கடவுளை இப்படி மட்டும் வழிபட்டு விடாதீர்கள்! கடவுளை வழிபடும் ரகசிய முறையும்! அதன் பலனும்!

siva-vakkiyar-sivan

பொதுவாக கடவுளை எப்படி வழிபடுகின்றோம்? என்பது குறித்து யாரும் யோசிப்பது இல்லை. கடவுளே இல்லை என்று கூறும் நாத்திகவாதிகளுக்கு கூட, தீராத துன்பம் வரும் பொழுது விழிகளுக்கு இடையிலே கசியும் நீரிலும் உண்மையான பக்தி இருக்கும். ஆனால் கடவுளை நம்பும் சிலருக்கு அவரை எப்படி வழிபட வேண்டும்? என்பது தெரிவதில்லை. 18 சித்தர்களில் ஒருவராக விளங்கும் சிவவாக்கியர் தன் பாடல்கள் மூலம் எப்படி இறைவனை வணங்க வேண்டும்? என்று கூறியுள்ளார். அதன் சுவாரசியமான தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

praying god

நீங்கள் கோவிலுக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு இறைவனை பார்க்கும் பொழுது உங்களுடைய மனமும், எண்ண ஓட்டமும் எதைப் பற்றிய சிந்தனையில் இருக்கிறது என்பது முக்கியம். கோவிலுக்கு வந்து விட்டு உங்கள் வீட்டு பிரச்சனைகளையும், தொழில் ரீதியான பிரச்சனைகளையும் நினைத்துக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் பக்தியில் குற்றம் உண்டாகி விடுகிறது. அதன் பிறகு நீங்கள் வைக்கும் வேண்டுதல்கள் எப்படி பலிக்கும்? என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதே போல வீட்டில் சாமி கும்பிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாள் சரியான நேரத்திற்கு சாமி கும்பிட முடியவில்லை! என்ன செய்வீர்கள்? அன்று வெள்ளிக்கிழமை என்றே வைத்துக் கொள்வோமே! வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும். அதற்காக மளமளவென எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வார்கள். ஆனால் அந்த இடத்தில் உண்மையான பக்தி இருக்குமா? நேரமாகிவிட்டது விளக்கேற்றி ஆகவேண்டும். அவ்வளவு தான் உங்கள் மனதில் இருக்கும். இப்படி இறைவனை வழிபடும் பொழுது எப்படி வேண்டுதல்கள் பலிக்கும்?

siva-vakkiyar

தன்னுடைய பாடலில் இவ்வாறு கூறுகிறார்,

- Advertisement -

‘நட்டகல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணவென்று சொல்லும்
மந்திரம் ஏதடா!’

siva-vakkiyar1

சிவவாக்கியர் மகம் நட்சத்திரத்தில், தை மாதத்தில், சங்கர குலத்தில் பிறந்தவர் ஆவார். இவருக்கு இப்பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? இவர் பிறக்கும் பொழுதே ‘சிவசிவ’ என்கிற வார்த்தையை உச்சரித்துக் கொண்டே பிறந்தாராம் அதனால் தான் சிவவாக்கியர் என்கிற பெயரை சூட்டினார்களாம். இவர் ஜாதி சமய பேதங்களை அடியோடு வெறுப்பவர் என்பதால் அவற்றைச் சாடுவதை தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டாராம்.

praying

ஆடம்பரமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி தான் கடவுளை கும்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை என்று இவர் குறிப்பிடுகிறார். வெறும் சம்பிரதாயம் என்கிற பெயரில் சாமி கும்பிடும் பொழுது, அதில் அப்படி என்ன உண்மையான பக்தி இருக்கும்? உண்மையான பக்திக்கு எடுத்துக்காட்டாக பல புராண வரலாறுகள் உள்ளன. அத்தகைய புராண வரலாற்றில் கூட உண்மையான பக்திக்கு எந்த விதமான ஆடம்பரங்களும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

praying-god

இறைவன் இருக்கிறான் என்று உண்மையாகவே நம்பி, அவரிடம் நேரடியான உரையாடலை பரிமாறிக் கொள்ளும் பொழுது, அங்கு சாதாரண கல் கூட கடவுளாக தான் தெரியும். மனதில் ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கடவுளை ஒருபொழுதும் கும்பிட கூடாது. மனம் முழுக்க இறைவன் வியாபித்து இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றைக் கூறலாம். நீங்கள் அருகில் இருக்கும் கூட்டமே இல்லாத ஒரு கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு இறைவனை பார்க்கும் பொழுது உங்களுடைய மனதில் பெரிதாக உற்சாகம் இருக்காது. இதுவே பிரசித்தி பெற்ற கூட்டம் நிறைந்துள்ள கோவில்களுக்கு செல்லும் பொழுது, கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து, பல மணி நேரம் கழித்து இறைவனை கொஞ்ச நேரம் அதிசயமாக பார்க்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து போய் விடுகிறது.

praying

உண்மையிலேயே நாம் இறைவனை பார்ப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. இதைத்தான் உண்மையான பக்தி என்று கூறுகின்றனர். இறைவனை பார்க்க போகிறோம் என்கிற உணர்வு அந்த பல மணி நேர நெரிசலில் ஆழ் மனதானது ஏற்றுக் கொண்டிருக்கும். அதனால் நீங்கள் கடவுளை பார்க்கும் பொழுது உணர்ச்சி பெருக்கெடுக்கிறது. சாதாரணமாக பார்க்கும் பொழுது அந்த உணர்வு வருவதில்லை. கடவுளை நாம் பார்க்கும் விதமும், உணரும் விதமும், உண்மையான பக்தியும் தான் உங்கள் வேண்டுதல்களை பலிக்கச் செய்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இறைவனை வணங்குங்கள்.