வீட்டில் ‘வலம்புரி சங்கை’ இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்! கடன் பிரச்சினைகள் அதிகரித்து விடும்.

sangu-sad-cash
- Advertisement -

வலம்புரி சங்கு வீட்டில் வைத்தால் வளமான வாழ்க்கை அமையும் என்று தான் கூறுவார்கள். ஆனால் அதற்காக வலம்புரி சங்கை இப்படி எல்லாம் நாம் வீட்டில் வைத்துக் கொண்டால் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வலம்புரி சங்கு தெய்வீக அம்சம் பொருந்தியது. வலம்புரி சங்கை முறையாக பராமரிப்பது, பூஜைகள் செய்வது அவசியம். வலம்புரி சங்கு என்பது அழகிற்காக வாங்கி வைக்கப்படும் பொருளல்ல. தெய்வத்திற்கு இணையான சக்திகளைக் கொண்டுள்ளது என்பதால் அதற்குரிய வழிமுறைகளை கையாண்டு பலன் பெற முடியும்.

sangu

மகாலட்சுமியை அவமதித்தால் வீட்டில் இருக்கும் செல்வம் குறைந்து வறுமை ஏற்படும். அதைப் போலவே வலம்புரி சங்கை முறையாக பராமரிக்கா விட்டால் வீட்டில் கடன் தொல்லை ஏற்படும். வீட்டில் வலம்புரி சங்கு வைத்திருப்பவர்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது? எதையெல்லாம் செய்ய வேண்டும்? அதை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஸ்ரீமன் நாராயணரும், மகாலட்சுமியும் இணைந்து வலம்புரி சங்கில் வாசம் செய்வதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் வலம்புரி சங்கை வாங்கி வீட்டில் பூஜை அறையில் வைத்திருப்பதால் செல்வ வளம் கூடும் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும்.

சங்கு

வலம்புரி சங்கை எக்காரணம் கொண்டும் எதுவும் இல்லாமல் அப்படியே கீழே வைக்கக் கூடாது. இதற்கென்றே பிரத்யேகமாக விற்கப்படும் ஸ்டாண்டுகள் வாங்கி வைக்கலாம். இல்லையேல் மண் தட்டு, பித்தளை, செம்பு, வெள்ளி போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட தட்டுகள் மேல் பச்சரிசி பரப்பி அதன் மேல் வைக்கலாம்.

- Advertisement -

வலம்புரி சங்கில் மகாலட்சுமி வாசம் செய்ய, வலம்புரி சங்கை எப்போதும் நறுமணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து துர்நாற்றம் வீசும் படியான சூழ்நிலையை உருவாக்கக் கூடாது. வலம்புரி சங்கை தினந்தோறும் தண்ணீர் கொண்டு மட்டுமாவது அபிஷேகம் செய்ய வேண்டும். பலர் பலவிதமான வாசனை திரவியங்களை பயன்படுத்திக் அபிஷேகங்கள் செய்வார்கள். அப்படி செய்ய முடியாவிட்டாலும் தண்ணீர் மட்டும் ஊற்றி தினமும் அபிஷேகம் செய்யுங்கள்.

valampuri sangu

தினமும் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். மஞ்சள் குங்குமம் இன்றி வலம்புரி சங்கை வெறுமனே வைத்திருப்பது அவ்வளவு நல்லது அல்ல. ஒரு சிலர் அப்படியே வைத்து விட்டு நேரமில்லை என்று எதுவும் செய்யாமல் விட்டு விடுவார்கள். அதன் மீது தூசிகள் படிந்திருக்கும். அது போல் மட்டும் செய்யவே செய்து விடாதீர்கள். வலம்புரி சங்கில் தூசு படிந்தால் வீட்டில் கஷ்டம் ஏற்படும். கடன் சுமை கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

kadan

வலம்புரி சங்கு எப்போதும் நறுமணத்துடன் இருக்க இப்படி செய்யலாம். வலம்புரி சங்கின் உள்ளே பன்னீர் விட்டு அதில் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் ஒரே ஒரு வெற்றிலையை காம்புடன் வலம்புரி சங்கின் நுனி பகுதியை நோக்கியவாறு உள்ளே வைத்து விடுங்கள்.

vetrilai-kodi

ஏலக்காய், பச்சை கற்பூரம், வெற்றிலை, பன்னீர் இவைகள் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமானவை என்பதால் இவைகள் வலம்புரி சங்கினால் வைப்பதால் வீட்டில் பணமழை பொழியும். எப்போதும் தங்கு தடை இன்றி வருமானம் வந்து கொண்டே இருக்கும். வலம்புரி சங்கை இவ்வாறு முறையாக பராமரிக்கா விட்டால் கடன் சுமை அதிகரித்து வறுமை உண்டாகும். இதனால் வலம்புரி சங்கை வீட்டில் வைத்திருப்பவர்கள் கவனமுடனிருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே
ஆண்டியையும் அரசனாக்கும் இந்த 1 விதையை மகாலட்சுமிக்கு இப்படி அர்ச்சனை செய்து பாருங்கள் வீட்டில் பணமழை பொழியும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -