பொல்லாத கண் திருஷ்டிகளால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய பாரம்பரியமான பழங்கால கண் திருஷ்டி கழிக்கும் முறையை பின்பற்றினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். கண் திருஷ்டிகள் என்பது சாதாரணமானது அல்ல! கலியுகத்தில் யாரோ ஒருவரால் வரும் கண்திருஷ்டிகளை விட, நம் உடன் இருக்கும் நம் உறவுகளால் அதிகமாக கண் திருஷ்டிகள் வந்து விடுகிறது என்பது தான் வருத்தத்திற்கு உரிய விஷயம். கண் திருஷ்டிகள் நீங்க பழங்கால திருஷ்டி கழிக்கும் முறையை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
நம்மிடம் இருப்பதை வைத்து இந்த மனித மனம் திருப்தி அடைவதில்லை. அடுத்தவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள்? அடுத்தவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்? என்பதை பொறுத்தே எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இருப்பதை வைத்து மகிழ்ந்து கொள்ளும் மனதில் தான் தெய்வமும் குடியிருக்கும். ஒருவரின் வளர்ச்சியை பார்த்து அல்லது குடும்பத்தை பார்த்து அவர்கள் மட்டும் இப்படி மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறார்கள்? என்று நினைத்து விட்டாலே அது கண் திருஷ்டியாக மாறிவிடுகிறது.
இந்த திருஷ்டிகளையும், கண்ணேறுகளையும் கழிக்க பழங்காலத்தில் சிரட்டை ஒன்றை எடுத்துக் கொள்வார்கள். பாதியாக உடையப்பட்ட தேங்காய் சிரட்டையில் கீழ்வரும் இந்த பொருட்களை எல்லாம் வைக்க வேண்டும். முதலில் சிறிதளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். கல் உப்பு கடுமையான கண் திருஷ்டிகளை கரைத்து விடும், அற்புதமான தெய்வீக பொருள். அடுத்ததாக வெண்கடுகு சேர்க்க வேண்டும். சிறிதளவு வெண்கடுகு சேர்ப்பதால் தீய சக்திகள் கடுகு போல வெடித்து சிதறிவிடும்.
அடுத்ததாக சிறிதளவு மிளகு சேர்க்க வேண்டும். மிளகின் காரத்தை போல நம் மீது இருக்கும் திருஷ்டிகளின் காரமும், நெடியும் தவிடுபொடியாக இதனை சேர்ப்பது உண்டு. குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப வர மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். நீண்டு இருக்கும் வர மிளகாய் காம்புடன் அப்படியே சேர்க்க வேண்டும். மிளகைப் போலவே மிளகாயும் நெடியுடன், காரமும் சேர்ந்தது. இது கொடூரமான பொல்லாத கண் திருஷ்டிகளை வேரோடு அழிக்கும் சக்தி படைத்தது.
உங்கள் வீட்டின் மீதும், வீட்டில் இருக்கும் நபர்களின் மீதும் கண் திருஷ்டிகள் கழிய வேண்டும் என்பதற்காக வீட்டின் மண்ணை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். சாஸ்திரத்திற்கு கொஞ்சமாக போட்டால் போதும். பின்னர் நான்கைந்து கரி துண்டுகள் சேர்க்க வேண்டும். கரி துண்டுகளும் கண் திருஷ்டிகளை போக்க வல்லது. அதனால்தான் வீட்டின் தலை வாசலில் கட்டி வைக்கிறார்கள். அவ்வளவுதான் கடைசியாக நான்கைந்து கற்பூர கட்டிகளையும் சேர்த்து, வீட்டில் இருக்கும் நபர்களை கிழக்கு பார்த்து அமர செய்து, வலம் இருந்த இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி கழியுங்கள். பின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை மூன்று முறை கொண்டு வாருங்கள். இதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செய்ய வேண்டும். செய்யும் நபர் ஆணாக இருப்பது இன்னும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே:
மிளகு சாதம் ரெசிபி
பிறகு வீட்டிற்கு வெளியே கொண்டு போய் வீட்டையும் இதே போல திருஷ்டி சுற்ற வேண்டும். பின்னர் கடைசியாக சிரட்டையில் இருக்கும் நெருப்பை பற்ற வைத்து கொண்டு போய் முச்சந்தியில் வைத்து முழுவதுமாக எரிய விட வேண்டும். முச்சந்தி, நாற்ச்சந்தி எல்லாம் இப்போது எங்கே தேடி செல்வது என்பவர்கள், உங்கள் வீட்டின் வெளிப்புற பகுதியில் ஓரமாக இதை செய்யலாம். எவருடைய கண் திருஷ்டியாக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும், பொறாமை கொண்டவர்களின் எண்ணங்கள் அழிந்து, உங்கள் மீது இருக்கும் திருஷ்டிகள் எளிமையாக நீங்கும் சக்தி வாய்ந்த பரிகாரமாக இருக்கும். இதனை ஞாயிற்றுக்கிழமையில் அல்லது அமாவாசை நாட்களில் செய்தால் கூடுதல் பலன்.