இந்த 6 நாட்களில் கடனாக நீங்கள் எந்த பொருளை கொடுத்தாலும், அது நிச்சயம் திரும்பி வரவே வராது. காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

calendar
- Advertisement -

என்னதான் இன்று காலம் நவீன மயமாகிவிட்டது என்றாலும், சில சாஸ்திரங்கள் குறிப்புகளை நம்மால் மாற்ற முடியாது. நேரம் காலம் பார்க்க கூடாது, நாள் கிழமை பார்க்கக் கூடாது, என்று இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டார்கள். இருப்பினும் கஷ்டங்களும் துயரங்களும் அதனால் அதிகரிக்குதே தவிர குறையவில்லை. அந்த காலத்தில் சாஸ்திரங்கள் பார்த்து சம்பிரதாயங்கள் பார்த்து கொடுக்கல் வாங்கல் நடந்தது. குடும்பம் நன்றாக இருந்தது. இன்று அவையெல்லாம் மூடநம்பிக்கை என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

சாஸ்திரப்படி எந்தெந்த கிழமையில் எந்தெந்த பொருட்களை கொடுக்கக் கூடாது. எந்தெந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் புதன்கிழமையும் சனிக்கிழமையும் உங்கள் கையால் உங்கள் வீட்டில் இருந்து கடனாகவோ, இரவில் ஆகவோ உங்களுடைய தங்க நகையையும் வெள்ளி நகையையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. உங்களுடைய நெருங்கிய சொந்தக்காரர்களாக இருந்தால் கூட நகையை கொடுக்காதீங்க. பிறகு பிரச்சனை தான். ஆனால் புதன்கிழமையிலும் சனிக்கிழமையும் பணம் கொடுத்து நாம் நிறைய பொருட்களை வீட்டிற்கு வாங்கலாம். அதனால் நமக்கு வரவு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

அடுத்தபடியாக இந்த 6 நட்சத்திரங்களில் எந்த ஒரு பொருளையும் உங்கள் கையால் யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதாவது பணம் காடனாக கொடுத்தாலும் சரி அல்லது நகைகளை உங்கள் கையால் நீங்கள் அடுத்தவர்களுக்கு இரவலாக கொடுத்தாலும், கடனாக கொடுத்தாலும், அதனால் நிறைய சிரமங்கள் வரும். கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி இந்த ஆறு நட்சத்திரங்களை காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆறு நட்சத்திரங்களில் நீங்கள் கொடுக்கக் கூடிய பொருள் மீண்டும் உங்கள் கைக்கு திரும்பவும் வராமல் கூட போய்விடலாம் ஜாக்கிரதை. பணம் தங்கம் வெள்ளி எதையுமே இரவல் கடன் கொடுக்காதீங்க.

இறுதியாக வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையும் உங்கள் வீட்டில் இருந்து எந்த பொருளையும் நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்கவே கூடாது. குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட எந்த பொருளையும் கொடுக்கக் கூடாது.  சமையலறையில் இருக்கும் அரிசி பருப்பு, தானியம் எண்ணெய் இவைகளை அடுத்தவர்களுக்கு கொடுக்கவே கூடாது. பீரோவில் இருக்கும் பணம் காசு எடுத்து வெள்ளி செவ்வாய் கிழமையில் அனாவசியமாக அடுத்தவர்களுக்கு கொடுக்காதீங்க.

- Advertisement -

வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் பணத்தை கொடுத்து ஒரு பொருளை நான் வாங்கிக் கொள்ளலாம். கடனாகவோ இனாமாகவோ அடுத்தவர்களுக்கு பணம் நகை இவைகளை கொடுக்கும்போது நம் வீட்டு ஐஸ்வரியம் வெளியே சென்று விடும் என்பது ஐதீகம்.

மேல் சொன்ன குறிப்புகள் எல்லாவற்றையும் முடிந்தவரை எல்லா நேரத்திலும் நாம் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். அப்படி இருக்கும்போது நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்கும். ஏதாவது ஒரு அவசரம். மருத்துவ செலவுக்கு காசு தேவை அல்லது வேறு ஏதாவது பிரச்சனை அந்த நேரத்தில் அடுத்தவர்களுக்கு காசு பணம் கொடுத்து உதவி தான் ஆக வேண்டும் என்றால் அந்த நேரத்தில் நிச்சயமாக நாம் இந்த விஷயங்களை பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதன் மூலம் நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -