அனுமன் கூறும் இந்த 2 எழுத்து மந்திரத்திற்கு இவ்வளவு சக்தியா? அதை நாம் கூறினால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?

hanuman-ramar-om

ஹனுமன் கூறும் இந்த இரண்டு எழுத்து மந்திரத்தை யார் கூறினாலும் அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இதற்கு பல விதமான கதைகளும், அதனுள் இருக்கும் உள்ளார்ந்த அர்த்தமும் சான்றாக அமைந்துள்ளது. இந்த இரண்டு எழுத்து மந்திரத்தை நீங்கள் முழுமூச்சாக எந்நேரமும் உச்சரிக்க வேண்டும். வேலைக்கு போகும் பொழுதும், குளிக்கும் பொழுதும், சமையல் செய்யும் பொழுதும், ஏன் சாப்பிடும் பொழுதும் கூட இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே ஒவ்வொரு வேலையும் செய்தால் உங்களை வெல்வதற்கு இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த இரண்டு எழுத்து மந்திரத்தை பற்றிய சில அறியாத அதிசய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

hanuman

அனுமனுடைய உயிர் கடவுளாக இருப்பவர் ஸ்ரீராமர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். ஸ்ரீராமரை தவிர அனுமனுக்கு வேறு எதுவுமே தெரியாது. ஒவ்வொரு நிமிடமும் அவருடைய நாமத்தை ‘ராம் ராம்’ உச்சரித்துக் கொண்டே இருப்பாராம். தமிழில் ‘ராமா’ என்றும் கூறலாம். எப்படி கூறினாலும் இரண்டு எழுத்து தான். ராம் என்கிற இந்த இரண்டு எழுத்து மந்திரம் அனுமன் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்ததால் அவருடைய நாடி நரம்புகள் எல்லாம் இந்த ஒலியையே பிரதிபலித்தது.

அனுமன் மீது சீதைக்கு எப்பொழுதுமே ஒரு பொறாமை இருக்கும். ஏன் தெரியுமா? அனுமன் இருக்கும் பொழுது ராமன் அனுமனைத் தவிர வேறு எதையும் பார்ப்பதே இல்லை. இதனால் சீதைக்கு அனுமன் மீது சற்றே பொறாமை எழுந்தது. பொறுக்க முடியாமல் ஒரு முறை இதைப் பற்றி வாய்விட்டு ராமனிடமே கேட்டு விட்டார் சீதை. சிரித்துக் கொண்டே இதற்கான விடையை கூறிய ராமன் என்ன செய்தார் தெரியுமா?

hanuman

அனுமனின் உடம்பிலிருந்து ஒரே ஒரு ரோமத்தை எடுத்து சீதையின் காதுக்கு பக்கத்தில் கொண்டு சென்றார். அதில் இருந்து ‘ராம் ராம்’ என்கிற இரண்டு எழுத்து மந்திரம் ஒலித்தது. உடம்பில் இருந்த சிறு ரோமத்தில் கூட தன்னுடைய ராம நாமத்தை கொண்டிருக்கும் இத்தகைய அளவுக்கு மீறிய பக்தியை வேறு எங்கு காண முடியும்? இந்த பக்தியே என்னை அவன் பால் ஈர்க்க செய்கிறது. இது என்னையும் அறியாமல் நிகழும் விஷயமாகும் என்று கூறினாராம். கேட்கும் பொழுதே நமக்கு புல்லரிக்கிறது அல்லவா?

- Advertisement -

நாமும் தொடர்ந்து ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால் நம்முடைய நாடி, நரம்புகளில் எல்லாம் நேர்மறை ஆற்றல்கள் பெருகும். இதனால் நாம் தொட்டது ஒவ்வொன்றும் ஜெயமாகும். நம்மிடம் தீயசக்திகள் நெருங்கக் கூட முடியாது. எவருடைய பொறாமையும், சூழ்ச்சியும், வஞ்சகமும் கூட நம்மை ஒன்றுமே செய்ய முடியாது. அந்த அளவிற்கு வலிமை வாய்ந்த இந்த ராம மந்திரத்தை ராமனே கூறினால் தான் பலனும் உண்டு. அந்த கதை இதோ!

ramar palam

இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்துக் கொண்டிருந்த பொழுது வானரங்கள் ஒவ்வொரு கல்லாக எடுத்து கடலில் போடும் பொழுது கற்கள் அனைத்தும் அழகாக ஒன்றின் அருகே ஒன்றாக மிதந்தது. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ராமன், இவர்களுக்கு உதவி செய்ய அவரும் ஒரு கல்லை எடுத்து தூக்கி போட்டார். ஆனால் அந்தக் கல் கடலில் மிதக்காமல், அலையில் அடித்துச் சென்று விட்டது. இதனைப் பற்றி அனுமனிடம் விவாதித்த பொழுது அனுமன் கூறியது என்ன தெரியுமா?

ramayanam1

பிரபுவே! நீங்கள் ராமனாக இருந்தாலும் ராம நாமத்தை உச்சரிக்காமல் கல்லைத் தூக்கிப் போட்டீர்கள். ஆனால் நாங்களோ ஒவ்வொரு முறையும் உங்களுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே கற்களை போடுவதால் அது அழகாக மிதந்து பாலமாகிறது என்றாராம். இதை விட இந்த மந்திரத்திற்கு இருக்கும் சக்தியை விவரிக்க இயலாது. நீங்களும் ‘ராமா’ என்கிற இந்த 2 எழுத்தை முழு மூச்சாக உச்சரித்து வெற்றி பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டை விட்டு வெளிய போறீங்களா? 100% வெற்றி கிடைக்க, இந்த 5 வழிமுறைகளை ஃபாலோ பண்ணுங்க போதும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.