- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சினைகளை தீர்க்கும் முருகன் மந்திரம்

பிரச்சினைகளை தீர்க்கும் முருகன் மந்திரம்

- Advertisement -

கலியுக கடவுளாக திகழக்கூடியவர் முருகப் பெருமான். காணும் திசை எங்கும் முருகனின் வழிபாடு என்பது மிகவும் சிறப்பாக இன்றைய காலகட்டத்தில் இருக்கிறது. பலரும் முருகப்பெருமானின் ஆலயங்களில் பலவிதமான வழிபாடுகளை செய்து தங்களுக்கு தேவையான அனைத்து விதமான வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். தன்னைஈ நாடி வந்த பக்தர்கள் கேட்கும் வரத்தை தரக்கூடிய அற்புதமான கடவுளாக முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருக பெருமானே ஓடோடி வந்து நம்முடைய பிரச்சனையிலிருந்து நம்மை காப்பாற்றுவதற்கு கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகப்பெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் அவர்களுக்கு தெரிந்த மந்திர உச்சாடலை கூறி முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். ஏன் முருகா என்ற மூன்றெழுத்து சொல்லே மிகப்பெரிய மந்திரமாகவும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சொல்லும்பொழுது அதற்கு கூடுதல் பலன் கிடைக்கும். முருகனை வழிபாடு செய்வதன் மூலம் மும்மூர்த்திகளையும் வழிபாடு செய்வதற்குரிய பலனை பெற முடியும் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட முருக பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக தான் சஷ்டி திதி திகழ்கிறது. வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டியில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

- Advertisement -

இந்த சிறப்பு மிகுந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் செய்வது மிகவும் சிறப்பு. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் மாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். சஷ்டி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பவர்கள் எப்பொழுதும் போல் தங்களுடைய விரதத்தை அனுஷ்டித்து முருகப்பெருமானை வழிபாடு செய்து கொள்வதோடு இந்த வழிபாட்டையும் சேர்த்து செய்யும் பொழுது கூடுதல் பலன் கிடைக்கும். யார் ஒருவர் இந்த மந்திரத்தை சஷ்டி திதியில் முருகப்பெருமானை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக வெளியே வருவதை உணர முடியும். அதற்கு முருகனே உறுதுணையாக இருப்பது போல சம்பவங்களும் நிகழும்.

இந்த மந்திரத்தை ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு 51 முறை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டும். அதேபோல் இந்த மந்திரத்தை கூறும்பொழுது முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதேபோல் மாலை 6:00 மணிக்கும் முருகப்பெருமானுக்கு முன்பாக நெய் தீபத்தை ஏற்றி வைத்து இதே மந்திரத்தை 51 முறை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் சௌம் வேலும் மயிலும் துணை “

இதையும் படிக்கலாமே: விநாயகர் மலர்களும் அதன் பலன்களும்

இந்த ஒரு மந்திரம் போதும், நம் வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் முருகப்பெருமான் நம்மை காப்பாற்றுவதற்கு முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை கூறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்