“வேல் வேல் வெற்றிவேல், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” வேலவனிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனே கிடைக்கும். அதிலும் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த சஷ்டி திதியில் முருகனிடம் வரங்களை கேட்பதற்கு மறக்கவே கூடாது. இன்றைய தினம் முருகனது பாதத்தில் இந்த ஒரு பொருளை வையுங்கள். நீங்கள் என்ன கேட்டாலும் அது உடனே கிடைக்கும். அது என்ன பொருள், முருகன் மனம் உருக எப்படி வழிபாடுகளை மேற்கொள்வது ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழியை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
முருகன் வழிபாடு
வெற்றிக்கு உண்டான கடவுள் முருகப்பெருமான். வெற்றியை கொடுக்கக்கூடிய பொருள் வெற்றிலை. வெற்றிலையை முருகனது பாதத்தில் வைத்து தான் வேண்டுதலை கேட்கப் போகின்றோம். முருகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது செவ்வாய் பகவான். செவ்வாய்க்கு உரிய நிறம் சிகப்பு. சின்ன கிண்ணத்தில் சிகப்பு நிற குங்குமத்தை போட்டு கொஞ்சமாக தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி கரைத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சம் பெரிய வெற்றிலையாக வாங்கி அந்த குங்குமத்தை உங்கள் விரலாலோ அல்லது ஒரு குச்சியாலோ தொட்டு இந்த வெற்றிலையில் உங்கள் வேண்டுதலை ஒரு வரியில் எழுத வேண்டும். சொந்த வீடு கிடைக்க வேண்டும். அல்லது நல்ல வேலை கிடைக்க வேண்டும். தொழில் லாபம் அதிகரிக்க வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும். நோய்நொடி விலக வேண்டும். இப்படி உங்களுக்கு இப்போது என்ன தேவையோ அதை ஒரு வரியில் எழுதி விடுங்கள். மொத்த வேண்டுதலையும் எழுதி குழப்ப வேண்டாம்.
ஒரே ஒரு வேண்டுதலை அந்த வெற்றிலையில், எழுதி அது சிறிது நேரம் காய்ந்ததும் அந்த வெற்றிலையை முருகப்பெருமான் பாதத்தில் வைத்து “ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா” என்று சொல்லி பிராத்தனை வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகனது திரு உருவப்படம், வேல், முருகன் சிலை எது இருந்தாலும் சரி, அந்த முருகன் பாதத்தில் இந்த வெற்றிலையை வைத்து வேண்டலாம்.
இன்று நீங்கள் வெற்றிலையில் என்ன எழுதுகிறீர்களோ அந்த விஷயத்தில் நிச்சயம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். இந்த பரிகாரத்தை செய்ய துவங்குவதற்கு முன்பாகவே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து, நெய்வேதியம் வைத்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வளவுதான் வழிபாடு. இவ்வளவுதான் பரிகாரம். அந்த வெற்றிலை மூன்று நாட்கள் முருகனது பாதத்திலேயே இருக்க வேண்டும். பிறகு வெற்றிலையை எடுத்து செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடலாம். நீங்கள் முருகனிடம் இன்றைய தினம் வைத்த வேண்டுதல், அந்த வெற்றிலையில் எழுதிய வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் பலிக்கும். அதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். முயற்சிகளை கைவிட வேண்டாம்.
இதையும் படிக்கலாமே: கேட்ட வரம் கிடைக்க முருகன் வழிபாடு
உங்களுடைய முயற்சிகளுக்கு முருகன் உறுதுணையாக இருந்து செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொடுப்பான். பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு, சும்மா இருந்தால் மந்திரத்தில் மாங்காய் என்றுமே காய்க்காது. உங்களுடைய முன்னேற்றத்திற்கும், முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கக முருகனை நம்பிக்கையோடு வணங்குங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.