வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத அளவிற்கு பணக்கஷ்டத்தில் இருப்பவரா நீங்கள்? அப்போ இந்த சாமி போட்டோவை பூஜை ரூமில் வைத்து வழிபட்டு வாருங்கள். கடன் அடைப்பதற்குரிய பண வரவு உங்களுக்கு கிடைக்கும்.

money sad samy room
- Advertisement -

கூலித்தொழில் செய்பவர் முதல் கோடீஸ்வரன் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். பிறரிடம் இருந்து கடனே வாங்காமல் வாழ்க்கையை நடத்துபவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறார்கள். கடன் வாங்குவது தவறில்லை. ஆனால் அந்த கடனை திருப்பி அடைப்பதற்குரிய வழிமுறைகள் தெரியாமல் அதிகமான வட்டிக்கு கடன் வாங்குவது தான் தவறு. மேலும் ஒரு கடனை அடைப்பதற்காக மற்றொரு கடனை வாங்குவதும் மிகவும் தவறான செயலாகும். இப்படி நடக்கும் பொழுது வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லாமல் போய்விடும். கடனை அடைப்பதற்கு பணவரவு நமக்கு தேவைப்படும். அந்த பண வரவை அதிகரித்து கடனை தீர்ப்பதற்குரிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. நமக்கு எந்த ஆற்றல் தேவைப்படுகிறதோ, அந்த ஆற்றலுக்குரிய தெய்வத்தை நாம் முறையாக வணங்கினோம் என்றால் அந்த ஆற்றல் நமக்கு கிடைத்து விடும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பணத்திற்கு அதிபதியாக சில தெய்வங்கள் காணப்படுகின்றன. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி, குபேரர், சுக்கிரர் மற்றும் ஸ்வர்ண ஆகர்சன பைரவர்.

- Advertisement -

மேற்சொன்னவர்களை நாம் முறையாக வழிபட்டோம் என்றால் நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக மகாலட்சுமி தாயார் மற்றும் சொர்ண ஆகர்சன பைரவரின் புகைப்படத்தை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து தினமும் அவர்களின் மூல மந்திரத்தை 108 முறை உச்சரித்தோம் என்றால் கண்டிப்பான முறையில் பணவரவு என்பது அதிகரிக்கும்.

மேலும் வீட்டுப் பூஜை அறையில் ஏதாவது ஒரு நெய் தீபம் ஆவது ஏற்றி வைத்து நாம் வழிப்பட்டோம் என்றாலும் நமக்கு பணவரவு அதிகரிக்கும் அதிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் கண்டிப்பான முறையில் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பணவரவு நிச்சயம் அதிகரிக்கும்.

- Advertisement -

பணவரவு ஏற்பட்ட பிறகு கடனை அடிப்பதற்கு நாம் செவ்வாய், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ராகு மற்றும் எமகண்ட காலத்தை தவிர்த்து மற்ற பிற நேரங்களில் கடனை அடைத்தோம் என்றால் நம்முடைய கடன் குறைய ஆரம்பிக்கும். மேலும் குளிகை நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசல் தொகையை சிறிதேனும் திருப்பிக் கொடுத்தோம் என்றால் நம்முடைய கடன் விரைவில் அடையும்.

அடுத்ததாக பௌர்ணமி முடியும் நேரத்தில் நாம் கடனை திருப்பிக் கொடுத்தோம் என்றாலும் நம்முடைய கடன் சுமை குறைய ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. புதிதாக கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து அறவே எடுத்து விடுங்கள். அதையும் மீறி ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் வாங்குவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இரவு உறங்க செல்லும் முன் இந்த ஒரு வார்த்தையை உங்கள் உள்ளங்கையில் எழுதிய பிறகு உறங்கினால் உறங்க விடாமல் பாடாய்படுத்தும் பிரச்சனைகள் யாவும் விடியும் முன்பே உங்களை விட்டு விலகி விடும்.

இந்த குறிப்புகளை மனதில் நிறுத்திக் கொண்டு பணவரவை அதிகரித்து அதன் மூலம் கடன் சுமையிலிருந்து விரைவில் வெளியேறி நிம்மதி பெருமூச்சு விடுவோம்.

- Advertisement -