நீங்கள் வாங்கிய கடனுக்கு இதுநாள் வரை, வட்டி மட்டும் தான் கட்டிட்டிருக்கீங்களா? சீக்கிரமே, அசல் பணத்தை திருப்பித் தர 8 வாரம் இந்த பரிகாரத்தை பண்ணுங்க!

hanuman-compressed

இன்றைய கால சூழ்நிலையில் யாராலும் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாது. அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு, கடனாளிகளாக தான் இருக்கிறார்கள். ஒரு சில பேர் கடனை வாங்கிய உடன் திருப்பி தந்து விடுவார்கள். ஒரு சிலரால் வாங்கிய கடனை திருப்பி தரவே முடியாது. அவர் வாங்கிய பணத்திற்கு மேலாகவே, வட்டி பணத்தை கட்டி வந்திருப்பார். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால், அப்பா வாங்கிய கடனுக்கு, மகன் வட்டியை கட்டும் நிலைமை கூட இருக்கின்றது.

cash

நீங்களும் கடன் வாங்கிய பணத்திற்கு இதுநாள்வரை வட்டி தொகையை மட்டும்தான் கொடுத்து வரீங்க என்றால், அசல் தொகையை விரைவாக கொடுக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கூடவே, நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்து அது வராமல் இருந்தால், அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களுடைய வீட்டில் தினம்தோறும், காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, அனுமனை மனதார நினைத்து, உங்கள் வீட்டில் ஹனுமனின் புகைப்படம் இருந்தால், அந்தப் புகைப்படத்திற்கு தொடர்ந்து 11 நாட்கள் வெற்றிலை மாலை அணிவித்து, ஒரு தீபமும் ஏற்றி வைத்து, உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம். இதோடு சேர்த்து அனுமனின் புகைப்படத்தில், ஹனுமனின் ‘வால்’  தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஹனுமன் படம் இல்லை என்றால் ஹனுமனை ஜோதி வடிவில் நினைத்துக்கொண்டு மனதார வேண்டிக் கொண்டால் மட்டும் போதும்.

Hanuman

இதோடு, வாரம் தோறும் 8 சனிக்கிழமை தொடர்ந்து ஹனுமன் கோவிலுக்கு செல்ல வேண்டும். 8 வெற்றிலையை வாங்கிச் செல்லுங்கள். அனுமனின் வால் பக்கமாக சென்று, 8 வெற்றிலையையும் வைத்துவிட்டு, கடனை தீர்க்க வேண்டும் என்று, இரு கைகளையும் கூப்பி, மனதார கும்பிட்டு திரும்பி வந்துவிடுங்கள். 8 வெற்றிலைகளும் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல், காம்புப் பகுதியும் நுனிப்பகுதியும் சீராக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

- Advertisement -

நீங்கள் ஹனுமனிடம் உங்களது கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? அந்த கடன் பிரச்சினை தீர்ந்தவுடன், நங்கநல்லூரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒருமுறை அபிஷேகம் செய்து வைப்பதாகவும் வேண்டிக் கொண்டாள், மிகவும் நல்லது. நீங்கள் வசிக்கும் ஊர் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை! கடன் பிரச்சனை இருப்பவர்கள் முடிந்தால் ஒருமுறை நங்கநல்லூர் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வாருங்கள்! எப்படிப்பட்ட தீராத பிரச்சனையும், ஒருமுறை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வந்தால் தீரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

hanuman

சரி. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து இருக்கிறீர்கள்! அதை வசூல் செய்ய முடியவில்லை. வட்டியும் வரவில்லை. அசலும் வரவில்லை. என்ன செய்வது? உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலை ஈஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும். தொடர்ந்து ஐந்து பவுர்ணமிக்கு கிரிவலம் வருவது மிகவும் நல்ல பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது.

girivalam

இதோடு உங்கள் வீட்டு பண பெட்டியில், ஒரு சிறிய சதுர வடிவில் பச்சை துணியை எடுத்துக் கொண்டு, அதில் நான்கு கிராம்பையும், ஒரு சிறிய துண்டு மூங்கில் குச்சி வைத்து கட்டி வையுங்கள். கடன் தொகை கூடிய விரைவில் வசூலாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமேஎந்த மாதத்தில் பிறந்தவர்கள், எந்த நேரத்தில் குளித்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kadan theera parigaram Tamil. Kadan theera vali Tamil. Hanuman vazhipadu secrets. Kadan prachanai theera pariharam in Tamil