உங்கள் கை ராசியாக மாற, உங்கள் கையில் இருக்கும் தரித்திரம் நீங்க, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க, கையில் பணம் தங்க உங்கள் கையை இப்படி கழுவ வேண்டும்.

asta-lakshmi-hand
- Advertisement -

சிலபேரினுடைய கை மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாக மாறிவிடும். கைராசி உள்ளவர்கள் ஒரு நல்ல காரியத்தை, அவர்களுடைய கையால் தொடங்கி வைத்தால், அவர்கள் தொடங்கி வைக்கும் காரியம் ஓஹோவென வளர்ந்து கொண்டே செல்லும். இப்படிப்பட்டவர்களுடைய கையை தான் கைராசி என்று சொல்லுவோம். இப்படிப்பட்டவர்கள் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடமும் சீரும் சிறப்புமாகத்தான் இருக்கும்.

hand

சரி, அடுத்தபடியாக சில பேரை நாமே திட்டி இருப்போம் ‘இவன் கையால் எதைத் தொட்டாலும் துளங்காது. இவன் கை வைத்தால் அவ்வளவு தான். அந்த வேலை உருப்படியாக நடக்காது. இவன் கைக்கு பத்து ரூபாய் சென்றால் கூட அந்தப் பணம் பஞ்சு பஞ்சாகப் பறந்து போய்விடும். இவன் கையில் பணமே நிக்காது. இவன் கை ஒரு ஓட்டைக் கை தரித்திரம் பிடித்த கை’ இப்படியெல்லாம் சில பேரை நாம் சொல்வதும் உண்டு. சில பேருடைய கைகள் ராசியாக இருக்கும். சில பேருடைய கை ராசி இல்லாமலும் இருக்கும். அது அவர்கள் வாங்கி வந்த வரம். அதாவது அவர்களுடைய கர்மவினையை பொருத்தது.

- Advertisement -

எது எப்படி இருந்தாலும் முடிந்தவரை நாம் அடுத்தவர்களுடைய மனது நோகும் படி கடுமையாக நடந்து கொள்ளவும் கூடாது. அடுத்தவர்கள் மனது புண்படும்படி பேசவும் கூடாது. முதலில் இதை மனதில் வைத்துக்கொண்டு பதிவுக்கு செல்வோம்.

milk1

உங்களுடைய கை ராசியான கையாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஒருவேளை உங்களுடைய கை ராசியில்லாத கையாக இருந்தால், அந்த கைகளை இராசியான கைகளாக அதிர்ஷ்டம் நிறைந்த கைகளாக எப்படி மாற்றுவது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை இந்த இரண்டு தினங்களில் உங்களுடைய கையை பசும்பால் கொண்டு கழுவ வேண்டும். சுத்தமான பசும்பாலை ஒரு கால் டம்ளர் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரில் இந்த பசும்பாலை ஊற்றி கலந்து விடுங்கள். உங்களுடைய இரண்டு கைகளையும் அந்த பால் கலந்த தண்ணீரில் கழுவி அப்படியே விட்டு விடுங்கள்.

hand-wash

இரண்டு மணி நேரத்திற்கு உங்களுடைய கையை வேறு சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டாம். வாரம் இரண்டு முறை உங்களுடைய கையை இப்படி கழுவினால் உங்கள் கையில் இருக்கும் தரித்திரம் நீங்கும். உங்களுடைய கையும் ராசியான கை மாறும். உங்களுடைய கைக்கு வரக்கூடிய பணம் வீண் விரையம் ஆகாது என்று சொல்லப்பட்டுள்ளது. பாக்கெட் பால் பயன்படுத்தினால் அதில் நமக்குப் பிரயோஜனம் இருக்காது. முடிந்தவரை பசும்பாலை பயன்படுத்துங்கள்.

cash

வாரம் வரக்கூடிய 5 செவ்வாய்க்கிழமைகள், 5 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இப்படி செய்து பாருங்கள். உங்கள் கை ராசியாக மாறுவதை உங்களாலேயே உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -