நோயற்ற வாழ்வை அருளும் சிவபெருமான்

sivan
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எவ்வளவுதான் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் அவர்களால் அந்த பணத்தை அனுபவிக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட பணத்தைவிட முக்கியத்துவம் வாய்ந்தது தான் ஆரோக்கியம். இந்த ஆரோக்கியத்தை பெறுவதற்கு சிவபெருமான எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நோயற்ற வாழ்வை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிணிகள் ஆகிய நோய்களை நீக்குவதற்கு சிவபெருமானின் அருள் கண்டிப்பான முறையில் தேவை என்றும் பலரும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட சிவபெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக வாங்கிக் கொடுக்கும் பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த பலன்களை வைத்து நம்முடைய தேவை என்னவோ அந்த தேவைக்கேற்றவாறு அபிஷேக பொருட்களை வாங்கி தர வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு சில பொருட்களை ஒன்றாக சேர்த்து நாம் அபிஷேகம் செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும்.

இந்த வழிபாட்டை திங்கட்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு உகந்த கிழமையான இந்த திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். குறிப்பாக ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் செல்ல வேண்டும். இந்த நேரத்தில் சிவபெருமானுக்கு தயிர், இளநீர், தேன் இவை மூன்றையும் கலந்து அபிஷேகம் செய்ய தர வேண்டும். இயன்றவர்கள் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிவபெருமானுக்கு தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம்.

- Advertisement -

பிறகு அவருக்கு வெள்ளை நிற பூக்களால் அலங்காரம் செய்து “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை வெள்ளை நிற பூக்களையும் வில்வ இலையும் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து தங்களுடைய நோய்கள் முழுமையாக நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அங்கு இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு தங்கள் கைகளால் விபூதியை தானமாக வழங்க வேண்டும்.

இந்த முறையில் தொடர்ந்து 14 திங்கட்கிழமைகள் சிவபெருமானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். கடைசி வாரம் சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக தயிர் சாதத்தை செய்து தர வேண்டும். பிறகு அந்த நெய்வேத்தியத்தை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விட வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து யார் ஒருவர் அபிஷேக ஆராதனை செய்து சிவபெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கும் என்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கான துர்க்கை அம்மன் வழிபாடு

சிவபெருமானிடம் முழு நம்பிக்கை வைத்து இந்த அபிஷேகத்தை செய்து வேண்டுதலை வைப்பவர்கள் வாழ்க்கையானது நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையாக அமையும்.

- Advertisement -