- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றிலையில் இதை எழுதி வைத்தால் போதும். கழுத்தை நெறிக்கும் கடனைக் கூட சீக்கிரமே திருப்பிக் கொடுத்துவிடலாம்.

வெற்றிலையில் இதை எழுதி வைத்தால் போதும். கழுத்தை நெறிக்கும் கடனைக் கூட சீக்கிரமே திருப்பிக் கொடுத்துவிடலாம்.

- Advertisement -

வட்டிக்கு கடன் வாங்குவது என்பது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் போய் விழுவதற்கு சமம். யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக வட்டிக்கு கடன் வாங்கி விடுகின்றோம். திரும்பி கட்ட முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறோம். இதற்கெல்லாம் காரணம் நம்முடைய தலைவலியாக இருந்தாலும், நாமும் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. அதிக வட்டிக்கு கடன் வாங்குவது, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி போன்ற நம்முடைய தகுதிக்கு மேலே கடனை வாங்கி செலவு செய்யாமல் இருந்தால் வாழ்வில் நிம்மதியாக இருக்கலாம்.

kadan

கடன் வாங்காமல், வரக்கூடிய வருமானத்தில் வாழ்க்கையை நடத்திச் சென்றால், காசு இல்லை என்ற கஷ்டம் மட்டும் தான் நமக்கு இருக்கும். எந்த விதத்திலும் நிம்மதி கெட்டு போகாது. ஆனால், கையை நீட்டி பணத்தை வாங்கி விட்டால், பணம் நம் கைக்கு வந்து விடும். நிம்மதி நம்மை விட்டு எங்கோ சென்று விடும். முதலில் இதை மனதில் நிறுத்திக் கொண்டு இந்த பதிவிற்குள் செல்வோம். சரி, கைநீட்டி கடனை வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதை சரிசெய்ய ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரம் உங்களுக்காக.

- Advertisement -

மிக மிக சுலபமான எளிமையான பரிகாரம். இந்த பரிகார பூஜைக்கு தேவையான பொருட்கள். அரச இலை – 1, மஞ்சள் பிள்ளையார், வெட்டிவேர், நெல்மணி, அருகம்புல், வெற்றிலை. முதலில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து, அரச இலையில் வைத்து, மஞ்சள் பிள்ளையாருக்கு குங்கும பொட்டு வைத்து, பூ வைத்து, பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த மஞ்சள் பிள்ளையாருக்கு முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

poovarasan-leaf

வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேனாவை எடுத்து அந்த வெற்றிலையில் உங்களது கடன் தொகையை எழுதி, அந்த கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று எழுதி விடுங்கள். எடுத்துக்காட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இருந்தால் ‘1,00,000 ரூ கடன் பிரச்சனை தீர வேண்டும்’ என்று எழுதி இந்த வெற்றிலையின் மேல் ஒரு துண்டு வெட்டிவேர், ஒரு ஸ்பூன் நெல்மணி, இரண்டு அருகம்புல், இந்த பொருட்களை வைத்து, இந்த வெற்றிலையை அப்படியே அரச இலையின் மேல் பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாரின் முன்பு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இறுதியாக விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து உங்களுடைய வேண்டுதலை மனதார வைத்து, கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து விட்டால் பழைய பொருட்களை எல்லாம் அகற்றி விட்டு, அடுத்த வாரம் மீண்டும் புதியதாக எல்லா பொருட்களையும் கொண்டுவந்து வைத்து தான் பூஜையில் வழிபாடு செய்யவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தொடர்ந்து 5 வாரங்கள் இந்த பூஜையை வீட்டில் செய்து வர நிச்சயமாக உங்கள் கடன் பிரச்சினையை அடைக்க ஏதாவது ஒரு வழியை அந்த விநாயகர் காண்பித்து கொடுப்பார்.

nel1

இதை செய்தால் கடன் பாரம் குறையுமா? கேள்விக்குறியே வேண்டாம். நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய இந்த விநாயகர் வழிபாடு நமக்கு அரச வாழ்வை கொடுக்கும். அரச இலையை வைத்து செய்யக்கூடிய எந்த ஒரு வேண்டுதலும் எந்த ஒரு பரிகாரமும் நல்ல பலனை கொடுக்கும் என்பது தான் நம்பிக்கை. இதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய பிரச்சனையை வெற்றிலையில் எழுதி வைத்திருக்கிறீர்கள். வெற்றிலையில் எழுதிய காரியம் நிச்சயம் வெற்றிதான். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் கைமேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்