எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்றால் விநாயகர் வழிபாட்டை செய்ய வேண்டும். விநாயகரது வழிபாடு நம்முடைய கஷ்டங்களுக்கு உடனடி தீர்வை கொடுக்கும் என்பது முன்னோர்களுடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கை நமக்கும் இருக்கிறது. விக்ணங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு நம்முடைய கடன் சுமையையும் விரைவில் தீர்க்கும். அதற்கு உண்டான அதி சக்தி வாய்ந்த ஒரு தாந்திரீக பரிகாரமும் இருக்கிறது. இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் உங்கள் கடன் சுமையானது குறைந்து பண வரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த பரிகாரத்தை செய்ய இரண்டே பொருட்கள் தேவை. அந்த பொருட்களை நெருப்பில் போட்டு எரித்தாலே போதும். உங்கள் கஷ்டங்கள் அன்றோடு தீர்ந்துவிடும். அந்த பொருட்கள் என்னென்ன செய்ய வேண்டிய பரிகார முறைகளை எப்படி செய்வது எந்த நேரத்தில் செய்வது? ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பணக்கஷ்டம் தீர்க்கும் விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு செய்ய நேரமும் காலமும் நமக்கு கிடையாது. எப்போது கஷ்டம் உங்களுக்கு வருகிறதோ, அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். வீட்டிலேயே செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு வசம்பு சின்ன துண்டு ஒன்று தேவை. பச்சை கற்பூரம் ஒரு கட்டி தேவை. பூஜை அறையில் தூபக்கால் வைத்திருப்பீர்கள். அதை எடுத்துக்கோங்க. அதில் பச்சை கற்பூரத்தையும் வசம்பையும் போட்டு விடுங்கள். இதை எரிப்பதற்கு கூடுதலாக நெய் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பிள்ளையாரப்பா என்னுடைய கடன் சுமை, இதோடு என்னை விட்டு விலக வேண்டும். இந்த பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்றி விட்டு விடு, விநாயகா என்று வேண்டிக் கொள்ளுங்கள். தண்ணீர் குடிக்க கூட முடியவில்லை, நிம்மதியாக தூங்க முடியவில்லை, மூச்சு விட முடியவில்லை, இந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிட்டால் தினமும் உன்னை வழிபாடு செய்கின்றேன் என்று பிள்ளையாரை ஒரு நம்பிக்கை யோடு வேண்டிக் கொள்ளுங்கள்.
எடுத்து வைத்திருக்கும் தூப காலில், பச்சை கற்பூரத்தில் நெருப்பு பொறுத்து விடுங்கள். வசம்பும் அதோடு சேர்ந்து எரியும். வசம்பு நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும் தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பச்சை கற்பூரம், ஒரு சொட்டு நெய் விட்டு இந்த ஆரத்தியை, விநாயகருக்கு காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே இருக்கும் விநாயகர் படத்திற்கு இதை செய்யுங்கள்.
பச்சை கற்பூரமும் அந்த வசமும் நன்றாக எரிந்து சாம்பல் ஆனவுடன், அதை எடுத்து ஒரு சின்ன டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த திலகத்தை இரும்பு டப்பாவில் போடக்கூடாது. பிளாஸ்டிக் டப்பா எவர்சில்வர் டப்பா, வெள்ளி கிண்ணம் எதில் போட்டாலும் சரி. இந்த விழுதில் தினமும் லேசாக தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொருட்களை எல்லாம் எரித்த பிறகு கருப்பு நிற சாம்பல் மட்டும் தான் மிஞ்சும் அந்த கருப்பு நிற சாம்பல் தான் நீங்கள் வைத்துக் கொள்ளப் போகும் வசிய திலகம். இதை தினமும் நெற்றியில் வைத்து வந்தாலே உங்கள் அன்றாட வேலையில் தடை இருக்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. காரிய தடை வராது. வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு சம்பாதித்து விடுவீர்கள். சேமிப்பை அதிகரிக்கும் அளவுக்கு வருமானம் பெருகும்.
இதையும் படிக்கலாமே: சியாமளா நவராத்திரி வழிபாடு
இதை எல்லாம் அந்த ஒரு திலகம் செய்யும். நம்பிக்கை இருக்குதா. நம்பிக்கை இருந்தால் மட்டும் செய்து பாருங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் இன்றைக்கு அமாவாசை. இன்று மாலை இந்த திலகத்தை தயார் செய்து டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினமும் பயன்படுத்தி பாருங்கள். வாழ்க்கையில் எங்கோ சென்று விடுவீர்கள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் பதிவு சமர்ப்பணம்.