கழுத்தை நெறிக்கும் கடன் தீர்வதற்கு மகாலட்சுமிக்கு செய்ய வேண்டியது என்ன? இதை மட்டும் செய்தால் தீராத கடனும் தீர்ந்துவிடும்!

lakshmi-ganapathy-lotus

சிலருக்கு கடனே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. இவர்களை போன்றவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடனோடு வாழ்பவர்கள் நிம்மதியான உறக்கம் இன்றி உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கிறார்கள். கடன் தீர்வதற்கு என்னவெல்லாமோ முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் ஒரு பலனும் இல்லாமல் போயிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் கடன் தீர என்னதான் செய்யலாம்? அதிகப்படியான கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்தால் காணாமல் போய்விடும். அதை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

kadan

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடம் கடனுக்கு உரிய இடமாகும். உங்களுடைய சுய ஜாதகத்தை ஆராய்ந்தாலே ஏன் கடன் ஏற்பட்டுள்ளது? என்பதை தெரிந்து கொள்ளலாம். ‘அழுத பிள்ளைக்கு தான், பால் கிடைக்கும்’ என்பது பழமொழி. ஒரு வீட்டில் பத்து குழந்தைகள் இருந்தாலும், எந்த குழந்தை அழுகிறதோ! அந்த குழந்தைக்கு தான் முதலில் பால் கிடைக்கும். அதுபோல கடவுளிடம் வேண்டும் வேண்டுதல்கள் உண்மையாக மனமுருகி வேண்டினால் நிச்சயம் பலிக்கும்.

பணத்திற்கு உரியவள் மகாலட்சுமி. கடன் இருப்பவர்கள் மகாலட்சுமியை தான் பரிகாரத்திற்கு வணங்க வேண்டும். கோடான கோடி செல்வம் வைத்திருந்தாலும் அவர்களும் ஒரு கட்டத்தில் கடனாளிகளாக மாறுவதை நாம் பார்த்திருப்போம். குப்பையில் இருப்பவர்களை கோபுரத்திலும், கோபுரத்தில் இருப்பவர்களை குப்பையிலும் கொண்டு வர மகாலட்சுமி ஒருவரால் மட்டுமே முடியும். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த மகாலட்சுமிக்கு இப்படி பூஜை செய்யுங்கள்.

lotus

மகாலட்சுமிக்கு மிக மிக பிடித்த ஒரு பூ என்றால் அது தாமரை பூ. தாமரைப்பூவில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தாமரையே மகாலட்சுமியாக நாம் நினைத்துக் கொள்ளலாம். சாட்சாத் மகாலட்சுமியின் ஸ்வரூபமே தாமரை. தாமரை மலர்களை எங்கு கிடைத்தாலும் வாங்கி வந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். கடன் அதிகமாக இருப்பவர்கள் ஒரு தாமரை மலரை வாரந்தோறும் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

முதலில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அதற்கு முன்பாக இந்த தாமரை மலரை வைத்து பூஜையை துவங்க வேண்டும். லக்ஷ்மீ கணபதி உடைய அருள் இருந்தாலே உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் மாயமாகி கடன்கள் சுலபமாக தீர்ந்துவிடும். பிள்ளையாருக்கு சந்தன, குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். இரு அகல் தீபங்கள் ஏற்றிக் கொள்ளுங்கள். பின்னர் பிள்ளையாருக்கு அருகம்புல் கொண்டும், மகாலட்சுமியான தாமரைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் தீப தூப, கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

manjal-pillaiyar2

மந்திரம்:
ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே!
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா!!

lakshmi-ganapathi

இந்த மந்திரத்தை உச்சரித்த பின் செய்த பாவங்கள் எல்லாம் நீங்க கணபதியிடம் 108 முறை தோப்புக்கரணம் போடுங்கள். 108 முறை போட முடியாதவர்கள், ஒன்பது முறை போடலாம். இந்த பரிகாரத்தை பக்தி சிரத்தையுடன் முழுமனதோடு கடன் தீர வேண்டிக் கொண்டு செய்யுங்கள். இதனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். வாரம் ஒருமுறை இப்படி செய்து வர நிச்சயம் எப்பேர்பட்ட தீராத கடனும் சுலபமாக தீரும் என்பது ஐதீகம். நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
அட! கணவன், மனைவி சொல்படி கேட்டு நடக்கவும் மனைவி, கணவன் சொல்படி கேட்டு நடக்கவும் இப்படி ஒரு சுலபமான வழி உள்ளதா? இத ஒரு வாட்டி நீங்க ட்ரை பண்ணி பாருங்களே! ஆச்சரியப்படுவீங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.