- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் மற்றும் கடன் பிரச்சினை தீர

பணம் மற்றும் கடன் பிரச்சினை தீர

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு இல்லாவிட்டால் அவரால் அந்த வாழ்க்கையை நடத்தவே முடியாது. மேற்கொண்டு அந்த வாழ்க்கையை நடத்துவதற்காக பல பேரிடமிருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இதனால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து பணவரவை அதிகரித்து கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் பிரச்சினை தீர

நமக்கு ஏற்படக்கூடிய கடன் பிரச்சனைக்கு காரணமாக திகழ்பவர் செவ்வாய் பகவான். கடன் பிரச்சினை மட்டும் அல்லாமல் சொந்தமாக வீடு வாங்குவது அல்லது வீட்டை விற்பது, வம்பு வழக்கு போன்ற அனைத்திற்கும் காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான் தான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்கு உரிய கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. மேலும் இன்றைய நாளில் நரசிம்மருக்கு உகந்த அஸ்வினி நட்சத்திரமும் வருகிறது. பொதுவாக அஸ்வினி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நரசிம்மரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. இது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்னும் பொழுது இதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட நாளில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று இரவு 12 மணிக்குள் செய்துவிட வேண்டும். இதற்கு நமக்கு ஒரு வெள்ளை நிற பேப்பர் வேண்டும். அது நம்முடைய உள்ளங்கை அளவு இருந்தால் போதும். மேலும் சிவப்பு நிற மையால் அந்த பேப்பரில் முருகப் பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேலை வரைந்து கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் உடையாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு ஏலக்காயை வைத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக மடித்து உங்களுடைய இடது கையில் வைத்து அதற்கு மேல் உங்கள் வலது கையை வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு விநாயகப் பெருமான், குலதெய்வம், முருகப்பெருமான், நரசிம்மர் இவர்கள் அனைவரையும் மனதார நினைத்துக் கொண்டு உங்களை தேடி பணம் வருவது போல் கற்பனை செய்து கொள்ள வேண்டும். மேலும் “என்னைத் தேடி நாளா புறமும் பணம் வந்து கொண்டு இருக்கிறது” என்னும் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும். தொடர்ச்சியாக 15 நிமிடம் இதை கூறிய பிறகு அப்படியே எடுத்துக் கொண்டு போய் செவ்வாய் பகவானுக்குரிய தானியமான துவரம் பருப்பு டப்பாவிற்குள் போட்டு யார் கண்ணிற்கும் தெரியாதபடி புதைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த துவரம் பருப்பு நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் துவரம் பருப்பாக இருந்தாலும் எந்த தவறும் கிடையாது. இந்த ஏலக்காயும் வேல் வரைந்த பேப்பரும் ஒரு மாதம் வரை அப்படியே இருக்கட்டும். ஒரு மாதம் கழித்து இவற்றை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் செய்வதன் மூலம் முருகப் பெருமான் மற்றும் நரசிம்மரின் அருளால் பணவரவு அதிகரிக்கும் கடன் பிரச்சனை முற்றிலும் தீரும்.

இதையும் படிக்கலாமே:பண வசியம் உண்டாக சாம்பிராணி

அஸ்வினி நட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய இந்த அபூர்வமான சேர்க்கை நாளன்று இந்த முறையில் நாம் பரிகாரம் செய்து முருகப்பெருமானையும் நரசிம்மரையும் வழிபாடு செய்தால் கண்டிப்பான முறையில் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்குரிய பண வரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்