இனி கை கால் உடல் வலிக்கு எல்லாம் இதை செய்தாலே போதுமே. அப்புறம் என்ன வலி போயே போச்சு தான்.

- Advertisement -

இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் வலி நிவாரணியாக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் வந்து விட்டது இது முற்றிலும் தவறான பழக்கம் இந்த வலி நிவாரணி மாத்திரைகள் அந்த நேரத்துக்கு நம் வலிகளை கட்டுப்படுத்துமே தவிர வலிகளை முற்றிலுமாக பூக்காது அது மட்டும் என்று இந்த வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதினால் வரும் பக்க விளைவுகள் அதை விட அதிக அளவில் இருக்கும். இனி எல்லாவற்றிக்கும் வழி நிவாரணிகளை எடுக்காமல் நம்முடைய சிறு சிறு உபாதைகளுக்கு வைத்தியமாக வீட்டில் இருக்கும் பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உடலில் ஆங்காங்கே தோன்றும் வலிகள் அதாவது கை, கால் வலி, முதுகு வலி, கழுத்து வலி போன்றவற்றுக்கு உப்பு ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். அதற்கு அடுப்பில் ஒரு கடாய் வைத்து நல்ல சூடான பிறகு அதில் கல் உப்பு சேர்த்து கல்லுப்பு சூடாக்க வேண்டும். அபிறகு வறுத்த பிறகு அந்த உப்பை ஒரு துணியில் கொட்டி மூட்டை கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வலி இடத்தில் அந்த உப்பு மூட்டையை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். ஆனால் ஒத்தடம் கொடுக்கும் போது உப்பு ஆனது நம் உடல் பொறுக்கும் அளவிற்கு நல்ல சூட்டுடன் இருக்க வேண்டும். இது தசை வலியை கூட குணமாக்கும்.

- Advertisement -

இதே முறையில் பூண்டு உரித்த பிறகு தூக்கி கீழே போடும் பூண்டு தோலை வைத்தும் செய்யலாம். இதே போல் பூண்டு தோலையும் உரிக்கும் போதெல்லாம் எடுத்து சேர்த்து வைத்த பிறகு, ஒரு கைப்பிடி அளவிற்கு வந்தவுடன் அதை அதை ஒரு துணியில் போட்டு மூட்டையாக கட்டிய பிறகு, அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடேற்றிய உடன் இந்த மூட்டையை அந்த கடை சூட்டில் வைக்கும் போது மூட்டை சூடாகும். அப்படியே உள்ளிருக்கும் அந்த பூண்டு தோலும் சூடாகும். பூண்டு தோலை நேரடியாக சூடு செய்து இது போல மூட்டையாக கட்டுவதற்குள் பூண்டு தோல் சூடு ஆறிவிடும். எனவே பூண்டு தோலை சேர்த்து மூட்டை கட்டிய பிறகு இப்படி சூடு செய்து ஒத்தடம் கொடுத்த வலி குறையும் பூண்டு தோல் அவ்வளவு நல்லது. இந்த பூண்டு தோல் இரவில் படுக்கும் போது தலையணைக்கு அடியில் கூட வைத்து தூங்கலாம். சுவாச பிரச்னைக்கு மிகவும் நல்லது.

இது போல் ஒத்தட முறையில் நீங்கள் கோதுமை தவிடையும் பயன்படுத்தலாம். ரேஷன் கோதுமை வாங்குபவராக இருந்தால் அந்த கோதுமை அரைத்த பிறகு ஜலித்தால் அதில் தவிடு கிடைக்கும். இது கடைகளில் கூட கிடைக்கும். அதையும் இதே போல் மூட்டையாக கட்டிய பிறகு சூடு செய்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். அது மட்டும் இல்லாமல் இந்த ஒத்தடம் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு இருந்து அதனால் ஏற்படும் தலைவலி, கழுத்து வலி ,போன்றவற்றுக்கு உடனடி நிவாரணி இந்த முறையில் ஒத்தடம் கொடுக்கும் போது கிடைக்கும்.

- Advertisement -

அதே போல் சிலருக்கு வாய்வு பிடித்துக் கொண்டு கை கால் ஆங்காங்கே ஜாயிண்டுகளில் வலி எடுக்கும் உடல் முழுவதும் அடித்துப் போட்டதை போல் அசதியாக இருக்கும் . அதற்க்கு கொஞ்சம் பாலை கொதிக்க வைத்து அதில் நாலு பூண்டு நன்றாக நசுக்கி சேர்த்துப் பிறகு அத்துடன் பனைவெல்லம் சேர்த்து பாலை அருந்தினால் இப்படி வாய்வுத் தொல்லையால் ஏற்படும் வலிகள் சரியாகும்.

இதே போல் இந்த கை, கால் உடம்பு வலிக்கு நல்லெண்ணெயை மிதமாக சூடு படுத்தி வலி இருக்கும் இடங்களில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் கொடுத்தால் இறுகி இருக்கும் தசைகள் சற்று தளர்வாகி அந்த இடங்களில் வலி குறைந்து ரிலீசாக இருக்கும்.

எதற்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து என்று தேடாமல் இது போல சிறு சிறு குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டு இதை பயன்படுத்தி நம் உடல் பாதைகளை சரி செய்து கொள்ளும் போது நமக்கு மாத்திரையினால் ஏற்படும் தேவையில்லாத பக்க விளைவுகள் குறைவதுண்டு ஆரோக்கியத்துடன் பணமும் செலவாகாமல் இருக்கும் .

- Advertisement -