கோடி கடன்கள் இருந்தாலும் காணாமல் போக வீட்டில் இந்த பொருள் இருந்தால் இப்படித்தான் வழிப்படனும் தெரியுமா? கடன் தீர்க்கும் எளிமையான சங்கு பூஜை!

sangu-sad-cash
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் வலம்புரி சங்கு பூஜை அறையில் வைத்திருப்பது மிகுந்த விசேஷத்தை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது, ஆனால் சங்கு வைத்திருப்பவர்கள் அதற்கு முறையாக பூஜைகளும் தினமும் செய்ய தவறக் கூடாது என்பதால் அதை தவிர்க்கின்றனர். ஆனால் சங்கு பூஜை எளிமையாக செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம் என்கிறது சாஸ்திரங்கள்! வலம்புரி சங்கு பூஜை வீட்டில் எளிமையாக செய்யும் முறையும், அதனால் கிடைக்கக்கூடிய அதிசக்தி வாய்ந்த பலன்களும் என்னென்ன? என்பதைத்தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

வலம்புரி சங்கு வீட்டில் இருந்தால் மகாலட்சுமி நிரந்தரமாக அந்த வீட்டில் வாசம் செய்வார். சங்கு பூஜை முறையாக செய்து வருபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் கூட அகலும் என்கிறது ஆன்மீகம். கடற்கரையை சுற்றி இருக்கும் கடைகளிலும், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களிலும் வலம்புரி சங்கு கிடைக்கப் பெறுகிறது. இந்த வலம்புரி சங்கை வீட்டில் கொண்டு வந்து சிறிய தாம்பூல தட்டின் மீது பச்சரிசியை பரப்பி அதன் மீது அமர வைக்க வேண்டும். தினந்தோறும் அதற்கு சுத்தமான தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து அலம்ப வேண்டும்.

- Advertisement -

பின்னர் சந்தன, குங்குமம் இட்டு அதனுடைய வாய்ப்பகுதி நம் பக்கமாக இருக்குமாறு குபேரன் படத்தின் முன்பு வைக்க வேண்டும். குபேரர் இல்லை என்றால் மகாலட்சுமியின் படத்தின் முன்பும் வைக்கலாம். உள்ளே சிறிதளவு சுத்த மஞ்சள் தூளை தூவி தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும் பொழுது “சுவாகதம் சுவாகதம்.. ஸ்ரீ லட்சுமி குபேராய நம” என்கிற இந்த மந்திரத்தை உச்சரித்தால் குபேரன் இதில் ஆவாகனம் ஆவதாக ஐதீகம் உண்டு! அதன் பிறகு சிவப்பு நிற மலர்களால் சங்கிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சிக்கும் பொழுது “ஓம் நவநிதி தேவதாயை நம: சகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்” என்று உச்சரிக்க வேண்டும்.

நெய் விளக்கு ஒன்று ஏற்றி அதில் மூன்று திரிகளை இட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். துளசி, செவ்வரளி, சிகப்பு நிற மலர்கள், மல்லிகை பூக்கள் போன்றவற்றை வைத்து அதில் பன்னீரை தெளித்து சங்கை சுற்றிலும் அலங்கரிக்க வேண்டும். இப்படி அலங்கரிக்கும் பொழுது குபேர காயத்ரி மந்திரம் சொல்லுவது நல்லது. பின்னர் குபேரனின் 16 நாமாவளிகளையும் உச்சரித்தல் வேண்டும்.

- Advertisement -

பின் தூப, தீப, ஆராதனை காண்பித்து “ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகித குபேராய நம: க்ரஹே அமுதம் நித்தியானந்த வாஸம் குருகுரு…” என்கிற இந்த மந்திரத்தை உச்சரித்து சங்கின் முன்பு மண்டியிட்டு பிரதட்சணம் செய்து மலர்களை தூவ வேண்டும். இதற்கு நைவேத்தியம் படைக்க அவல் பாயாசம், பால் போன்றவற்றை வைக்கலாம். ஏற்றி வைத்த தீபத்தை கொண்டே ஆராதிக்க வேண்டும். கற்பூரம் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. பூஜை நிறைவு செய்ய சுமங்கலி பெண்கள் யாரேனும் ஒருவருக்கு தாம்பூலம் கொடுத்து மஞ்சள் வைத்து கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
நாளை இந்த ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள் போதும். நீங்கள் தவற விட்ட அனைத்துமே உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

இப்படி 48 நாட்கள் செய்து வர குடும்பத்தில் வருமானம் அதிகரிக்குமாம். தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் இந்த பூஜையை மேற்கொண்டு வந்தால் தீராத கடன்கள் தீரும். கோடி கோடியாய் கடன்கள் இருந்தாலும் நொடியில் காணாமல் போகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் வியாழன் கிழமையில் குபேரனுக்கு உகந்த நேரத்தில் அதாவது மாலை 5 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில் இந்த பூஜையை குபேர அர்ச்சனையுடன் செய்து வந்தால் செல்வம் சேரும், பொருட் சேர்க்கை உண்டாகும். 8 பவுர்ணமிகள் கூட இந்த பூஜையை செய்து பெரும் பலன் அடையலாம்.

- Advertisement -