வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமை என்றும் சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதையாக மகாலட்சுமி திகழ்கிறார் என்றும் மகாலட்சுமி வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமை என்றும் நம் அனைவருக்கும் தெரியும். பல சிறப்புகள் நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று பெருமாளுக்குரிய ஏகாதசி திதி வருவது என்பது சுக்கிர யோகத்தையும் மகாலட்சுமியின் அருளையும் பெருமாளின் அருளையும் பரிபூரணமாக பெற உதவும். அப்படிப்பட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்
சுக்கிர ஏகாதசி வழிபாடு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திதி வரும்வரும். ஒவ்வொரு விதமான நட்சத்திரம் வரும். அப்படி வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான நட்சத்திரத்திற்கும் அன்றைய நாளில் வரக்கூடிய கிழமைக்கும் பலவிதமான அற்புதமாற பலவிதமான சக்திகள் நிறைந்த வழிபாடுகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அவற்றுள் சுக்கிர ஏகாதசி குரிய பெருமாள் வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை நாம் காலையில் சரியாக 11:11 மணிக்கு செய்ய வேண்டும். அதற்கு முன்பாகவே வழிபாட்டிற்குரிய அனைத்து விஷயங்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சிவப்பு அல்லது மஞ்சள் நிற பூக்களை பெருமாளுக்கு சாற்றி பெருமாளுக்கு முன்பாக அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தீபத்தில் சுக்கிர பகவானின் அம்சம் பொருந்திய டைமன் கற்கண்டை மூன்று அல்லது ஏழு என்ற எண்ணிக்கையில் போட வேண்டும். பிறகு சரியாக 11.11 மணிக்கு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வீண் செலவுகள் குறையும். பணம் நம்முடைய கையில் தாராளமாக தங்க ஆரம்பிக்கும்.
மந்திரம்
“ஸ்ரீ ஸ்ரீனிவாச ருணம் செந்தி”
இதையும் படிக்கலாமே:பாவங்களை நீக்கும் பெருமாளின் திருநாமங்கள்
மிகவும் சிறப்பு வாய்ந்த பெருமாள் மற்றும் மகாலட்சுமிக்கு உரிய இந்த நாளில் பெருமாளின் இந்த மந்திரத்தை இந்த நேரத்தில் கூறுபவர்களுக்கு அவர்களுடைய பணம் தொடர்பான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் பண பிரச்சினை முற்றிலும் நீங்கும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.