உங்கள் தலையெழுத்தை மாற்ற கூடிய கையெழுத்தை எப்படி போடுவீர்கள்? இப்படி கையெழுத்திடும் பழக்கமுள்ளவர்களது வாழ்க்கையில், நிச்சயம் வெற்றியே இருக்காது.

signature

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்பது நமது பண்டைய பழமொழியாகும். எந்த ஒரு மொழிக்கும் அதன் அடிப்படையாக இருப்பது எழுத்து வடிவில் இருக்கும் வார்த்தைகள் ஆகும். அந்த எழுத்துக்களை காகிதங்களில் எழுதுகின்ற போது அது பல விடயங்களுக்கு சான்றாக அமைகிறது. அதிலும் குறிப்பாக பணம்,சொத்து தொடர்பான விவகாரங்களில் காகிதங்களில் ஒரு நபர் எழுதுகின்ற கையெழுத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எந்த ஒரு மொழியின் எழுத்துக்களிலும் ஒரு விதமான ஆன்மீக அதிர்வலைகள் இருப்பதாக கருதப்படுகின்றது. அத்தகைய சக்தி வாய்ந்த எழுத்துக்களை பயன்படுத்தி நாம் போடுகின்ற கையெழுத்து நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை கொண்டதாக இருக்கிறது என கையெழுத்து குறித்து ஆய்வில் ஈடுப்படும் கையெழுத்து சாஸ்திர வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அதிகம் அதிர்ஷ்டங்களை ஈர்க்க பின்பற்ற வேண்டிய சில கையெழுத்து விதிமுறைகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

signature

அன்றாட வாழ்க்கையில் பல விதமான விடயங்களுக்கு நாம் கையெழுத்து போடுவது அவசியமாகிறது. அப்படி கையெழுத்து போடுபவர்கள் முடிந்த வரையில் நீல நிற மை கொண்ட பேனாக்களை பயன்படுத்தி கையெழுத்து போடுவது நல்லது. சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கருப்பு நிற மை கொண்ட பேனாக்கள் கொண்டு கையெழுத்து போடுவதால் பெரிய பாதகங்கள் ஏதும் இல்லை.

பெரும்பான்மையானவர்கள் தங்களின் பெயர்களையே கையெழுத்தாக போடும் பழக்கம் உடையவர்களாகவே இருக்கின்றனர். இப்படி தங்களின் பெயர்களை கையெழுத்தாக இடும் போது பெயரின் முதல் எழுத்தை மட்டும் சற்று பெரிதாக எழுதி, மற்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்து விட சற்று சிறிய அளவில் எழுதி கையெழுத்து போடுவதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களும் இன்ன பிற நன்மையான மாற்றங்களும் ஏற்படும் என்பது சில கையெழுத்து சாஸ்திர நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.

signature

தங்கள் வாழ்வில் பொருளாதார ரீதியான அதிர்ஷ்டங்களும், இன்ன பிற வசதிகளும் அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அலுவல் ரீதியான கோப்புகள் மற்றும் எந்த ஒரு ஆவணங்களில் கையெழுத்து இடும் போதும் கையெழுத்தை வலது பக்கமாக சாய்த்து மேல் நோக்கி இருக்கின்ற வகையில் கையெழுத்து போடும் பழக்கத்தை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும். அதிலும் அந்த கையெழுத்தை 45 டிகிரி கோணத்தில் போடுவது மிகச் சிறப்பானது என கையெழுத்து சாஸ்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சிலர் கையெழுத்து இடும்போது தங்கள் பெயரில் இருக்கின்ற எழுத்துக்களை தனித்தனியாக எழுதி கையெழுத்து போடுவார்கள். இப்படி எழுத்துக்களை ஒன்றுக்கொன்று தொடர்பின்றி கையெழுத்தாக போடும் நபர்களின் வாழ்வில் வண்டிச்சக்கரம் போன்ற ஏற்ற இறக்கமான பலன்களையே அதிகம் ஏற்படுத்தும். இப்படி வார்த்தைகளை தனித்தனியாக எழுதி கையெழுத்து போடுபவர்கள் எழுத்துக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்குமாறோ அல்லது அந்த எழுத்துக்கள் அனைத்தும் மிக நெருக்கமாக இருக்கின்ற வகையில் கையெழுத்து போடுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர் தங்களின் பெயரை கையெழுத்தாக எழுதி முடித்து, அந்தப் பெயருக்கு கடைசியில் ஒரு புள்ளி ஒன்றை வைப்பார்கள். மற்ற முறையில் கையெழுத்திடுவதை காட்டிலும் இந்த முறையில் கையெழுத்து போடுபவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டங்கள் என்பது எப்போதும் வராமலேயே போய்விடக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தும். எனவே கையெழுத்து போட்டு இறுதியில் முற்றுப்புள்ளி வைப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். வேறு சிலர் கையெழுத்து போட்டுவிட்டு அந்த கையெழுத்தின் அடியில் இடமிருந்து வலப்புறமாக ஒரு கோடு ஒன்றை இடுவர். இப்படி கையெழுத்து போட்டு, அதற்கு அடியில் கோடு ஒன்றை தீட்டும் வழக்கம் உடையவர்கள் அந்த கோட்டினை கையெழுத்துடன் தொடர்ப்பு விடுபடாமல் இருக்குமாறு போடுவது சிறந்தது என கையெழுத்து சஸ்திர வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.