நாளைய தினம் 17-10-2024 வியாழக்கிழமை புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். பௌர்ணமி திதியும் சேர்ந்து வரவிருக்கிறது. பொதுவாகவே சாதாரண பௌர்ணமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்வதே சிறப்பான பலனை தரும் என்பார்கள். அதிலும் புரட்டாசி மாதம் வந்திருக்கக் கூடிய இந்த பௌர்ணமி திதி இரட்டிப்பு சக்தி வாய்ந்தது.
இந்த நாளில் அனைவர் வீட்டிலும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். எளிமையான முறையில், நம் கஷ்டங்கள் நம்மை விட்டு விலக, குலதெய்வம் நம் வீட்டிற்கு வர, நாளைய தினம் செய்ய வேண்டிய வழிபாடு, நாளைய தினம் பூஜை அறையில் ஏற்ற வேண்டிய விளக்கு பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
பௌர்ணமியில் குலதெய்வ வழிபாடு
நாளை மாலை நிலவு உதிக்கும் நேரத்தில் இந்த குலதெய்வ வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ள வேண்டும். மாலை 6:15 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை வீட்டில் துவங்குங்கள் சரியாக இருக்கும். பூஜையை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் குலதெய்வத்தது திருவுருவப்படம் இருந்தால், அந்த குலதெய்வத்திற்கு என்ன ரொம்ப பிடிக்குமோ அதை நெய்வேதியமாக வைத்து, உங்கள் குலதெய்வத்திற்கு உகந்த பூக்களை போட்டு, பூஜை அறையை தயார் செய்து கொள்ளுங்கள்.
ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு மண் அகல் விளக்குகள் வைத்து, நெய் ஊற்ற வேண்டும். பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு துண்டு கட்டி வெல்லம், அந்த விளக்குக்கு பக்கத்தில் வைத்து விடுங்கள். ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து விடுங்கள். அவ்வளவுதான் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி, அந்த குலதெய்வம் வீட்டிற்குள் வரவேண்டும் என்றும் உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
குலதெய்வம் தெரியாது என்றால் தெரியாத குலதெய்வம் என்னுடன் இருந்து என் குடும்பத்திற்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம். இறுதியாக மணக்க மணக்க தீபம் போட்டு, ஆராதனைகளை இறைவனுக்கு செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். விளக்கு நெய் தீரும் வரை எரியட்டும். நீங்களே அதை இடையில் குளிர வைக்க வேண்டாம். கிண்ணத்தில் வைத்திருக்கும் வெல்லத்தை எடுத்து சின்ன சின்ன துகள்களாக தூள் செய்து பச்சரிசி மாவோடு கலந்து அந்த மாவை எரும்புகளுக்கு இறைகாக போட வேண்டும்.
உங்கள் வீட்டு வாசலில் செடி கொடிகள் மண்பாங்கான இடம் இருந்தால் அந்த இடத்தில் தூவி விடுங்கள். இல்லை என்றால் பௌர்ணமி நாளன்று ஏதாவது கோவிலுக்கு சென்றீர்கள் என்றால் அந்த கோவிலில் மரம் செடி கொடிகள், இருக்கக்கூடிய இடத்தில் இந்த வெல்லம் கலந்த அரிசி மாவை தூவி விடுங்கள். எரும்புகள் இதை சாப்பிட உங்கள் கர்ம வினை குறையும். கஷ்டங்கள் தீரும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைத்து.
இதையும் படிக்கலாமே: உழவாரப்பணி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் உங்களை விட்டு நீங்கிவிடும். நாளைய தினம் குலதெய்வத்தை அழைத்தால், நிச்சயம் குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வரும் என்பதும் நம்பிக்கை. மேல் சொன்ன இந்த எளிய வழிபாடு உங்களுக்கு பலனளிக்கும் எனற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.