குழப்பமான மனநிலையில் எலுமிச்சையை கையில் வைத்துக் கொண்டு உங்கள் கடவுளிடம் இப்படி உத்தரவு கேட்டு பாருங்கள்! நல்ல தீர்வு கிடைக்கும்.

lemon-murugan
- Advertisement -

ஒருவர் குழப்பமாக இருக்கும் பொழுது எந்த ஒரு முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுக்கும் பொறுப்பை கடவுளிடமே விட்டு விட்டு அமைதியாக அமர்ந்து இருப்பார்கள். அதை விட கடவுளிடம் உத்தரவு கேட்டு நாம் முடிவெடுப்பது சிறந்த பலனாக இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, நமக்கு முடிவெடுக்கத் தெரியவில்லை யென்றால் கடவுளிடம் இப்படி முறையாக உத்தரவு கேட்கும் பொழுது, அதற்கான சரியான தீர்வையும் நம்மால் எடுக்க முடியும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

praying-god1

கடவுளிடம் உத்தரவு கேட்க நம் வீட்டில் இருந்து இதை செய்வதை விட, உங்களுடைய இஷ்ட தெய்வங்கள் இருக்கும் கோவிலில் சென்று செய்வது விசேஷ பலன்களை கொடுக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு விநாயகரை பிடிக்குமென்றால் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரிடம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அது போல் குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வ கோவிலில் சென்று செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். உங்களுடைய குல தெய்வம் முருகன் என்றால் எந்த முருகன் கோவிலில் சென்றும் செய்யலாம். இதற்காக குலதெய்வம் இருக்கும் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை.

- Advertisement -

உங்களுக்கு ஒரு விஷயம் முடியுமா? முடியாதா?, நடக்குமா? நடக்காதா?, சரியா? தவறா? என்கிற சந்தேகம் இருக்கும் பொழுது மிக சரியான தீர்வு காண குல தெய்வ உத்தரவு இப்படி கேட்க முடியும். குலதெய்வம் கட்டாயம் இதற்கான பதிலை ஏதாவது ஒரு சப்தம் எழுப்பி நமக்கு அறிவுறுத்துவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. உங்களுடைய இஷ்ட தெய்வ கோவிலுக்கு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், கற்பூரம் ஆகியவற்றை எடுத்து சென்று அங்கு இருக்கும் அவருடைய சந்நிதியில் நின்று வலது கையில் ஒரே ஒரு எலுமிச்சையை வைத்து கொள்ளுங்கள். மற்றவற்றை அங்கேயே வைத்து விட்டு சந்நிதியை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.

vetrilai pakku

கோவிலுக்குள் நீங்கள் பரிகாரத்தில் இருக்கும் பொழுது எந்த ஒரு மந்திரத்தையும் உச்சரிக்க தேவையில்லை. அது போல் வேறு ஒரு சிந்தனையும் இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் தெய்வத்தைப் பற்றிய சிந்தனையும் அவர் கூறப் போகும் பதிலையும் மட்டுமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்பது முறை சன்னிதியை வலம் வந்து தெய்வத்திற்கு நேராக அமர்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுடைய கோரிக்கை அல்லது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வையுங்கள். கண்ணை மூடிக்கொண்டு உங்களுடைய பிரச்சனைகளை கூறி தெய்வத்திடம் உரையாடுங்கள்.

- Advertisement -

எல்லா வேண்டுதல்களையும், எல்லா கேள்விகளையும் கேட்டு முடித்த பின் கையில் இருக்கும் எலுமிச்சையை வெற்றிலை, பாக்குடன் சேர்த்து கடவுளிடம் வைத்து கற்பூரத்தை கொளுத்துங்கள். எரியும் ஜோதியை கண்களில் எடுத்து ஒற்றிக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் அங்கேயே அமர்ந்து பாருங்கள். கடவுள் உங்களுக்கான பதிலை ஏதாவது ஒரு சமிஞ்சை மூலமாக கொடுப்பார். பெரும்பாலும் கௌலி சத்தம் கேட்கும் என்பார்கள். அதாவது பல்லி சத்தமிடும் சப்தம் பத்து நிமிடத்திற்குள் உங்களுக்கு கேட்கும். அல்லது மயில் ஆகவுவது, பசுமாடு கத்துவது, கோவில் மணி ஓசை கேட்பது என்று ஏதாவது ஒரு சுப சகுனம் ஒலிக்கும். இப்படி சகுனங்கள் வாயிலாக கடவுள் உங்களுக்கு நல்ல பதிலை கொடுப்பார்.

கடவுளிடம் இருக்கும் பூக்கள் கீழே விழும். கண்களை மூடி தியானம் செய்யும் பொழுது இறைவனுடைய திரு உருவம் தெரியும். இப்படி எதுவுமே நடக்கவில்லை என்றால் உங்களுடைய பதில் எதிர்மறையாக இருக்கிறது என்று கொள்ளலாம். ஏதாவது ஒரு சமிஞ்சை தென்பட்டால் வெற்றி நிச்சயம். இப்படித்தான் அந்த காலத்திலெல்லாம் கடவுளிடம் உத்தரவு கேட்பார்கள். நாமும் இதே முறையை பயன்படுத்தி நமக்கு தேவையான பதிலை கடவுளிடம் உத்தரவாக பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பாடலை பாடினால் தீராத நோயெல்லாம் தீரும்! எவ்வித தோஷமும் தலைதெறிக்க ஓடும்! பகையெல்லாம் ஒழிந்து புது பலம் பிறக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -