அட! கணவன், மனைவி சொல்படி கேட்டு நடக்கவும் மனைவி, கணவன் சொல்படி கேட்டு நடக்கவும் இப்படி ஒரு சுலபமான வழி உள்ளதா? இத ஒரு வாட்டி நீங்க ட்ரை பண்ணி பாருங்களே! ஆச்சரியப்படுவீங்க.

இந்த உலகத்தில பெரிய பெரிய பிரச்சனை எல்லாத்தையும் கூட சுலபமா நாலு பேரு வச்சு பஞ்சாயத்து பண்ணி பேசி தீர்த்துக்கலாம். இந்த கணவன் மனைவி பிரச்சனைக்கு மட்டும் ஆயுசு உள்ளவரை தீர்வே கிடையாது. ஆனால் அதை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். இதற்காகத்தான் சின்ன சின்ன விஷயங்களை அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் கணவன் மனைவி ஒற்றுமைக்காக சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். அந்த வரிசையில் ஒரு சிறிய தாந்திரிக முறை அல்லது தந்திர முறை, எப்படி வேண்டும் என்றாலும் இதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். இந்த முறையை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய கணவன் மனைவிக்கு ஏதாவது ஒரு விதத்தில் தீர்வு கிடைக்கிறதா என்று!

fight4

நம்பிக்கையோடு செய்ய வேண்டும். கணவன் மனைவியோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். மனைவி கணவனோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று சண்டை போட்டுக் கொண்டு ‘உன்னை நான் அடக்கி ஆள வேண்டும். என்னை நீ அடக்கி ஆள கூடாது’. என்பதற்காக எல்லாம் இந்த பரிஹாரம் செய்யக்கூடாது. நிச்சயம் பலிக்காது.

கணவன் மனைவி அல்லாமல், மற்றவர்கள் இதை செய்தால் நிச்சயம் அதுவும் பலிக்காது என்பதையும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டியது மிக மிக அவசியம். சரி, ரகசிய குறிப்புக்கு செல்வோமா? முதலில் இந்த பரிகாரத்திற்கு இனிப்பு பொருள் தேவை. சர்க்கரையை பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். கடையிலிருந்து வாங்கிய இனிப்பு பலகாரங்களை ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

family fight

நம்முடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும். எப்போதுமே இடதுகை பிரபஞ்சத்திலிருந்து சக்தியை ஈர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. நம்மிடம் இருக்கும் நேர்மறை ஆற்றல், நேர்மறை சக்தியை அடுத்தவர்களுக்கு ஆசிர்வாதம் செய்வதற்காக வலது கை பயன்படுத்தப்படுகிறது என்பது!  அதாவது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை வலது கைக்கு உண்டு.

- Advertisement -

இப்போது பெண்கள் உங்களது இடது கையில் கொஞ்சம் போல ஒரு கைப்பிடி அளவு சர்க்கரையை வைத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களது வலது கையை மேலே மூடிக் கொள்ளுங்கள். உங்களுடைய கணவர் எந்த தவறான வழிக்கு செல்லக்கூடாது. நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை அவர் காது கொடுத்து கேட்டு, அவருடைய வாழ்கையின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடன் நிரந்தரமாக சந்தோஷமாக சண்டை இல்லாமல் வாழ வேண்டும் என்று.

sugar

அதே சமயம் உங்களது குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களது குல தெய்வத்தின் பெயரையும் மூன்று முறை உச்சரித்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் கையில் இருக்கும் சர்க்கரையை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இந்த சர்க்கரையை தினந்தோறும் உங்களது கணவருக்கு தேனீரிலோ, காபியில் கலந்து கொடுங்கள். நிச்சயம் உங்களுடைய கணவர் உங்களிடம் சண்டை போடாமல் ஒற்றுமையாக வாழ்வார்.

kamatchi-amman

இப்போது கணவரும் இதேபோல் கடையிலிருந்து வாங்கிய இனிப்பு பண்டத்தை உங்களது இடது கையில் வைத்துக் கொள்ள வேண்டும். வலது கையை மேலே வைத்து கொள்ள வேண்டும். உங்களது மனைவி நீங்கள் சொன்னபடி கேட்டு, நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை காதில் வாங்கிக் கொண்டு, சண்டை போடாமல் நல்லபடியாக உங்களுடன் இறுதிவரை குடும்பம் நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேருக்கும் ஒரே குலதெய்வம் தானே இருக்கப்போகிறது கணவன் மனைவி இருவரும் குல தெய்வத்தின் பெயரை உச்சரித்து, அந்த இனிப்பு பண்டத்தை உங்களது மனைவிக்கு கொடுங்கள். இந்த பரிகாரத்தை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் செய்தாலும் தவறு இல்லை.

sweets

இப்படியாக அடிக்கடி நீங்கள் செய்து கொண்டே இருக்கலாம். அதிலும் ஒன்றும் தவறு கிடையாது. குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நேர்மறை எண்ணங்கள், பரிகாரம், தாந்திரீகம், மாந்திரீகம் எல்லாமே நல்லதுக்காக செய்தாள் நல்லதே நடக்கும். கெட்டது நினைச்சு பண்ணா கெட்டது நடக்கும். அவ்வளவு தான். வீட்டு குல தெய்வத்தின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, இந்த பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன்! நிச்சயம் உங்களது குடும்பம் ஒற்றுமையாக ஆயுசுக்கும் இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள் இப்படி வழிபாடு செய்தால் போதுமே! பெற்றோர் சொன்ன பேச்சை பிள்ளைகள் நிச்சயம் கேட்பார்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.