட எனக்கு கடன் இல்லை என்று சொல்பவர்களை, கை நீட்டி உங்களால் காண்பிக்க முடியுமா? நிச்சயம் முடியாது. வீட்டு கடன், நகை கடன், கைமாத்தாக வாங்கிய சில்லறை கடன், இ.எம்.ஐ, என்று ஏதாவது ஒரு வகையில் இன்று மனிதன் கடனில் சிக்கித் தவிக்கின்றான். பிறவி கடனை, கர்மாவை, கழித்தால் தான் பூலோகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். அதுவரை இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்.

பிறவி கடனை அடைப்பதற்கு ஒரே ஒரு வழி. அடுத்தவர்களுக்கு நல்லது செய்வது. தன்னலம் பார்க்காமல், சுயநலம் பார்க்காமல், அடுத்தவர்களை ஆதரிப்பது, அடுத்தவர்களுக்கு கேடு நினைக்காமல் இருப்பது, துரோகம் நினைக்காமல் இருப்பது, இதையெல்லாம் பின்பற்றி பிறவி கடனை கழித்துக் கொள்ளுங்கள். கூடவே கைநீட்டி வாங்கிய கடனும் கழிந்து கொண்டே வரும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

கைமாத்தாக வாங்கிய கடனை அடைப்பதற்கு ஏதாவது வழி, பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன் என்று நீங்கள் கேட்பது நன்றாக புரிகிறது. மிக மிக எளிமையான ஒரு வழி இருக்கிறது. அது என்ன என்பதைத்தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கடனை அடைக்கும் கிராம்பு எண்ணெய் பரிகாரம்

கிராம்பு எண்ணெய். கிராம்பு தைலம் என்று சொல்லி கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கடனை அடைப்பதற்கு கொஞ்சம் பணம் கையில் வைத்திருக்கிறீர்கள். பீரோவில் வைத்திருக்கிறீர்கள், நாளைய தினம் அதை கொண்டு போய், யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீங்க, அவங்க கையில் கொடுக்க போறீங்க.

- Advertisement -

அதற்கு முன்பு உங்களுடைய கையில் அந்த கிராம்பு தைலத்தை கொஞ்சமாக பூசிக்கொண்டு, உங்களிடம் இருக்கும் பணத்தை எடுத்து, கையில் வைத்துக் கொண்டு முருகா என்னுடைய கடனை எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் அடைத்து வையப்பா, என்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு சிவனை பிடிக்குமோ, அம்பாளை பிடிக்குமோ, குலதெய்வத்தை பிடிக்குமோ, யார் பெயரைச் சொன்னாலும் தவறு கிடையாது.

அந்த இறைவனின் பெயரைச் சொல்லி சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு, பிறகு அந்த பணத்தை, கடனை கொண்டு போய் குறிப்பிட்ட நபரிடம் திருப்பி கொடுத்துவிடுங்கள். இந்த பிரார்த்தனையை செய்து விட்டு பணத்தை திருப்பி கொடுத்தால், உங்களுடைய கடன் அதி விரைவாக குறையும். வாங்கிய கடனை எல்லாம் உங்கள் கையால் சீக்கிரமாக திருப்பிக் கொடுத்து, கடன் சுமையிலிருந்து சுலபமாக வெளிவந்து விடுவீர்கள்.

- Advertisement -

சரி, கையில் பணம் இல்லை வங்கி கணக்கில் பணம் இருக்கிறது. ஜிபே செய்யப் போகிறோம். என்ன செய்வது. வேறு வழியே கிடையாது. கையில் இந்த தைலத்தை பூசிக்கொண்டு மொபைலில் ஜிபே செய்து விடுங்கள் இது முதல் பரிகாரம்.

இது போக கிராம்பை வைத்து செய்யக்கூடிய இன்னொரு பரிகாரமும் இருக்கிறது. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய படுக்கையறையில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து, ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து அதில் ஒரே ஒரு கிராம்பை போட்டு விடுங்கள். ஜாக்கிரதை, நெருப்பு மெத்தை மேல் பட்டுவிடக்கூடாது. பொருட்கள் இல்லாத இடத்தில் படுக்கை அறையில் கொஞ்சம் ஓரமாக வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நெருப்போடு கிராம்பு சேர்ந்து எறியும் போது உங்களுடைய ஆழ்மனதில் கடன் சுமை குறைய வேண்டும் என்று நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும். அடுத்த மாதத்திற்குள் ஒரு கடனை திருப்பித் தர வேண்டும் அல்லது மூன்று மாதம் கெடு, அதற்குள் அந்த கடனை திருப்பித் தர வேண்டும் இப்படி எல்லாம் சில பேருக்கு பிரச்சனை இருக்கும். குறிப்பிட்ட அந்த கடன் தீர வேண்டும் என்று அந்த கற்பூரத்தின் முன்பு ஆழ்மனதில் நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளுங்கள். கற்பூரம் எறிந்த அணைந்து முடிந்தவுடன் நீங்கள் தூங்க செல்லலாம்.

அந்த கற்பூர சம்பலை கொண்டு போய் வெளியே கொட்டி விடலாம். நிறைய சாம்பல் இருக்காது. அந்த ஒரு கிராம்பு மட்டும் எரிந்து போயிருக்கும். அதை கொண்டு போய் வெளியே கொட்டி விடுங்கள். மேல் சொன்ன விஷயத்தை நம்பிக்கையோடு பின்பற்றினாலே நிச்சயம் உங்களுடைய கடன் சுமை குறையும். இந்த கிராம்பு தைலத்தை, கிராம்பு எண்ணெயை எங்கு சென்று வாங்குவது. நிறைய ஆன்லைன் ஷாப்பிங் கிடைக்கிறது. வாங்கிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வேலையிலும் வியாபாரத்திலும் சிறந்து விளங்க தக்ஷிணாமூர்த்தி வழிபாடு

இல்லை என்றால் கொஞ்சம் பெருசாக இருக்கக்கூடிய பூஜை சாமான்கள் விற்கக்கூடிய கடைகளில் இந்த கிராம்பு தைலம் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். சிரமம் பார்க்காமல் அந்த கிராம்பு தைலத்தை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள் நல்லதே நடக்கும். கிராம்பு தைலமே எனக்கு கிடைக்கவில்லை என்றால், கிராம்பை நீங்களே நன்றாக இடித்து அதில் கொஞ்சம் பன்னீர் ஊற்றி கலந்து அந்த திரவத்தை கையில் பூசி கொள்ளுங்கள். நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்