ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் மூல காரணமாக திகழக்கூடியது என்னவென்றால் அதுதான் பணம். இந்த பணம் அதிக அளவில் இருந்தாலும் பிரச்சனை. இல்லாவிட்டாலும் பிரச்சினை. பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு பணம் இல்லாததுதான் பெரிய பிரச்சினையாக திகழும்.
இந்த பணம் இல்லாததால் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனைகள் உண்டாகும். அந்த பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக கடன்களை வாங்குவார்கள். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்க வேண்டும், கடன் ஒழிய வேண்டும், பண தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அஷ்டலஷ்மிகளை நினைத்து வீட்டிலேயே ஏற்றக்கூடிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்றால் அந்த பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி, குபேரர், சுக்கிரர் போன்றவர்களின் அருள் பரிபூரணமாக வேண்டும். ஒருவருக்கு ஜாதகரீதியாகவே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் மகாலட்சுமியிடம் தான் சரணாகதி அடைய வேண்டும். அப்படி மகாலட்சுமி சரணாகதி அடைவதற்கு மகாலட்சுமி அருளை பெறுவதற்கும் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த தீபத்தை தினமும் ஏற்றுவது மிகவும் சிறப்பு. தினமும் ஏற்ற இயலாது என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை மட்டுமாவது ஏற்றலாம். இந்த தீபத்தை மாலை நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் தான் ஏற்ற வேண்டும். இதற்கு 8 அகல் விளக்குகள் வேண்டும். அந்த எட்டு அகல் விளக்குகளுக்கும் சுத்தமான பசு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு பஞ்சு திரியை எடுத்து மஞ்சலில் நன்றாக கலந்து பிறகு அதை நெய்யில் போட்டு மஞ்சள் திரியாக தீபம் ஏற்ற வேண்டும்.
இதில் இருக்கக்கூடிய நெய் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. மஞ்சள் என்பது மங்களகரமான பொருளாகத் திகழ்கிறது. இது குரு பகவானுக்குரியதாக கருதப்படுகிறது. தீபம் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உரியதாக திகழ்கிறது. ஒவ்வொரு தீபத்தை நாம் ஏற்றும்பொழுதும் வரலட்சுமி வரலட்சுமி என்று கூறியவாறு ஏற்ற வேண்டும். இப்படி நாம் எட்டு தீபங்களையும் ஏற்றினோம் என்றால் அஷ்டலட்சுமிகளும் நம் வீட்டிற்குள் வந்துவிடுவார்கள்.
எட்டு தீபங்களையும் ஏற்ற இயலாது அந்த அளவிற்கு வசதிகள் இல்லை என்று நினைப்பவர்கள் இரண்டே இரண்டில் தீபங்களை மட்டும் ஆவது மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வடக்கு பார்த்தவாறு ஏற்ற வேண்டும். அப்படி பூஜை அறையில் ஏற்று இயலாது என்பவர்கள் வீட்டு நிலை வாசலில் உள்புறம் வடக்கு பார்த்தவாறு ஏற்ற வேண்டும்.
இந்த மூன்று வழிகளில் ஏதாவது ஒரு வழியை தேர்வு செய்து தீபம் ஏற்றுவதன் மூலம் மகாலட்சுமி, ககுபேரர், சுக்கிரர் போன்ற அனைவரின் அருளையும் பெற்று பணவரவு என்பது அதிகரிக்கும். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் படிப்படியாக நீக்க முடியும்.
இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தின் அருள் கிடைக்க தீபம் ஏற்றும் முறை
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்க கூடிய பணரீதியான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.