நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து நல்வாழ்வை அமைத்து தரக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவள் தான் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு உரிய நாளாக திகழ்வதுதான் வெள்ளிக்கிழமை. அதுவும் அமாவாசை முடிந்து வரக்கூடிய வளர்பிறை வெள்ளிக்கிழமை என்பது நம் வாழ்க்கைக்கு பலவிதமான அற்புதமான மாற்றங்களை தரக்கூடியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வளர்பிறை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடனை தீர்க்கும் வழிபாடு
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயாரை சுக்கிர பகவானுக்குரிய தினமான வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்வது என்பது நம் வாழ்வில் பலவிதமான செல்வ செழிப்பை பெற உதவி செய்யும். சாதாரணமாகவே சுக்கிரக்ஹோரையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தாலேயே நமக்கு நல்ல பலன் உண்டாகும். அதிலும் மகாலட்சுமிக்கு விருப்பமான பொருளை நெய்வேத்தியமாக வைத்தும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து நம்முடைய பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கிவிடும்.
இந்த வழிபாட்டை அமாவாசை முடிந்து வரக்கூடிய வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக சுக்கிரக்ஹோரையில் செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த நெய்யை நாமே தயார் செய்ய வேண்டும். உப்பு போடாத வெண்ணையை கடையிலிருந்து வாங்கி அதை உருக்கி நெய் தயாரித்து அந்த நெய்யை பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் மகாலட்சுமி வீட்டிற்கு கூடிய பொருட்கள் ஆன இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பையும் சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக மகாலட்சுமிக்கு முன்பாக 6 வெற்றிலைகளையும் மூன்று கொட்டைப்பாக்கையும் வைக்க வேண்டும். வைக்கக்கூடிய ஆறு வெற்றிலையில் இரண்டாவது வெற்றிலை பெரிய வெற்றிலையாகவும் ஆறாவது வெற்றிலை சிறிய வெற்றிலையாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான மாதுளம் பழ முத்துக்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு கனகதாரா ஸ்தோத்திரத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து பாராயணம் செய்ய வேண்டும். இப்படி யார் ஒருவர் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்க கூடிய பணக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக இத்தனை வாரங்கள் என்று சங்கல்பம் வைத்து மகாலட்சுமி தாயாரை இதே முறையில் வழிபாடு செய்கிறார்களுக்கு அவர்களுக்கு பணக்கஷ்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அவை அனைத்தும் நீங்குவதோடு செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளை தீர்க்கும் முருகன் மந்திரம்
முழு மனதோடு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து அனைத்து விதமான வளங்களையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.