இந்த 1 பாடலை பாடினால் தீராத நோயெல்லாம் தீரும்! எவ்வித தோஷமும் தலைதெறிக்க ஓடும்! பகையெல்லாம் ஒழிந்து புது பலம் பிறக்கும்!

sivan-thirugnanasambandar

திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இரண்டாம் திருமுறை பாடலான இப்பாடலை நாம் தினமும் பாடினால் எந்த ஒரு தோஷமும் அணுகாது என்று கூறப்படுகிறது. இப்பாடலில் அமைந்துள்ள ஒவ்வொரு வரிகளும் சிவபெருமானை போற்றும் விதமாக அமைந்துள்ளது. சிவபெருமானை நினைத்து இப்பாடலை பாடுபவர்களுக்கு நவகிரகங்களில் எந்த கிரகங்களாலும் உண்டாகக்கூடிய தோஷங்கள் அண்டுவதில்லை. குறிப்பாக தீராத பிணி எல்லாம் தீர்வதாக நம்பப்பட்டு வருகிறது. பாடலில் இருக்கும் குறிப்புகளும் இதையே பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thirugnana-sambandar1

முதல் பாடலில் நவ கிரகங்களால் ஏற்படக்கூடிய எந்த தோஷங்களும் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு ஏற்படுவதில்லை என்றும், இரண்டாவது பாடலில் பயணங்களுக்கும் ஒவ்வாத நட்சத்திரங்கள் கூட நல்ல நட்சத்திரங்களாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது பாடல் சிவனடியார்களுக்கு மூலம் எல்லா திசைகளில் இருந்தும் காக்கும் தெய்வங்கள் நன்மையைத் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள் என்றும் அழகாக கூறியுள்ளார்.

நான்காவது பாடலில் ஜுரமும், நெருப்பும், எமனும், எமதூதர்களும் கூட சிவபெருமானை வணங்குபவர்களை ஒன்றும் செய்ய முடியாதாம். ஐந்தாம் பாடலின் மூலம் பஞ்சபூதங்களும் சிவனடியார்களை பார்த்து அஞ்சி நடுங்கும் என்றும், ஆறாம் பாடலில் கொடிய வனவிலங்குகளும் சிவனை வணங்குபவர்களை ஒன்றும் செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

panja bootham

ஏழாம் பாடலின் மூலம் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு வெப்ப காய்ச்சல், குளிர்காய்ச்சல், வாதம், பித்தம் போன்ற எந்த நோய்களும் வருவதில்லை, வந்தாலும் அவற்றால் பாதிப்புகள் இருக்காதாம். அதுபோல் எட்டாம் பாடலில் ஏழு கடல்கள் சூழ்ந்த இலங்கை இராவணன் போன்ற அரக்கனாலும், ஆழ்கடலில் வாழும் உயிரினங்களாலும் சிவனை வணங்குபவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஒன்பதாம் பாடலில் மற்ற கடவுள்களையும், தேவர்களையும் கூட தாக்கும் காலன் சிவனடியார்களுக்கு நல்லதே செய்யுமாம். பத்தாம் பாடலில் எத்தகைய மதவாத போரும் சிவனை வணங்குபவர்களுக்கு நல்லவையாக மாறுமாம். பதினோராம் பாடலின் முடிவில் தான் எழுதிய இந்த பாடலை. பாடுபவர்களுக்கு பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் இயங்குகின்ற 9 கோள்களை தாண்டி அதாவது நவகிரகங்களை தாண்டி நல்லதே நடக்கும் என்று உறுதி கூறுகிறார்.

Navagraham

இரண்டாம் திருமுறை பாடல் வரிகள்:
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே
னுளமே புகுந்தவதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

navagrahas

2. எண்பொடு கொம்பொடாமை யிவை
மார்பி லங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே
னுளமே புகுந்த வதனால்

ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு
முடனா யநாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

stars

3. உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

dhanalakshmi

4. மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோ துமெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்

கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

eman

5. நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்

வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

panjabootham

6. வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர்
மடவா டனோடு முடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்

கோளரியுழு வையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

7. செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்

வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

medicine

8. வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து
மடவாள் தனோடு முடனாய்
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்

ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு
மிடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

ravana

9. பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்

மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்
அடியாரவர்க்கு மிகவே.

sivan-god2

10. கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்

புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல்
திருநீரு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

buddha-puthar-seedar

11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் – துன்னி
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்

தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வராணை நமதே.

Thirugnana-sambandar

இப்பாடலை நாமும் தினமும் பாடி காலத்தை வெல்வோமாக! ஓம் நமச்சிவாய!!

இதையும் படிக்கலாமே
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே! எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அந்த 2 பொருள் என்னென்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.