நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் யாரிடம் இருந்தாவது ஏதாவது ஒரு பொருளை கடனாக வாங்கி இருப்போம். அந்த கடன் என்பது நம்முடைய கர்மவினையின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது. எத்தனையோ பேர் அதிக அளவில் கை நிறைய சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடம் இருந்தாவது கடன் வாங்கி இருப்பார்கள். இந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்கு நம்முடைய ஆன்மீகத்தில் பல சூட்சமமான வழிமுறைகள் இருக்கின்றன. கர்மவினையால் ஏற்பட்ட கடன் பிரச்சினை தீருவதற்கு ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தை நாம் பயன்படுத்திக் கொண்டோம் என்றால் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சினையாக இருந்தாலும் அவை தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தை மாதத்தில் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த நாள் அன்று எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தை மாத மைத்ரேய முகூர்த்தம்
கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றால் அந்த கடனை அடைப்பதற்குரிய பணவரவு என்பது ஏற்பட வேண்டும். இந்த பணவரவை அதிகரிப்பதற்கும் பணம் அதிகளவில் வந்தாலும் அந்த பணத்தை வைத்து கடனை அடைக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யக்கூடிய ஒரு சூட்சமமான வழிபாட்டு முறைதான் மைத்ரேய முகூர்த்தம் வரக்கூடிய நேரத்தில் செய்யக்கூடிய வழிபாட்டு முறை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான சூட்சும வழிபாடுகள் இருக்கும். அந்த வகையில் தை மாதத்தில் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த நேரத்தில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தை மாதம் 12ஆம் தேதி ஜனவரி மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்றுதான் இந்த மைத்ரேய முகூர்த்தம் என்பது வருகிறது. இந்த முகூர்த்தம் வரக்கூடிய நேரம் ஆனது மதியம் 1:38 மணியிலிருந்து 3:44 மணி வரை இருக்கிறது. பொதுவாக சனிக்கிழமை எமகண்டம் என்பது 1:30 மணியிலிருந்து 3:00 மணி வரைக்கும் இருக்கும். எமகண்ட நேரத்தில் எந்த ஒரு செயலை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த செயல் வெற்றியடையாது என்று நம்மில் பலருக்கும் தெரியும். அதனால் இந்த வழிபாட்டை எமகண்டம் முடிந்த பிறகு அதாவது 3:01 லிருந்து 3:44குள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தாம்பாள தட்டில் வாசனை நிறைந்த மலர்களை பரப்ப வேண்டும். பிறகு நாம் எத்தனை பேரிடம் இருந்து கடன் வாங்கி இருக்கிறோமோ அத்தனை பேருக்கும் தனித்தனியாக நூறு ரூபாய் நோட்டை அந்த வாசனை மலர்களின் மேல் வைக்க வேண்டும். ஐந்து பேரிடம் கடன் வாங்கி இருந்தால் ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை தனித்தனியாக வைக்க வேண்டும். அந்த ஒவ்வொரு நூறு ரூபாய் நோட்டிற்கு மேல் 3 ஏலக்காய், ஒரு ஒரு ரூபாய் நாணயம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த தாம்பாளத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு வாசனை நிறைந்த மலர்களை பயன்படுத்தி பைரவரின் இந்த ஒரு மந்திரத்தை 27 முறை உச்சரித்து தாம்பாலத்தில் வைத்திருக்கும் பணத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு ஒவ்வொரு நூறு ரூபாய் நோட்டையும் அந்த ஒரு ரூபாய் நாணயம் மற்றும் 3 ஏலக்காயுடன் சேர்த்து வைத்து தனித்தனியாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுது நீங்கள் சம்மந்தப்பட்ட நபருக்கு கடனை திருப்பி செலுத்தப் போகிறீர்களோ அல்லது கடன் தொகைக்கான வட்டியை கட்டப் போகிறீர்களோ அப்பொழுது அந்த நூறு ரூபாய் நோட்டை சேர்த்து வைத்து கொடுக்க வேண்டும். இந்த முறையில் செய்வதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும்.
மந்திரம்
“ஓம் ஸ்வர்ண ஆகர்சன பைரவாய போற்றி”
இதையும் படிக்கலாமே:கடன் தேய்ந்து போக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் உழைத்த பணத்தை வைத்து கடனை அடைக்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இந்த மைத்ரேய முகூர்த்தத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் விரைவிலயே அவர்களுடைய கடன் பிரச்சினைகள் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.