கடுமையான கடனும் கண்ணிமைக்கும் நேரத்தில் கரைந்துபோகும். பைரவருக்கு இந்த ஒரு பொருளை கொண்டு, இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள்!

bairava-money

கடன் என்றாலே முதலில் நாம் சந்திக்க வேண்டியது அவமானம். அவமானத்தில் கூனிக்குறுகி பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் எதற்காக கடன் வாங்கி இருந்தாலும் சரி, அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் மேலும் மேலும் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடிப் போய்விடலாமா என்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு கூட இந்த பரிகாரம் உடனே பலன் அளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் பைரவரை நினைத்து செய்யப்போகும் சுலபமான பரிகாரம் தான் இது. முழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள். மூன்று மாதத்தில் நல்ல பலனை அடைய முடியும்.

bairavar

உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கும் எந்த ஒரு கோவிலுக்கு வேண்டுமென்றாலும் நீங்கள் செல்லலாம். ஆனால், அந்த கோவிலில் பைரவர் சந்நிதி இருக்க வேண்டும். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் பைரவருக்கு சன்னதி இருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

முதலில் தேய்பிறை அஷ்டமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம். தொடர்ந்து 2 தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பைரவர் சன்னதி இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். பைரவரின் சன்னதிக்கு முன்னால் 2 அகல் தீபங்களை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த நல்லெண்ணெயில் இரண்டு சிட்டிகை இஞ்சி துருவலைச் சேர்த்து தீபத்தை ஏற்ற வேண்டும். (வீட்டிலேயே இஞ்சியை தோல் சீவி, துருவலில் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் பொடிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பின்ச் அளவு இஞ்சி தீபம் ஏற்றும்  நல்லெண்ணையில் போட்டால் போதும்.)

deepam

தொடர்ந்து 2 தேய்பிறை அஷ்டமி அன்று நல்லெண்ணையில் இஞ்சி சேர்த்து தீபம் ஏற்றி வைத்து விட்டு, அந்த தீப ஒளியை பார்த்து பைரவரிடம் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நீங்கள் இரண்டு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபம் ஏற்றி வைத்து விட்டீர்கள். மூன்றாவதாக வளர்பிறை அஷ்டமி திதி. பைரவருக்கு 2 மண் அகல் விளக்கில் மஞ்சள் தடவி முதலிலேயே வீட்டில் உலர வைத்து விடுங்கள். அந்த தீபத்தை கோவிலுக்கு கொண்டு போய், அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பைரவருக்கு கதம்ப பூவை வாங்கிக் கொடுத்து, கடன் தீர வேண்டும் என்று அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இந்த மூன்று அஷ்டமி திதியில் நீங்கள் நம்பிக்கையோடு செய்யும் இந்த வேண்டுதல் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.

Ginger - Inji

கடுமையான கடன் பிரச்சனையில் சிக்கி வருபவர்களுக்கு, நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சுலபமான தீர்வு. இதற்காக நீங்கள் பெரிய அளவில் செலவு கூட செய்ய வேண்டாம். நம்பிக்கையை முதலீடாக வையுங்கள் போதும். அந்த பைரவர் உங்களுக்கு நிச்சயம் நல்ல வழி காட்டுவார் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அனுமன் கூறும் இந்த 2 எழுத்து மந்திரத்திற்கு இவ்வளவு சக்தியா? அதை நாம் கூறினால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.