- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடவுள் கனவில் வந்தால் என்ன பலன்

கடவுள் கனவில் வந்தால் என்ன பலன்

- Advertisement -

கனவு என்பது இயல்பான ஒன்று தான். கனவில் பல ரகங்கள் உண்டு. ஆழ்ந்த தூக்கத்தின் பொழுது வரக்கூடிய கனவுகள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும். அரை தூக்கத்தில் பகல் நேரத்தில் சில கனவுகள் வரும், அது நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் பற்றியதாக இருக்கும். அந்த வகையில் திடீரென கனவில் கடவுள் வருவதால் என்னென்ன பலன்கள் நமக்கு ஏற்படக்கூடும்? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

ஆழ்ந்த தூக்கத்தின் பொழுது, சிலர் கடவுளை கனவில் காண்பது உண்டு. அவர் ஏதோ ஒரு விஷயத்தை நமக்கு நினைவு படுத்துவது போல இருக்கும். எல்லோருடைய கனவிலும் அவ்வளவு எளிதாக கடவுள் வந்துவிடுவது கிடையாது. அதுபோல இறந்தவர்கள் கூட எல்லோருடைய கனவிலும் வருவது கிடையாது. எவ்வளவோ பேர் இறந்து போன தன் அப்பா கனவில் வர வேண்டும், அம்மா கனவில் வர வேண்டும் என்று ஏங்குவார்கள், ஆனால் ஏனோ அவர்கள் பிள்ளைகளின் கனவுகளில் வருவதில்லை.

- Advertisement -

அதே போல கடவுள் கூட எல்லோருடைய கண்களுக்கும் காட்சி தருவதில்லை. அப்படி கனவில் உங்களுக்கு கடவுள் வந்திருந்தால், அவர் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார், உங்களுக்கு நல்லது செய்யப் போகிறார் என்று அர்த்தம். கடவுள் உங்கள் மீது கவனம் செலுத்துகிறார், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கின்றார். உங்களுடைய அடுத்தடுத்த முயற்சிகளுக்கும், முன்னேற்றங்களுக்கும் உறுதுணையாக நிற்கின்றார்.

நீங்கள் செய்ய இருக்கும் செயல் உங்களை மட்டும் அல்லாமல் பொது பலன்களையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடும், அதனால் தான் கடவுள் உங்களுடைய கனவில் வந்து உறுதுணை செய்கிறார். பிடித்த கடவுள் கனவில் வந்து சிரித்த முகத்துடன் ஏதோ சொல்லியது போல இருந்தால், உங்களுடைய வாழ்க்கையில் அடுத்து அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். நீங்கள் செய்ய இருக்கும் தொழில், வியாபாரம், வேலை ஏதோ ஒன்று உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும், முன்னேற்ற தரும் வகையில் அமையப் போகிறது என்று அர்த்தம்.

- Advertisement -

அதுவே கடவுள் கோபமான முகத்துடன் ஆக்ரோஷமாகவும் அல்லது சிவபெருமான் நடனம் ஆடுவது போலவும், கனவில் பயங்கரமான விஷயங்கள் எல்லாம் நடந்தால், கடவுள் உங்களை எச்சரிக்கை செய்கிறார். ஏதோ ஒரு மிகப்பெரிய தவறு உங்களுக்கு தெரியாமலேயே, தெரிந்தோ நடைபெறப் போகிறது, அதை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறுகிறார். கடவுள் உங்களிடம் வரம் கேட்பது போல அமைந்தால், இதை விட ஒரு அதிர்ஷ்ட பலன் எதுவுமே இருக்க முடியாது. நீங்கள் ஆசைப்பட்ட ஒன்று, விரும்பிய வேண்டுதல் ஒன்று நிறைவேற இருக்கிறது என்று அர்த்தம். கடவுளை நேரில் மட்டும் அல்ல, கனவில் தரிசித்தாலும் அது மெய்யெனவே சாஸ்திரங்கள் கூறுகிறது. உங்களுக்குள் இருக்கும் தெய்வ நம்பிக்கை உங்களை மென்மேலும் ஊக்கப்படுத்த உதவுகிறது.

இதையும் படிக்கலாமே:
புரட்டாசி கடைசி நாள் குலதெய்வ வழிபாடு

சுயநலமாக எதையும் யோசிக்காமல், பொதுநல எண்ணத்துடன் நீங்கள் செயல்பட்டால் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நீங்கள் முன்னேறித்துக் கொண்டே செல்வீர்கள் என்பதை இந்த கடவுள் உங்களுக்கு கனவு ரூபமாக வந்து அருள் பாலிக்கிறார். இஷ்ட தெய்வங்கள் கனவில் வருவது இது போன்ற நல்ல பலன்களை கொடுக்கக் கூடியது எனவே தினமும் இரவு உறங்க செல்லும் பொழுது, உங்களுக்கு பிடித்தமான கடவுளை ஒரு ஐந்து நிமிடம் மனதார நினைத்து இறைவனின் திருமேனியை மனதிற்குள்ளேயே மெய்மறந்து தரிசனம் செய்யுங்கள். நல்ல ஆழ்ந்த தூக்கம் நிச்சயம் வரும், தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

சற்று முன்