- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடிகளை குவித்து கடன்களை காணாமல் போகச் செய்யும் தீபம்

கோடிகளை குவித்து கடன்களை காணாமல் போகச் செய்யும் தீபம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் யாரிடமிருந்து ஏதாவது ஒரு தொகையை கடனாக வாங்கி இருப்போம். அந்த தொகையை திருப்பி அடைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தும் நம்மால் அதை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டும் இருப்போம். அது சிறிய அளவில் இருக்கக்கூடிய தொகையாக இருந்தாலும் சரி பெரிய அளவில் இருக்கக்கூடிய தொகையாக இருந்தாலும் சரி இந்த கடனை முற்றிலும் நீக்க வேண்டும் என்றால் நம்முடைய பணவரவு என்பது அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் எந்த பிரச்சினையும் இல்லாமல் கடனை நம்மால் அடைக்க முடியும். பிறரிடம் இருந்து கடன் வாங்கி ஒரு கடனை அடைப்பது என்பது மிகப்பெரிய முட்டாள்தனம். அப்படி கடனை அடைப்பதற்கு பணவரவை அதிகரிக்க கூடிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கோடிகளை குவித்து கடன்களை காணாமல் போகச் செய்யும் தீபம்

தீப வழிபாடு என்பது மிகவும் முக்கியமான வழிபாடாக திகழ்கிறது. தீபம் ஏற்றினால்தான் வழிப்பாடு செய்ய முடியும். எந்த ஒரு வழிபாட்டையும் தீபம் ஏற்றாமல் செய்யவே முடியாது. அந்த அளவிற்கு தீபத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காகவும் பிரச்சனைகள் தீர்வதற்காகவும் பல விதங்களில் பல தீபங்களை ஏற்றி வழிபாடு செய்யும் பழக்கம் நம்மிடம் அதிக அளவிலேயே இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய கடல் பிரச்சினை தீரவும் பணவரவை அதிகரிக்கவும் செய்யக்கூடிய தீபத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் தான் ஏற்ற வேண்டும். மற்ற நாட்களில் ஏற்றக்கூடாது. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்குள் ஏற்ற வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. யார் ஒருவர் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் தான் தொடர்ச்சியாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். வேறு யாரும் ஏற்றக்கூடாது.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு வீட்டு பூஜை அறையில் ஒரு மனை பலகையை போட்டுக் கொள்ளுங்கள். மனைப்பலகை இல்லாதவர்கள் ஒரு சிவப்பு நிற துணியை விரித்து கொள்ளலாம். சிவப்பு நிற துணியும் இல்லை என்பவர்கள் ஒரு பேப்பரை விரித்து கூட இந்த தீபத்தை ஏற்றலாம். இப்பொழுது அந்த மனை பலகைக்கு மேல் ஒரு முக்கோணத்தை வரைய வேண்டும். இந்த முக்கோணத்தை நாம் வரையும் பொழுது பச்சரிசி மாவினால் தான் வரைய வேண்டும். சாதாரண கோலமாவினால் போடக்கூடாது.

- Advertisement -

பிறகு இந்த முக்கோணத்திற்குள் கல் உப்பை முழுவதுமாக நிரப்ப வேண்டும். இப்படி நிரப்பி முடித்த பிறகு அந்த முக்கோணத்திற்குள் மூன்று பக்கங்களிலும் இந்த மந்திரத்தை எழுத வேண்டும்.

ஓம் கார்த்தவீர்யார்ஜுனய நமஹ

- Advertisement -

பிறகு அந்த முக்கோணத்தின் மூன்று முனைகளிலும் ஏதாவது ஒரு பூவை வைக்க வேண்டும். பிறகு அந்த முக்கோணத்தின் நடுப்பகுதியில் ஒரு அகல் விளக்கை வைத்து அதற்குள் சிவப்பு அட்சதையை போடவேண்டும். அந்த அட்சதைக்கு மேல் மறுபடியும் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் கடுகு எண்ணெய் ஊற்றி சிவப்பு நிற பஞ்சுத்திரிகள் இரண்டை ஒன்றாக இணைத்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபமானது குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எரிய வேண்டும். இந்த தீபம் எரிந்து முடித்த பிறகு இதில் இருக்கக்கூடிய கல் உப்பு அட்சதை மலர்கள் போன்றவற்றை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஓடுகின்ற நீர் இருக்கும் பட்சத்தில் அதிலும் போடலாம். பிறகு கீழ் வரும் இந்த மந்திரத்தை ஒரு லட்சத்தி எட்டு முறை கூறவேண்டும். ஒரே நாளில் கூற முடியாது. உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் எத்தனை முறை கூறினால் எவ்வளவு நாட்களில் முடிக்க முடியும் என்று நீங்களே கணக்கு வைத்துக் கொண்டு கூற வேண்டும்.

இந்த மந்திரத்தை நாம் அப்படி ஒரு லட்சத்து எட்டு முறை கூறிவிட்டோம் என்றால் நம்முடைய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது.

சுமந்து சுமந்து ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன நமஹா

இதையும் படிக்கலாமே:ராமரும் சீதையும் போல ஒற்றுமையுடன் வாழ வழிபாடு

செவ்வாய்க்கிழமை செய்வதாக இருந்தால் தொடர்ச்சியாக 16 செவ்வாய்க்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை செய்வதாக இருந்தால் தொடர்ச்சியாக 16 ஞாயிற்றுக்கிழமையும் தீபமேற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதற்குரிய பணவரவு ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்