உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அந்த குபேரரே வந்து நல்ல வழியை காட்டுவார்! இந்த வழிபாட்டை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.

guberan sivan
- Advertisement -

ஒருவர் பெரிய கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார் என்றால், அதற்கு முதல் காரணம், அவருடைய பிறவி கடன் தான். நாம் செய்யக்கூடிய கர்மவினைகள் தான், நமக்கு கடனாக வந்து நிற்கின்றது. பிறவிக் கடனை தீர்த்துக் கொண்டாலே போதும். இந்த பிறவியில் நாம், கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து விடலாம். பொதுவாகவே, ஒருவருக்கு சுக்கிரன் பலம் குறைவாக இருந்தால், அவருக்கு மகாலட்சுமி கடாட்சமும் குறைவாகத்தான் இருக்கும். கடன்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். கடன் பிரச்சனையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு, குபேரனின் ஆசீர்வாதம் கிடைத்தது, பிறவிக் கடன் தீர்ந்து, பணக் கஷ்டமும் தீர வேண்டும் என்றால், என்ன வழிபாடு செய்யவேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sani

சுக்கிர பகவானின் அருள் கிடைக்க வில்லை என்றாலும், கடன் பிரச்சனை ஏற்படும். சனி பகவானால் ஜாதகத்தில் பிரச்சனைகள் இருந்தாலும், கடன் பிரச்சனை ஏற்படத் தான் செய்யும். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு தரகூடிய ஒரு வழிபாட்டைப் பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

பூசம், அனுஷம், உத்திரட்டாதி, இந்த மூன்று நட்சத்திரங்களும் சனி பகவானுக்கு உரிய நட்சத்திரமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, இந்த நட்சத்திரங்கள் வரும் தினத்தில் நாம் சிவபெருமான் வழிபாடு செய்யலாம். அல்லது பெருமாளை வழிபாடு செய்யலாம். மூன்றாவதாக மகான்களின் சமாதியான காஞ்சி மகா பெரியவா, சாய்பாபா, அல்லது உங்களுடைய குரு அல்லது தக்ஷிணாமூர்த்தி குரு போன்ற குரு மகார்களின் வழிபாடு செய்யலாம்.

shivan

யாருக்காவது, நாம் செய்யக் கூடாத பாவத்தை செய்து விட்டால், நம்முடைய சாஸ்திர படி, அதற்கான மன்னிப்பு கேட்க, பாதங்களில் விழுந்து வணங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். நம்முடைய பாவத்தையும் குறைத்துக்கொள்ள, தெய்வங்களின் பாதங்களில் விழுந்து தான் வணங்க வேண்டும்.

- Advertisement -

நம்முடைய கர்மாவில் நாம் செய்த பாவங்களுக்கான தண்டனை தான், இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் பிரச்சினைகள். பாவத்திற்கான தண்டனைகள் தான், சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள். ஆக, நம்முடைய பாவத்தை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், சனி பகவானுக்கு உரிய மேற்குறிப்பிட்டுள்ள 3 நட்சத்திரங்களில், இந்த 3 வழிபாட்டில் ஏதாவது ஒரு வழிபாட்டை நாம் செய்யும் பட்சத்தில், நமக்கு செய்த பாவங்களிலிருந்து நிச்சயம் விமோசனம் கிடைக்கும்.

perumal

பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்களில், சிவன் கோவில்களுக்கு சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, கொடி மரத்துக்கு கீழே பணிந்து விழுந்து நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக, பெருமாள் கோவிலுக்கு சென்று, துளசி இலைகளால் அர்ச்சனை செய்து, பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். எல்லா பெருமாள் கோவில்களிலும் சிடாரி என்ற ஒன்றை நம்முடைய சிரசில் வைத்து, ஆசீர்வாதம் செய்வார்கள். பெருமாளின் பாதங்கள் நம் தலையில் படம் போது நம்முடைய பாவங்கள் தீர்க்கப்படுகின்றன.

- Advertisement -

guru-bhagavan

மூன்றாவதாக குருமார்களின் சமாதிகளில் பாதங்களை தொட்டு வணங்கும் போதும், குருவுக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கும் போதும், நம்முடைய பாவங்கள் தீர்க்க படுவதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆக, நம்முடைய பிறவிக் கடனை தீர்ப்பதற்கு, இந்த மூன்று வழிபாடும் நமக்கு நல்ல தீர்வினைக் கொடுக்கும். சிவபெருமானின் ஆசீர்வாதத்தையும், பெருமாளின் ஆசீர்வாதத்தையும், குரு மார்களின் ஆசீர்வாதத்தையும் முழுமையாக பெற்றுவிட்டால், பாவங்கள் தீர்க்கப்பட்டால், குபேரர் சம்பத்து தானாக நமக்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Kuberan

குபேர வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், குபேரரை நேரடியாக சென்று வழிபடுவதை விட, ஈசனையும், பெருமாளையும், குருமார்களையும் வழிபாடு செய்வது, அதுவும் குறிப்பிட்ட, மேல் சொல்லப்பட்டுள்ள மூன்று நட்சத்திரங்களில் வழிபாடு செய்வது, நம்முடைய பிறவி கடனையும் தீர்க்கும், பணமாக வாங்கி வைத்துள்ள கடனையும் தீர்க்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த மூன்று வழிபாட்டில், ஏதாவது ஒரு வழிபாட்டை, பூசம் அனுஷம் உத்திரட்டாதி மூன்று நட்சத்திரங்கள் வரும் தினத்திலும், தொடர்ந்து செய்து வந்தால் போதும். நமது பாவங்கள் குறைக்கப்பட்டால் சனி பகவானின் தாக்கம் குறையும் சுக்கிரனின் ஆசிர்வாதம் அதிகரிக்கும் மகாலட்சுமி கடாட்சம் கிட்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய எப்பேர் பட்ட கடன் பிரச்சனையும் தானாக தீரும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் ‘வலம்புரி சங்கை’ இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்! கடன் பிரச்சினைகள் அதிகரித்து விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -