தானாக சுற்றும் இந்த அதிசய புல் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் தொழில் விருத்தி, பண விருத்தி பன்மடங்கு அதிகரிக்கும் தெரியுமா? இது எங்கே கிடைக்கும்? இதன் தத்துவம் என்ன?

sanjeevi-pul-sivan

இந்த அதிசய புல்லை தண்ணீரில் நனைத்து கையில் பிடித்துக் கொண்டு நின்றால் தானாகவே எட்டு திசைகளையும் பார்த்து சுற்றி சுற்றி நிற்கும். சில அதிசய மூலிகை வகைகளில் இந்த சஞ்சீவி புல் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. பல இடங்களில் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் வளரும் இந்த புல் சாதாரண மூலிகை அல்ல. இதில் தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. இந்த சஞ்சீவி புல் பற்றிய அதிசயங்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

sivan

சிவபெருமான் தாண்டவம் ஆடிய பொழுது அவருடைய நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளிகளும், ஜடாமுடியில் இருந்து விழுந்த ரோமங்களும் மூலிகைகளாக மாறி உள்ளன என்று புராணங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படி அவருடைய ஜடாமுடியில் இருந்து விழுந்த ரோமங்கள் தான் சஞ்சீவி புல்லாக பூமியில் விளைகின்றன. இதனை சிவ ரோமம் என்றும் சஞ்சீவி புல் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஒரே ஒரு புல் மனிதர்களுக்கு பல்வேறு வகையில் அதிசயிக்க வைக்கும் வகையில் உபயோகப்படுகிறது. சிவனுடைய ரோமம் என்று கூறப்படும் இந்த சஞ்சீவி புல் தாந்திரீக பரிகாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தப் புல்லை பணம் வைக்கும் இடங்களில் வைக்கும் பொழுது, அந்த இடத்தில் பணம் பல மடங்கு பெருகும். அடகு சென்ற நகைகள் மீண்டும் திரும்பவும் இந்த புல்லை நகை வைக்கும் இடத்தில் வைக்கிறார்கள்.

money

குறிப்பாக தொழில் மற்றும் வியாபார விருத்திக்கு சஞ்சீவி புல் அனுபவ பூர்வமாக பலருக்கும் பயன்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குதாரர்களாக தொழில் செய்பவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்கள், இந்த சஞ்சீவி புல்லை பணம் வைக்கும் இடங்களில் வைக்கலாம். குடும்ப ஒற்றுமைக்கு பூஜை அறையில் இந்த சஞ்சீவி புல் வைக்கலாம்.

- Advertisement -

வாகன ரீதியான பயணங்களில் இருக்கும் பிரச்சனைகள், தோஷங்கள் நீங்க உங்களுடைய வாகனங்களில் சஞ்சீவி புல் ஒன்றை சிறிய குப்பியில் அடைத்து தொங்க விடலாம். அது போல் வீட்டில் செல்வம் பெருக பீரோவில் சஞ்சீவி புல் ஒன்றை பட்டுத் துணியில் கட்டி பணத்தோடு வைத்துக் கொள்ளலாம்.

money

இந்தப் புல்லின் அதிசயம் இது தானாக சுற்றுவது தான். இதை வாங்கும் பொழுது பரிசோதித்து பார்த்து வாங்கி கொள்ளலாம். மூலிகை வேர்கள் கிடைக்கும் இடங்களில் கண்டிப்பாக இந்த சஞ்சீவி புல் வகை மூலிகையும் கிடைக்கும். சாதாரண புல் எப்படி தானாகவே சுற்றும்? சொன்னால் நம்ப முடியாமல் போகலாம். ஆனால் இந்த புல் உண்மையிலேயே தானாக சுற்றுவதை பார்க்கும் பொழுதே இதனுடைய அதிசயத்தையும் உணர முடிகிறது.

sanjeevi-pul

இந்த அதிசயத்தை நிகழ்த்தும் சஞ்சீவி புல் தண்ணீரையும் சுத்திகரிக்கும். முந்தைய காலங்களில் இந்த புல்லை தண்ணீரை சுத்திகரிக்க தண்ணீரில் போட்டு வைப்பது வழக்கமாக வைத்திருந்தார்கள். கிணறு, தொட்டி போன்றவற்றில் சுத்தமான தண்ணீர் கிடைக்க இந்த புல்லை போட்டு வைப்பார்களாம். சிவனின் வாகனமாக இருக்கும் ரிஷபம் இரட்டை வாகனமாக இருக்கும் பொழுது ஒன்று சரியாகவும், இன்னொன்று சரி இல்லாமலும் ஓடும் பொழுது, இந்தப் புள்ளை பயன்படுத்தி சீராக ஓட செய்வார்கள்.

Sivan-God

சிவன் ருத்ர தாண்டவம், ஆனந்த தாண்டவம் போன்ற தாண்டவங்கள் புரியும் பொழுது அவரின் ஜடாமுடியில் இருந்து விழுந்த ரோமம் சஞ்சீவி புல்லாக மாறியதாக கூறப்படுகிறது. அதனால் இந்த புல் வைக்கும் பொழுது கூடவே சிவபெருமான் கோவிலில் இருந்து வாங்கி வரப்பட்ட விபூதியை கட்டாயம் வையுங்கள். சிவனுடைய அருளும் இந்த புல்லினுடைய அதிசய சக்திகளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

surya-grahan

சஞ்சீவி புல் உயிர் சக்தியை கொடுக்க கூடியது. முந்தைய காலங்களில் கிரகணங்களின் போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க இந்த புல்லை தான் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் இந்த புல் கிடைக்காமல் போனதால் அதற்கு இணையாக இருக்கும் தர்ப்பையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என்றும் கூறப்படுகிறது. கொல்லிமலை, பச்சை மலை போன்ற இடங்களில் பெரும்பாலும் இந்த மூலிகை கிடைக்கப் பெறுகிறது.

இதையும் படிக்கலாமே
ராகு-கேது உங்களுக்கு எந்த மாதிரியான கெடுதலை செய்யும் தெரியுமா? ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.