சிவன் கோவிலுக்கு இந்த பொருளை தானமாக தந்தால் தீராத கடனும், தீர்க்க முடியாத நோய்யும் அடியோடு தீர்ந்து போய் செல்வ வளத்துடன் வாழலாம்.

lingam
- Advertisement -

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ எப்படி பணம் தேவைப்படுகிறதோ, அதே போல மகிழ்ச்சியுடன் வாழ உடல் ஆரோக்கியமும், கவலை இன்றி இருப்பதற்கு கடன் தொந்தரவு இல்லாமலும் இருக்க வேண்டும். இவை இல்லாமல் இருந்தாலே பணவரவே குறைவாக இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்ந்து விடலாம். இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாத மனிதனும் வியாதி இல்லாத மனிதனும் இல்லை என்ற சொல்லலாம். இந்த இரண்டு பெரிய பிரச்சனைகளையும் சரி செய்ய சிவன் கோவிலுக்கு இந்த பொருள்களை தானமாக வழங்கினால் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிவன் கோவில்களில் முக்கியமான வழிபாடாக திகழ்வது பிரதோஷ வழிபாடு தான். இந்த பிரதோஷ வழிபாடு என்பது நம்முடைய பாவங்கள் கரைந்து குடும்பத்தில் உள்ளவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ நாம் வேண்டிக் கொள்வது என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்தப் பிரதோஷ காலத்தில் நாம் வாங்கிக் கொடுக்கும் சில பொருட்களால் நம்முடைய குடும்பம் கடன், வியாதி, குழப்பம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

கடன் வியாதி தீர சிவன் கோவிலுக்கு வாங்கி தர வேண்டிய பொருள்
இந்த வகையில் நாம் முதலில் வாங்கித் தர வேண்டியது விபூதி. நல்ல சுத்தமான பசுசாணத்தில் செய்துவிபூதியை சிவ ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தால் அவர்கள் அதை அர்ச்சனைக்கும் கோவிலுக்கு வருபவர்களுக்கும் கொடுக்க பயன்படுத்திக் கொள்வார்கள். சிவ ஆலயத்தில் சிவனுடைய முக்கியமான பிரசாதமே இந்த விபூதி தான். இதை நாம் தானமாக கொடுக்கும் பொழுது இந்த பிரச்சனைகள் தீரும்.

அடுத்து நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் அரச மரத்திலிருந்து விழும் குச்சிகளை சேகரித்து காய வைத்து அதை சிவாலயத்திற்கு தானமாக கொடுக்கலாம். இந்த குச்சிகளை அவர்கள் கோவிலில் யாகம் செய்யும் போது பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி செய்வதன் மூலம் கடனானது பெருமளவு குறைந்து விடும். பெரும்பாலும் கடன் தீருவதற்கான வழிபாடு அரச மரத்தை சுற்றியே அதிகம் இருக்கிறது. அப்படியான அந்த மரத்தின் குச்சியை நாம் சிவாலயத்திற்கு தானமாக கொடுக்கும் பொழுது கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் விரைவில் நீங்க வழி பிறக்கும்.

- Advertisement -

அடுத்து இதில் இன்னொரு முக்கியமான ஒரு செயலையும் நாம் செய்ய வேண்டும். அது சிவாலயத்தில் அரிசி மாவில் கோலம் போடுவது. வீட்டில் விசேஷ நாட்களில் நாம் அரிசி மாவில் கோலம் போடுவது வழக்கம். அதே போல் சிவாலயத்திலும் இது போன்ற விசேஷ நாட்களில் ஏதேனும் ஒரு மூலையில் உங்களால் முடிந்த அளவு சின்ன அரிசி மாவு கோலத்தை போட்டால் உங்களை தொடரும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

சிவாலயத்திற்கு தானமாக கொடுக்க வேண்டிய இந்த பொருள்கள் அனைத்துமே விலை மலிவானது தான். இது அனைவராலும் செய்யக் கூடியது தான். விபூதி உங்களால் முடிந்த அளவு வாங்கி கொடுக்கலாம். அரச மரக் குச்சிகளை மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டு நாம் தேடி எடுக்க வேண்டும் அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே: பணப்புழக்கம் வீட்டில் குறைந்தால்! வெள்ளிக்கிழமையில் 8 மாவிலையை இப்படி செய்தால் மளமளவென பணம் சேரும் தெரியுமா?

இது இரண்டையும் செய்வதோடு இந்த கோல பரிகார முறையும் செய்து கடன், நோய், துன்பம் இல்லா மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக் கொள்வோம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -