நம்முடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்றினால் படாத பாடு பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர். என்ன செய்தாலும் கடன் பிரச்சினை தீரவே இல்லை என்று நினைப்பவர்களும், தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ கூட சிரமப்பட்டு கொண்டு இருப்பவர்களாக இருந்தாலும், கடனை அடைப்பதற்காக கடனுக்கு மேல் கடன் வாங்கிக் கொண்டு இருப்பவர்களாக இருந்தாலும் முழு மனதோடு சிவபெருமானை எந்த முறையில் வழிபட்டால் அவர்களுடைய கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கடன் தீர சிவன் வழிபாடு
அழிக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமானிடம் நம்முடைய கடன் அழிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டால் அவர் அந்த கடனை முற்றிலுமாக நீக்கிவிடுவார் என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு உரிய கிழமையாக திகழக்கூடிய திங்கட்கிழமையை நாம் சோமவாரம் என்று கூறுகிறோம். சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் திங்கட்கிழமையும் விரதம் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட திங்கட்கிழமை அன்று சிவபெருமானை நாம் வழிபடுவதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும் அதிலும் குறிப்பாக இந்த இலையை வைத்து வழிபடும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய பலனே வேறாக தான் இருக்கும். சிவபெருமானை திங்கட்கிழமை அன்று நாம் வழிபட வேண்டும். இவ்வாறு நாம் வழிபடும் பொழுது நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய ஒன்று இருக்கிறது. அதுதான் ஊமத்தம் இலை. எந்த நிறத்தில் இருக்கக்கூடிய மலராக இருந்தாலும் பரவாயில்லை ஊமத்தை இலை கிடைத்தால் போதும்.
அதை 108 என்ற எண்ணிக்கையில் பறித்துக் கொள்ளுங்கள். இதை மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வெளிப்பிரதட்சணம் செய்யும் இடத்தில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் இருப்பார். அந்த லிங்கத்தில் ஏதாவது ஒரு லிங்கத்தை தேர்வு செய்து அந்த லிங்கத்திற்கு இந்த இலைகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இப்படி நாம் 108 முறை இந்த இலைகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்யும் பொழுது இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
மந்நிரம்
ஓம் ருண முக்தேஷ்வர மகாதேவாய நமோ நமஹ
இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதேபோல் பசும்பாலினாலும் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 11 வாரங்கள் நாம் சிவபெருமானுக்கு ஊமத்தை இலையை வைத்து 108 முறை இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.
11 வது வாரம் ஐயரை அழைத்து சிவலிங்கத்திற்கு நம்மால் இயன்ற அளவு அபிஷேக ஆராதனைகளை செய்து ஏதாவது பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த பொருட்களை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே :ஆடி செவ்வாய்க்கிழமை வைத்து வழிபட வேண்டிய பொருட்கள்
கடனால் பாதிக்கப்பட்ட பலரும் இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து வைர அவர்களின் பிரச்சினைகள் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.