- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர வன்னி விநாயகர் பரிகாரம்

கடன் தீர வன்னி விநாயகர் பரிகாரம்

- Advertisement -

இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது நிச்சயம் கடனாக தான் இருக்கும். இதற்கு இன்றைய காலக்கட்டமும் ஒரு முக்கியமான காரணம் தான். எவ்வளவு தான் இரவும் பகலும் பாடுபட்டு உழைத்தாலும் கூட குறிப்பிட்ட அளவிற்கு மேல் நம்முடைய பொருளாதாரத்தை நம்மால் பெருக்கிக்கொள்ள முடிவதில்லை. ஆகையால் ஏதோ ஒரு வகையில் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம். அப்படி வாங்கிய கடனை சமாளிக்க முடியாமல் தினம் தினம் அதற்காக ஓடும் அவல நிலையையும் அடைகிறோம். இப்பேற்பட்ட கடன் பிரச்சனையிலிருந்து தீர ஒரு எளிமையான பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் தீர பரிகாரம்
கடன் தீர செய்ய வேண்டிய இந்த பரிகாரத்திற்கு நாம் வணங்க வேண்டிய கடவுள் முழு முதல் கடவுளான விநாயகர் தான். திரும்பும் திசையெல்லாம் வீதிக்கு வீதி விநாயகர் வீற்றிருந்தாலும் இந்த விநாயகரை வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது எந்த விநாயகர், அது எப்படியான பரிகாரம் என்பதையும் பதிவில் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நாம் வன்னிமர விநாயகரை தான் வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்ததாக இருந்தாலும் விநாயகரை வணங்க அனைத்து நாளும் உகந்ததாகவே சொல்லப்படுகிறது.
இருப்பினும் விநாயகரை வழிபாடு செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாள் என கருதப்படுகிறது. ஆகையால் இந்த பரிகாரத்தையும் ஞாயிற்றுக்கிழமையில் செய்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வன்னி மர விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். விநாயகர் பல இடங்களில் இருந்தாலும் வன்னி மரத்திற்கு கீழ் இருக்கும் விநாயகருக்கு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வேறு எந்த விநாயகருக்கு இந்த பரிகாரத்தை செய்தாலும் அத்தனை உரிய பலனை பெறுவது சிரமம். ஆகையால் வன்னிமர விநாயகர் எங்கிருக்கிறார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு இந்த பரிகாரத்தை துவங்குங்கள்.

- Advertisement -

அப்படி வன்னிமர விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் போது கடையில் மஞ்சளை வாங்கி செல்லுங்கள். இந்த மஞ்சளை நீங்கள் வீட்டிலிருந்து கொண்டு செல்ல வேண்டாம். விநாயகர் ஆலயத்திற்கு சென்று முதலில் நீங்கள் வாங்கி கொண்டு சென்றிருக்கும் மஞ்சளை விநாயகர் மீது தூவுங்கள். அதன் பிறகு விநாயகருக்கு முன் ஒரு தீபமோ அல்லது கற்பூரம் ஏற்றி உங்களது கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பரிகாரம்

சிறிது நேரம் விநாயகர் முன் அமர்ந்து ஓம் விக்னேசாய நமக என்ற இந்த மந்திரத்தையும் மனதார பாராயணம் செய்யுங்கள் . அந்த நேரத்தில் உங்களுடைய கடனை முழுவதுமாக நீங்கள் அடைத்து விடுவது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வன்னி மரத்துடன் சேர்த்து விநாயகரை சுற்றி வந்து வணங்கிவிட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள். இதே போல ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கடன் பிரச்சனை கூட விரைவில் அடைவதற்கான வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

சற்று முன்