கரிநாள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவும் நம்மை விட்டு விலகிச் செல்லக்கூடிய அனைத்து விதமான செயல்களிலும் அன்றைய நாளில் நாம் ஈடுபடும் பொழுது அந்த செயல்கள் நம்மை விட்டு நிரந்தரமாக நீங்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் மருத்துவமனைக்கு செல்வது, கடன் தொகையை கட்டுவது, கண் திருஷ்டி நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் கரிநாளில் எந்தவித சுப காரியங்களையும் செய்யக்கூடாது என்று கூறி இருப்பார்கள். அப்படிப்பட்ட நாளில் கடன் பிரச்சினை தீர்வதற்காக செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புதன்கிழமை கரிநாள் பரிகாரம்
பொதுவாகவே கரிநாள் அன்று நாம் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்வதன் மூலம் பெருமாளின் அருளால் நம் வாழ்வில் இருந்து நீங்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் தீர்க்க முடியாத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் பெருமாளை நினைத்து ஒரு சில வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் செய்யும்பொழுது அதன் பலனால் விரைவிலேயே கடன் பிரச்சனை தீர்வதற்குரிய பணவரவு உண்டாகும்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய கடைசி புதன்கிழமை அக்டோபர் மாதம் 15ஆம் தேதி கரிநாள் வருகிறது. அன்றைய நாளில் குளிகை நேரம் என்பது காலை 10:30 மணியில் இருந்து 12 மணிக்குள் வருகிறது. இந்த நேரத்தில் தான் வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு ஒரு பெரிய நெல்லிக்காய் ஒன்று வேண்டும். அடுத்ததாக ஒரு தட்டை எடுத்து அந்தத் தட்டில் கோதுமையை பரப்பி அந்த கோதுமைக்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபத்திற்கு முன்பாக இந்த நெல்லிக்கனியை வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக நாம் எத்தனை பேரிடம் கடன் வாங்கி இருக்கிறோமோ, அத்தனை எண்ணிக்கையில் பிரியாணி இலை மற்றும் அத்தனை பேருக்கும் தருவதற்காக எடுத்து வைக்க வேண்டிய பணம் சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அதேபோல அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு கவரையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது தீபத்திற்கு முன்பாக ஒரு பிரியாணி எடுத்து யாரிடம் கடன் வாங்கி இருந்தமோ அவர்களின் பெயரை எழுதி அதனுடன் எவ்வளவு தொகை கொடுக்கப் போகிறோமோ அதையும் வைத்து இவை இரண்டையும் கைகளுக்குள் வைத்து கைகளை கூப்பி “ஓம் சூரியநாராயணாய நமோ நம” என்னும் மந்திரத்தை 27 முறையும் “ஓம் ரிங் வசி வசி” என்னும் மந்திரத்தை 27 முறையும் கூறி அந்த பிரியாணி இலையை எரித்து விட வேண்டும்.
அந்த பணத்தை தனியாக ஒரு கவரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கவரில் அவரின் பெயரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி எத்தனை நபர்களிடம் பணம் வாங்கி இருக்கிறோமோ அது நகை கடனாக இருந்தாலும், வங்கி கடனாக இருந்தாலும், தனிநபர் கடனாக இருந்தாலும் அவர்களின் பெயரை எழுதி, பிரியாணி இலையுடன் பணத்தை சேர்த்து வைத்து இந்த இரண்டு மந்திரங்களையும் 27 முறை கூறி பிரியாணி இலையை எரித்து பணத்தை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுது அந்த கடனுக்குரிய வட்டியை செலுத்துகிறீர்களோ அப்பொழுது இந்த பணத்தையும் சேர்த்து கட்ட வேண்டும்.
இப்படி அனைத்து கடனுக்குரிய வழிபாட்டையும் செய்து முடித்த பிறகு நாம் ஏற்றிய அந்த கோதுமை தீபம் குறைந்தது 45 நிமிடமாவது எரிய வேண்டும். 45 நிமிடம் நிறைவடைந்த பிறகு தீபத்தை குளிர வைத்துவிட்டு தீபத்திற்கு முன்பாக வைத்திருக்கக் கூடிய நெல்லிக்கனியை நாமே சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். கோதுமையை எடுத்து கிழக்கு திசை பார்த்தவாறு பறவைகளுக்கு தூவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே அந்த கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழிகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கேட்டதை கொடுக்கும் ஏலக்காய் பரிகாரம்
கடன் பிரச்சினை தீர்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நபர்களும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய இந்த கரி நாளை முழுமையாக பயன்படுத்தி விரைவிலேயே கடன் பிரச்சினைகள் இருந்து வெளியே வரலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.