- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர செவ்வாய்க்கிழமை பிரதோஷ பரிகாரம்

கடன் தீர செவ்வாய்க்கிழமை பிரதோஷ பரிகாரம்

- Advertisement -

திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது, அண்ணாமலையானே என்று மனதார நினைத்தாலே போதும் நமக்கு முக்தி கிடைக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் திரு அண்ணாமலை ஈசனை நினைத்து நம்முடைய கடன் சுமை தீர நாளைய தினம், செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரவிருக்கும் பிரதோஷ நாளில் எப்படி வழிபாட்டை மேற்கொள்வது, என்ன பரிகாரத்தை செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

பிறவிக் கடனை அடைப்பதற்கு தான் அந்த அண்ணாமலை ஈசனை வழிபட வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் பொருளாதாரத்தில் வாங்கி வைத்திருக்கும் கடனை தீர்க்கவும், இந்த கலியுகத்தில் அண்ணாமலை ஈசனின் பாதங்களை பற்றி கொள்ளலாம். நிச்சயம் அவன் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுப்பான்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு

நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷம். செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் முதலில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தாலோ அல்லது மண் அகல் விளக்கிலோ தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 4:30 மணி வரை ராகுகால நேரத்தில் இந்த துர்க்கை அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நான்கு முப்பது மணிக்கு ராகு காலம் முடிந்த உடனேயே பிரதோஷ நேரம் துவங்கி விடும்.

நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்தாலும் சரி அல்லது வீட்டிலேயே பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சிவன் வழிபாடு செய்தாலும் சரி பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாயை அந்த மஞ்சள் துணியில் வைத்து, 2 வில்வ இலைகளையும் அதில் வைத்து, முடித்தாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். சிவசிவ என்ற மந்திரத்தை 5 நிமிடங்கள் கண்களை மூடி சொல்லுங்கள். (கோவிலுக்கு செல்வதாக இருந்தால் இந்த முடிச்சை கட்டி கையோடு எடுத்துச் சென்று சிவன் கோவிலில் அமர்ந்து பிரார்த்தனை வைக்கலாம்).

- Advertisement -

உங்களுடைய கடன் சுமை தீர வேண்டும், கர்ம வினை குறைய வேண்டும், என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ‘ஓம் அண்ணாமலையானே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு, என்னுடைய கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்னுடைய கடன் பிரச்சனையானது தீர்ந்து விட்டால் கையில் இருக்கும் இந்த முடிச்சைக் கொண்டு வந்து உன்னுடைய உண்டியலில் சேர்த்து விடுகின்றேன். கிரிவலம் வருகின்றேன் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் வைத்த வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறிவிடும்.

கடன் பிரச்சினை தீர்வதற்கு உண்டான அத்தனை முயற்சிகளையும் நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். உங்கள் உடனே அந்த அண்ணாமலை ஈசன் துணையாக வருவான். நிச்சயம் உங்கள் கடன் சுமை குறைய தொடங்கிவிடும். உங்கள் பிரச்சனைக்கு கொஞ்சம் விடிவு காலம் கிடைத்துவிட்டது, மூச்சுவிடவே முடியாமல் கழுத்தை நெறித்த கடன் கொஞ்சம் விலகி, மூச்சு விட நேரம் கிடைத்தது, என்று ஒரு சூழ்நிலை வரும்போது, ஒரு பௌர்ணமி தினத்தில் முடிந்து வைத்திருக்கும் முடிச்சை கொண்டு போய் திருவண்ணாமலை கோவிலில் உண்டியலில் செலுத்தி விட்டு வந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க உதவும் தீபம்

சொன்னபடி கிரிவலமும் செல்லுங்கள். இந்த பிரார்த்தனையை வைத்தால் நிச்சயம் உங்களுடைய கடன் சுமை தீரும் என்பது நம்பிக்கை. அதிலும் நாளை செவ்வாய்க்கிழமை ருண விமோசன பிரதோஷம் அன்று  இந்த அற்புதமான வேண்டுதலை அண்ணாமலையாரிடம் வைத்தீர்கள் என்றால், உங்கள் கடன் பிரச்சனை 100 சதவிகிதம் தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்