கடன் தீர தேங்காய் பரிகாரம்

bhairavar thengai pariharam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த பணம் அனைவரிடமும் தேவையான அளவு இருப்பதில்லை. ஒரு சிலரிடம் அதிகமான அளவும் ஒரு சிலரிடம் தேவையை நிறைவு செய்து கொள்ள முடியாத அளவு குறைவாகவும் இருக்கும். இப்படி தேவையை நிறைவு செய்ய முடியாமல் இருக்கும் நபர்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக அளவு பணம் இருக்கும் நபரிடம் இருந்து கடனை வாங்குவார்கள். அந்த கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ஒரு சிலரால் தங்களுடைய கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் எந்த முறையில் தேங்காயை வைத்து பரிகாரம் செய்தால் அவர்களுடைய கடனை அடைக்க முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவரிடம் நம் கடனாக பணத்தை வாங்கி விட்டால் எப்படியாவது அந்த கடனை நாம் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் நம் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நம்மால் இயன்ற அளவு கடன் வாங்காமல் வாழ்வதற்குரிய வழியை வகுத்துக் கொள்ள வேண்டும். சரி கடன் வாங்கி விட்டோம் அதை அடைக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம் என்ன செய்யலாம் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பிக்க வேண்டும். இதற்கு ஒரு தேங்காய் வேண்டும். இந்த தேங்காய் மேல் இருக்கும் நாரை சுத்தமாக எடுத்துவிட்டு வழுவழுப்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த தேங்காய் முழுவதும் மஞ்சளை தடவ வேண்டும். அடுத்ததாக இந்த தேங்காயை சரிசமமாக இரண்டாக உடைத்து அதற்குள் இருக்கும் தேங்காய் பருப்பை எடுத்து வெல்லத்துடன் சேர்த்து பிறருக்கு தானமாக வழங்கி விட வேண்டும். இப்பொழுது நம்மிடம் தேங்காய் ஓடு மட்டும்தான் இருக்கும்.

இந்த தேங்காய் ஓட்டின் ஒரு பக்கம் மட்டும் விபூதியை பட்டையாக பூசி சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறையில் ஒரு மரப்பலகையை போட்டு அதற்கு மேல் கருப்பு நிற துணியை விரித்து அந்த துணிக்கு மேல் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் ஓடுகள் இரண்டையும் வைக்க வேண்டும். இவை தெற்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.

- Advertisement -

மறுநாள் புதன்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 5:30 மணிக்குள் எழுந்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டுவிட்டு கணவன் மனைவியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு ரூபாய் என்ற வீதம் ஒவ்வொரு தேங்காய் ஓட்டிலும் போட வேண்டும். கணவன் ஒரு ஓட்டில் போட்டால் மனைவி மற்றொரு ரோட்டில் போட வேண்டும். ஒரு ரூபாய் தான் போட வேண்டும். இப்படி தொடர்ந்து 27 நாட்கள் செய்ய வேண்டும். ஒருவர் மட்டும்தான் இருக்கிறோம் என்றால் இரண்டு ஓடுகளிலும் அந்த ஒரு நபரே ஒரு ரூபாய் நாணயங்களை போடலாம்.

27 நாட்கள் நிறைவு செய்த பிறகு வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி அன்று இந்த ஒரு ரூபாய் நாணயங்களை கருப்பு நிற துணியில் மூட்டையாக கட்டி அருகில் இருக்கக்கூடிய கால பைரவர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு கால பைரவருக்கு தங்கள் பெயரிலும், தங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயரிலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு காலபைரவரிடம் மனதார வேண்டிக் கொண்டு இந்த ஒரு ரூபாய் நாணயங்களை அவருடைய உண்டியலில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

கருப்புத் துணியையும் தேங்காய் ஓட்டையும் கால்படாத இடத்தில் கோவிலிலேயே போட்டு விட வேண்டும். இப்படி பைரவரை வழிபாடு செய்த பிறகு நேராக வீட்டிற்கு வர வேண்டும். அவ்வாறு வரும் வழியில் வலது கால் செருப்பை ஒரு இடத்தில் விட்டுவிட்டு சிறிது தூரம் தள்ளி வந்து இடது கால் செருப்பையும் விட்டுவிட்டு வெறும் காலுடன் வீட்டிற்கு வரவேண்டும். வீட்டிற்கு வந்து கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு வீட்டிற்குள் வந்து வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நோயற்ற வாழ்வை அருளும் சிவபெருமான்

இந்த முறையில் பரிகாரம் செய்ய நம்முடைய கடன் தொகை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அந்த தொகை படிப்படியாக குறைந்து கடனே இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ கால பைரவர் அருள் புரிவார்.

- Advertisement -