வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றாலே அங்கு மகாலட்சுமி தாயார் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கினால் ஒழிய நம்முடைய பண பிரச்சனைகள் தீரவே தீராது. ஆகையால் தான் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் அவருக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து அவரை மகிழ்விக்கிறோம்.
இவ்வாறு செய்யும் போது நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். இந்த பரிகாரத்தையும் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்யப் போகிறோம். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் மனம் குளிர்ந்து நம் வீட்டில் செல்வமழை பொழிவார் என்று சொல்லப்படுகிறது. இப்பொழுது இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க பச்சை கற்பூரம்
இன்று பச்சை கற்பூரத்தின் பலனை பற்றி அனைவரும் அறிந்து அதை பல வகையில் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். பச்சைக் கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம். அது மட்டும் இன்றி இது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருளாகவும் பார்க்கப்படுகிறது.
அப்படியான பச்சை கற்பூரத்தை நாம் ஒரு சில வழிகளில் பயன்படுத்தும் போது பணவரவு மேலும் அதிகரிக்கும். இதனால் கடன் அடைந்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். இப்போது நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க பச்சை கற்பூரத்துடன் மஞ்சளையும் கலந்து ஒரு எளிய பரிகாரத்தை செய்ய போகிறோம்.
இந்த பரிகாரத்தை செய்ய வெள்ளிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுதும் முதலில் குளித்து விடுங்கள். அதன் பிறகு வீட்டு வாசலில் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு கொள்ளுங்கள். அடுத்து நிலை வாசலில் சுத்தமான தண்ணீர் வைத்து நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கலந்து விடுங்கள். இதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை தூள் செய்து போட்டு அதையும் நன்றாக கலந்த பிறகு இந்த தண்ணீரை ஒரு துணியால் தொட்டு வாசல் நிலை வாசலை துடைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசலுக்கு ஒரு மலரை வைத்து ஊதுபத்தி காட்டி தீபாராதனை செய்யுங்கள். ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் இன்னும் விசேஷமானதாக இருக்கும். இவை அனைத்தையும் காலை பிரம்ம முகூர்த்த நேரத்திற்குள் செய்துவிட வேண்டும். இது தான் மிக மிக முக்கியமான ஒன்று.
இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சினைகள் தீர தானம்
வெள்ளிக்கிழமையில் தவறாது இதை செய்து வரும் போது நம்முடைய இல்லத்தில் தாயாரின் அனுகிரகம் அதிகமாக கிடைத்து செல்வ வளம் அதிகரிக்கும். பண வரவும் அதிகரிக்கும். இதனால் கடன் அடைந்து நிம்மதியாக வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.