இந்த தவறை உங்கள் வீட்டில் செய்தால் தீராத கடன் பாரம் உங்கள் தலை மேல் எப்போதும் இருக்கத்தான் செய்யும். கடன் பாரத்தைக் குறைக்கும் அட்சத்தை பரிகாரம் உங்களுக்காக.

atchathai
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய பாதி வாழ்க்கை கடனில் தான் மூழ்கி இருக்கின்றது. வரக்கூடிய வருமானத்தை முழுமையாக கடனுக்காக கட்டிவிட்டு, அன்றாடம் செலவுக்கு கையில் காசில்லாமல் திண்டாடி வருகின்றோம். கையில் நிறைய பணம் வைத்திருந்தாலும் சில பொருட்களை நாம் முழுமையாக காசு கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இ.எம்.ஐ செலுத்தினால் அதன் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள். எதையும் நம்மால் குறை சொல்ல முடியவில்லை. ஆனால் கடன் ஓரளவிற்கு நம்முடைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கும் வரை பிரச்சனை இல்லை. கட்டுப்பாட்டை மீறி, கையை மீறி கடன் வாங்கி விட்டால் நாம் அதில் மூழ்கி விடுவோம். அளவோடு மிக மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் கடன் வாங்குங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

முதலில் நாம் கடனாளி ஆவதற்கு காரணம், அடுத்தவர்களை பார்த்து நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான். அடுத்தவர்களை பார்த்து அடுத்தவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை நாம் வாங்க வேண்டும், அவர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்று எப்போதுமே நாம் நினைக்கக் கூடாது. அடுத்தவர்களைப் பார்த்து வாழாதீர்கள். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற, உங்கள் வசதிக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள். முதலில் இந்தப் பாடத்தை நீங்கள் படித்தால் போதும். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து விடலாம்.

- Advertisement -

இரண்டாவதாக உங்கள் வீட்டில் ஈரத் துணிகளை எக்காரணத்தைக் கொண்டும் கதவின் மேல் போடக்கூடாது. நிறைய பேர் குளித்துவிட்டு உடம்பு துடைக்கும் ஈரத் துண்டை, அப்படியே கதவின் மேல் போட்டு விடுவார்கள். சிலபேர் ஜன்னல் கதவின் மேல் மாட்டி வைப்பார்கள். இதை செய்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் கடன் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும். துவைத்த ஈரத் துணியை உலர வைக்க வேண்டும் என்பதற்காக நிறைய பேர் கதவின் மேலும் ஜன்னலின் மேலும் போட்டு தொங்க விடுவார்கள். மழைக் காலத்தில்கூட ஒரு போதும் இந்த தவறை செய்து விடக்கூடாது.

cloth-drying

உங்கள் வீட்டின் கதவு சாய்ந்து விட்டால், உங்களுடைய வீட்டின் நிலைமையும் சாய்ந்து போகும் என்பதை இதற்கு உண்டான அர்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் தான் நிறைய பேர் வீடுகளில் துவைத்த துணியை வீட்டிற்குள்ளேயே காய வைக்கும் பழக்கம் உள்ளது. வீட்டிற்குள் துணி ஆங்காங்கே தொங்கிக் கொண்டே இருக்கக்கூடாது. துணி எப்படி உங்களுடைய வீட்டில் ஊசலாடிக் கொண்டு இருக்கின்றதோ, அதே போல் உங்களுடைய வாழ்க்கையும் கடன் பிரச்சனையில் சிக்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. துணி விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள்.

- Advertisement -

இந்த கடனில் இருந்து தப்பிக்க அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம். ஒரு சிறிய மண் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது பெரிய மண் அகல் விளக்காக இருந்தாலும் சரி. அது நிரம்ப அட்சதையை வைத்துவிடுங்கள். 1 ரூபாய் நாணயத்தை அட்சதையில் புதைத்து வைத்தாலே போதும். வீட்டில் வரக்கூடிய கடன் தொல்லை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அச்சத்தையும் நாணயமும் சேர்ந்த இந்த மண் பாண்டத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

atchathai

பாத்திரத்தில் இருக்கும் அரிசியின் நிறம் மாறி விட்டாலும், வண்டுபிடித்து விட்டாலோ, எடுத்து அதை காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டுவிட்டு, மீண்டும் புதிய அட்சதையை வைக்கவேண்டும். அதே நாணயங்களை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அச்சத்தை என்பது பச்சரிசியில் மஞ்சளை தூவி கொஞ்சமாக நெய் விட்டு கலந்து தயார் செய்து கொள்ள வேண்டும். மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி வந்தாலே வீட்டில் வரக்கூடிய கடன் பிரச்சினை படிப்படியாக குறைவதை உணர முடியும்.

- Advertisement -