கடனை அடைப்பதற்கு ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் எக்கச்சக்கமான பரிகாரங்கள் கொட்டி கிடக்கிறது. சில பேருக்கு சில பரிகாரங்களை செய்யவே முடியாது. நேரம் காலம் பார்க்க தெரியாது. குளிகை நேரம் பார்க்க தெரியாது, ராகு காலம் எமகண்டம் பார்க்கத் தெரியாது, மைத்ரேய முகூர்த்த நேரத்திற்கு கடனை திருப்பிக் கொடுக்க முடியாது, செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரை என்று பார்த்து இப்படி பரிகாரங்களாக எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு நேரமில்லை என்பவர்கள், சில வேலைகளை நேரம் காலம் கிடைக்கும்போது, செய்து விட்டாலே போதும். கடன் தொல்லைகள் நீங்கிடும்.
அப்படி சாதாரணமாக செய்யக்கூடிய சில வாழ்வியல் பரிகாரங்களை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பரிகாரங்கள் அனைத்தும் பிரபல ஜோதிடர்களால் சொல்லப்பட்ட பரிகாரங்கள் தான். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி.
கடன் தீர்க்கும் எளிமையான பரிகாரங்கள்
கடன் சுமையிலிருந்து சுலபமாக வெளிவருவதற்கு ஒரு எளிய பரிகாரம் அன்னதானம் செய்வது. நாங்களே கைநீட்டி கடன் வாங்கி விட்டோம். இதில் எங்கு செலவு செய்து அன்னதானம் செய்ய முடியும். அன்னதானம் போடும் இடத்தில் ஒரு சிறு உதவியை நாம் செய்ய வேண்டும். பணத்தால் அல்ல. உடல் உழைப்பால். கோவிலில் அன்னதானம் நடக்கிறது, அல்லது வேறு ஏதோ ஒரு மடத்தில் அன்னதானம் செய்கிறார்கள். அந்த இடத்திற்கு போய் நீங்களும் பங்கு பெறவும்.
இலை போடுவது, சாப்பாடு பரிமாறுவது, சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பது, சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வது, இது போன்ற காரியங்களில் ஈடுபட்டாலே கடன் சுமை குறையும். ஒரே ஒரு நாள் இதை செய்தால் போதுமா. நிச்சயம் கிடையாது. ஒரு வருடம் முழுவதும் உங்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த அன்னதானத்திற்குச் சென்று உங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும். பிறகு பாருங்கள் எங்கிருந்தவது பணம் வரும். எப்படியோ கடன் அடையும். மன நிம்மதி கிடைக்கும்.
அடுத்ததாக ஒரு ஆன்மீக பரிகாரம். உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த கோவிலில் மொட்டை அடிக்க பிரபல்யம். உங்களது முடியை அந்த கோவிலுக்கு சென்று காணிக்கையாக கொடுத்து விடுங்கள். மொட்டை அடித்தாலும் கடன் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆண்கள் இதை சாதாரணமாக செய்து விடுவீர்கள். பெண்கள் என்ன செய்யலாம். பெண்கள் பூ முடி கொடுக்கலாம். சில பெண்கள், தங்களுடைய அழகுக்கு ஆதாரமாக இருக்கும் முடியை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். அப்படி செய்தாலும் சிறப்பு என்று தான் சொல்கிறது சாஸ்திரம்.
வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று உழவார பணி செய்தால், உங்களுக்கு சொத்து சேரும். கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் ஒட்டடை அடித்து கூட்டி சுத்தம் செய்வது தான் உழவாரப்பணி. எந்த கோவிலுக்கு சென்று நீங்கள் வேலை செய்தீர்கள் என்றாலும், உங்களுக்கான சொத்து உங்கள் கையை வந்து சேரும். அதாவது சொத்து பத்து வாங்க முடியவில்லை, பரம ஏழையாக இருப்பவர்களுக்கு கூற சொத்து சேரக்கூடிய வாய்ப்புகள் அமையும்.
வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பழமையான கோவில் இருக்கிறது. ரொம்பவும் சேதம் அடைந்து, சிதிலமாக இருக்கிறது. அந்த கோவிலை பராமரிக்க யாருமே முன்வரவில்லை. ஏதோ ஒரு முயற்சி செய்கிறீர்கள். 10 பெரியவர்களை கூப்பிட்டி வைத்து பேசி, ஊரில் இருக்கும் பத்து பணக்காரர்களை பிடித்து அந்த கோவிலை சீரமைப்பதற்கு ஒரு வழியை நீங்கள் தேடிக் கொடுத்து விட்டால், அந்த கோவில் சீரமைக்கப்பட்டு, கோவிலில் ஒரு குருக்கள் வந்து விளக்கு போட்டு சாமிக்கு பூஜை செய்ய தொடங்கி விட்டால், உங்கள் பரம்பரையே செல்வ செழிப்போடு வாழும். இதுவும் நிதர்சனமான உண்மை.
இதையும் படிக்கலாமே: பணம் மற்றும் கடன் பிரச்சினை தீர
மேலே சொன்ன இந்த மூன்று விஷயத்தையும் உங்களால் முடிந்தது ஏதோ ஒரு விஷயத்தை, உண்மையான நம்பிக்கையோடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் துன்பங்கள் நிச்சயம் தீரும். கடன் சுமை உங்கள் வாழ்க்கையில் குறையும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.