- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர நெல்லிமர தீப வழிபாடு

கடன் தீர நெல்லிமர தீப வழிபாடு

- Advertisement -

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறை ஏதும் இந்த விருட்சங்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு விருச்சகங்களிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு விருச்சகங்களை வழிபடுவதால் நம்முடைய தீராத கர்ம வினைகள் விரைவில் தீரும் என்று சொல்லப்படுகிறது.

ஆன்மீகம் குறித்த இந்த பதிவிலும் ஒரு விருட்ச வழிபாட்டை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த விருட்ச வழிபாட்டை செய்வதன் மூலம் நம்முடைய பணப்பிரச்சனை கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழ்வதற்குரிய யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது அது பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

கடன் தீர நெல்லிமர தீபம்

இந்த தீபத்தை நாம் நெல்லி மரத்தடியில் தான் இயற்ற வேண்டும். நெல்லி மரம் என்றால் ஒரு மரத்தில் குறைந்தது 100 இலைகளாக இருக்க வேண்டும் அப்போதுதான் அது மரம் என்று கணக்கில் வரும். சிலர் செடி இருந்தால் அதில் ஏற்றலாமா என்று யோசிப்பீர்கள் அப்படி ஏற்றக் கூடாது.

இந்த நெல்லி மரத்தடியில் நீங்கள் அகல் விளக்கு அல்லது நெல்லிக்காயில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு பஞ்சித்திரி பயன்படுத்துங்கள். எண்ணை எந்த எண்ணையாக வேண்டுமானாலும் இருக்கலாம். முதலில் நெல்லி மரத்தடியில் சுத்தம் செய்து விட்டு நீங்கள் எடுத்துச் சென்றிருக்கும் நெல்லிக்காய் அல்லது அகல் விளக்கு இதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எரிய வேண்டும். நெய்வேத்தியமாக வெல்லத்தை வையுங்கள். இந்த நெல்லி மரத்தை நீங்கள் சுற்றும் படி இருந்தால் 21 முறை உங்களுடைய பணப் பிரச்சனை கடன் தொல்லை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சுற்றுங்கள்.

ஒரு வேளை மரத்தை சுற்ற முடியாத பட்சத்தில் நெல்லி மரத்தடியில் அமர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து 21 நாட்கள் செய்ய வேண்டும். பெண்கள் தங்களுக்கான மாதவிலக்கு நாட்கள் முடிந்த பிறகு இதை தொடங்குங்கள். அதே போல் இந்த வழிபாடை துவங்கும் தான் வெள்ளிக்கிழமையாக இருந்தால் சிறந்தது.

- Advertisement -

ஏனெனில் நெல்லி பரமானது மகாவிஷ்ணு வாசம் செய்யும் விருட்சமாக கருதப்படுகிறது. அது மட்டும் இன்றி அதில் இருக்கும் நெல்லிக்கனியில் மகாலட்சுமி தாயாரின் அம்சமாக கருதப்படுகிறது. கடன் தீரவும் பணப்பிரச்சனை தீரவும் தாயாரின் அருளும் நமக்கு சேர்த்தே தான் கிடைக்க வேண்டும். எனவே அவர்களுக்கே உகந்த நாளில் இந்த வழிபாடு செய்யும் பொழுது அதிக பலனை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்க பரிகாரம்

இந்த வழிபாட்டை வாழ்நாளில் ஒரு முறையேனும் செய்தால் கூட போதும் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் இந்த தீப வழிபாடு செய்து பாருங்கள்.

சற்று முன்