ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைக்கு காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவானே, அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். செவ்வாய் பகவானுக்குரிய முகூர்த்தமாக திகழ்வதுதான் மைத்ரேய முகூர்த்தம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய நேரத்தில் நாம் கடன் தொகையை திருப்பி செலுத்துவதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. அப்பேற்பட்ட மைத்ரேய முகூர்த்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதற்கு செவ்வாய் பகவானை முழு காரணமாக திகழ்கிறார். நகையை அடமானம் வைத்து வாங்கி இருந்தாலும் அல்லது சொத்தை அடமானம் வைத்து பணத்தை வாங்கி இருந்தாலும் அவை அனைத்துமே கடனாகவே பாவிக்கப்படுகிறது. அந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு செவ்வாய் பகவானின் அருள் என்பது வேண்டும். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய மைத்ரேய முகூர்த்த நாளில் செய்யக்கூடிய முருகன் பரிகாரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
நவம்பர் மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமையோடு மைத்ரேய முகூர்த்தம் என்பது வருகிறது. வியாழக்கிழமை என்பது குருபகவானுக்கு உரிய நாள் என்பதோடு மட்டுமல்லாமல் அது குபேர பகவானுக்கும் உரிய நாளாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளை தான் நாம் குபேர மைத்ரேய முகூர்த்த நாள் என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில் நாம் கண்டிப்பான முறையில் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். மாலை 4:30 மணிக்கு மேல் ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குருபகவானுக்குரிய விரலி மஞ்சள் இரண்டை வைக்க வேண்டும். பிறகு குபேர பகவானுக்குரிய ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றையும் அதில் வைக்க வேண்டும்.
இதை மூட்டையாக கட்டி முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விடுங்கள். முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமானிடம் கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை அன்றைய தினத்தில் வழிபாடு செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த முடிச்சை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் பொழுதும் மனதார கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரவேண்டும், கடன் தீருவதற்குரிய பணவரவு உண்டாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வைக்க வேண்டும். எப்பொழுது உங்களுடைய கடன் பிரச்சினை தீருகிறதோ அப்பொழுது இந்த மூட்டையை அப்படியே ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ஐப்பசி பௌர்ணமி ஆண்கள் செய்ய வேண்டிய காரியம்
மிகவும் சக்தி வாய்ந்த குபேர மைத்ரேய முகூர்த்த நாள் அன்று முருகப்பெருமானுக்கு இந்த முறையில் பரிகாரம் செய்து வழிபாடு செய்பவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.