உங்கள் கைரேகையில் இந்த சின்னம் இருக்கிறதா என்று பாருங்கள்? கட்டாயம், உங்களுக்கு சிவனின் ஆசிர்வாதமும், விஷ்ணுவின் ஆசீர்வாதமும் நிறைந்திருக்கும்.

kairegai-vishnusivan

நம்முடைய தலையெழுத்து எப்படி இருக்கும் என்பதை நம் கையில் இருக்கும் கைரேகையை பார்த்தே சொல்லிவிட முடியும். அதன் அடிப்படையில், நம்முடைய கைகளில் இருக்கக்கூடிய ரேகைகளில் தெரியும் சின்னங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை பற்றியும், அந்த சின்னங்களை கொண்டவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும், தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேருக்கு இப்படிப்பட்ட ரேகையானது வெளிப்படையாக தெரியும். சில பேருக்கு இந்த ரேகையானது தெரியாத அளவிற்கு கையில் மறைந்திருக்கும். எது எப்படியாக இருந்தாலும், அதற்கான பலனை அவர் நிச்சயம் அடைந்தே தீருவார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

thirisoola-regai

சிலபேருக்கு கைகளில் திரிசூல வடிவில் ரேகை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சிவனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்கள் என்பதும், சிவனின் தீவிர பக்தராக இருப்பவர்கள் என்பதும் மாற்ற முடியாதது. உங்களுக்கு வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் கூட, சுலபமாக தீரும். அந்த அளவிற்கு இந்த ரேகையானது உங்களை பாதுகாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நட்சத்திர வடிவமானது உங்களது கைரேகையில் இருந்தால், நீங்கள் சாஸ்திரத்தை சுலபமாக கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். எந்த ஒரு செயல் பாட்டை உங்கள் கைகளில் ஆரம்பித்து வைத்தாலும், அது மேலோங்கி வளரும். இவர்கள் கையில், பணம் விளையாடும் என்று கூட சொல்லலாம். இவர்களது கைகள் நிறைய பணத்தை எப்போதும் எண்ணிக் கொண்டே இருக்கும். வங்கியில் கேஷியராக இருக்கும் யோகம் இவர்களுக்கு உண்டு. இவை எல்லாவற்றையும் தாண்டி மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒரு தனித்துவம் நிச்சயம் இந்த நபரிடம் இருக்கும்.

star-regai

சில பேரது கைகளில், வைர சின்னம் இருக்கும். இவர்கள் வாழ்க்கையில், எதையாவது ஒன்றை தேடிக் கொண்டே இருப்பார்கள். புதியதாக ஏதாவது கண்டுபிடித்து, அற்புதங்களை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட தேடுதல் இவர்களது வாழ்க்கையில் இருந்தாலும்கூட, பெரிய பிரச்சனைகள் எதிலும் இவர்கள் சிக்கிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு.

- Advertisement -

கூட்டல் குறி, பெருக்கல் குறியை கை ரேகையில் கொண்டவர்கள், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். மதப்பற்று அதிகமாக இருக்கும். ஆனால் நல்ல குணம் படைத்தவர்களாக தான் இருப்பார்கள். தன்னுடைய வெற்றியில் மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளும் குணாதிசயம் இவர்களிடம் இருக்கும். தான் மட்டும் முன்னேற வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்கள்.

fish-regai

மீன் சின்னமானது கைரேகையில் இருந்தால், அவர்கள் விஷ்ணுவின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்றவர்கள் என்று சொல்லலாம். இவர்கள் எப்போதும் மற்றவர்களை ஊக்குவித்து கொண்டே இருப்பார்கள். மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

varka-chinnam-regai

இறுதியாக வர்கசின்னம் என்று சொல்லப்படும், இந்த சின்னம் ஒருவரது கைரேகையில் இருந்தால், வாழ்க்கையில் அதிகப்படியான கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருந்தாலும், அந்த கஷ்டத்தை எல்லாம் தாண்டி, அதில் வெற்றி அடைய கூடிய திறமை இவர்களிடம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
பெண்களுடைய புருவம் எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா! துரதிர்ஷ்டசாலிகளா! என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kairegai kurippugal Tamil. Kairegai jothidam in Tamil. Kai regai. Kai regai palangal. Kairegai jothidam Tamil. Kairegai astrology in Tamil.