ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு என்பது இருக்கும். அந்த வழிபாட்டை முழுமனதோடு நாம் மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக அந்த தெய்வத்தின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாடாக திகழ்வதுதான் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு. சங்கடஹர சதுர்த்தி நாளன்று நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எந்த பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டி வழிபாடு செய்கிறோமோ அந்தப் பிரச்சினை தீர்வதற்குரிய வழியை விநாயகப் பெருமான் அருள்வார். அந்த வகையில் பலரது வாழ்க்கையிலும் பிரச்சினையாக திகழக்கூடிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு விநாயகப் பெருமானுக்கு எந்த பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் கரைய கணபதி வழிபாடு
எந்த வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும், எந்த செயலாக இருந்தாலும் அந்த செயலில் இருக்கக்கூடிய தடைகள் விலகி வெற்றிகரமாக அந்த செயல் நடந்தேற வேண்டும், எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் அது விரைவிலேயே நடைபெற வேண்டும் என்று பலவிதமான வேண்டுதலுக்கு விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்வதுண்டு. ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு வகையான வழிபாடு என்பது இருக்கும். அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையை பாடாய்படுத்தக்கூடிய கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு சங்கடஹர சதுர்த்தி நாளன்று செய்ய வேண்டிய ஒரு சூட்சுமமான வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது நம்முடைய செல்வ நிலையை அதிகரிக்கும். அப்படி செல்வ நிலை அதிகரிக்கும் பொழுது அதனால் நம்முடைய கடன் பிரச்சனையும் தீருமல்லவா? அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது பிரசாதமாக வீட்டிலேயே தங்களின் கைப்பட செய்த தயிர் சாதத்தை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு நடக்கக்கூடிய அனைத்து அபிஷேகங்களிலும் கலந்துகொண்டு விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய பெயரையும் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களின் பெயரையும் கூறி விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்ய தரக்கூடிய அர்ச்சனை தட்டில் கண்டிப்பான முறையில் வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் இருக்க வேண்டும். இதோடு விநாயகப் பெருமானுக்காக ஒரு மாம்பழத்தை அதில் வைத்திருக்க வேண்டும்.
விநாயகப் பெருமான் மாம்பழ பிரியர் என்று நம் அனைவருக்குமே தெரியும். மேலும் மாம்பழம் என்பது குருவின் அம்சம் பொருந்தியதாக திகழக்கூடியது. குரு பெயர்ச்சியால் பல ராசிகளுக்கு பாதகமான சூழ்நிலை இருப்பதால் அவர்களும் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது குருவின் பலனை பெற முடியும். மேலும் குரு கோடி பணத்தை தரக்கூடியவர் என்பதால் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று குருவின் அம்சம் பொருந்திய மாம்பழத்தை விநாயகருக்கு வைத்து அர்ச்சனை செய்வது மிகுந்த பலனை தரும். இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு நாம் எடுத்து வந்த தயிர் சாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இதில் தயிர் என்பது சுக்கிர அம்சம் பொருந்தியது என்பதால் அதுவும் நம்முடைய செல்வ செழிப்பை உயர்த்துவதற்கு உதவும்.
இதையும் படிக்கலாமே: தடைகளை தவிடு பொடியாக்கும் விநாயகர் வழிபாடு
விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது சுக்கிரன் மற்றும் குருவின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய செல்வ வளர்ச்சியை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.