சில பேர் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். ஒரு வருடத்தில் பத்து வேலை மாறினாலும், ஒரு வேலையிலும் மன திருப்தி இருக்காது. நல்ல சம்பாத்தியம் கிடைக்காது, நல்ல பெயர் கிடைக்காது. சில பேரால் ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல முடியாது. ஆனால் சொந்த தொழில் செய்ய வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நிறைய பணத்தைக் கொண்டு போய் வியாபாரத்தில் போட்டு நஷ்டம் அடைவார்கள்.
நாய் படாத பிழைப்பு என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல உங்களுடைய வாழ்க்கையும் அலைச்சலாகவே இருந்தால் இந்த வழிபாடு உங்களுக்காக தான். இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயமாக செய்யும் தொழிலிலும், செய்யும் வேலையிலும் மன நிம்மதியும் நிரந்தரமான ஒரு சந்தோஷமும் கிடைக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் முன்னேற்றம் தரும் தக்ஷிணாமூர்த்தி வழிபாட்டை பற்றிய விரிவான தகவலை இந்த ஆன்மீகம் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
தக்ஷிணாமூர்த்தி வழிபாடு
சிவன் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி கோவிலில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். மாதம் தோறும் வரக்கூடிய பூரட்டாதி நட்சத்திரம், உத்திராடம் நட்சத்திரம் இந்த 2 நாட்களில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. ஏனென்றால் வேலை தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த இரண்டு நட்சத்திரங்களிடம் தான் நாம் சரணாகதி அடைய வேண்டும்.
சிவன் கோவிலில் இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரத்தை வாங்கி தானம் கொடுத்துவிட்டு, 2 நெய் விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு, கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து, உங்கள் கையாலேயே மஞ்சள் நூலால் மாலை கோர்த்து, தட்சிணாமூர்த்திக்கு போட வேண்டும். எத்தனை கொண்டை கடலை 24 கொண்டை கடலை, அல்லது 54 கொண்டை கடலையில் மாலை போடுவது சிறப்பான பலனை கொடுக்கும்.
இந்த இரண்டு நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த நட்சத்திரத்தில் தொடர்ந்து மூன்று முறை இந்த பரிகாரத்தை தக்ஷிணாமூர்த்திக்கு செய்தாலே போதும். தொடர்ந்து மூன்று பூரட்டாதி நட்சத்திரம் அல்லது தொடர்ந்து மூன்று உத்திராடம் நட்சத்திரம்.
இந்த வழிபாட்டை ஒரு முறை செய்து முடித்தாலே உங்கள் வியாபாரத்திலும் வேலையிலும் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதுபோக வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து, இரண்டு விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு வேண்டிக்கொண்டால் நிச்சயம் நல்லது நடக்கும். உங்களுடைய சூழ்நிலையானது மாறும்.
நல்ல வேலையாக இருக்கும். மேனேஜர் தொல்லை மட்டும் தாங்கவே முடியாது. உடன் வேலை செய்பவர்கள், நம்மை முன்னேறவே விட மாட்டார்கள். ஏதாவது ஒரு தொல்லையை நமக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுடைய பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்று வேண்டிக் கொண்டும், இந்த வழிபாட்டை செய்யலாம்.
வியாபாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை இருக்கிறது. எந்த வியாபாரம் செய்தாலும் படு தோல்வி, எதிரி பிரச்சனை, நானும் மளிகை கடை வைத்துள்ளேன். எனக்கு பக்கத்தில் இருப்பவரும் மளிகை கடை வைத்துள்ளார். இரண்டு பேர் கடையும் ஒன்றுதான். ஆனால் என்னுடைய கடையில் வியாபாரம் இல்லை. பக்கத்து கடைக்காரருக்கு மட்டும் ஜாம் ஜாம் என்று வியாபாரம் நடக்கிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்றாலும் மேலே சொன்ன பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.
இதையும் படிக்கலாமே: வளர்பிறை ஏகாதசி 2025 பெருமாள் மந்திரம்
நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் நல்லது உங்களுக்கு நடக்கும். நட்சத்திரத்தை மட்டும் தவற விடாதீர்கள். குறிப்பிட்டு நட்சத்திரத்தில் மேல் சொன்ன வழிபாட்டை செய்யும் போது நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.