காய்கறிகளை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறீர்கள்? காய்கறிகளை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? காய்கறி ஒரு வரம்!

veggitables-kaikari
- Advertisement -

விலங்குகளைப் போல மனிதனுக்கு இதைத் தான் சாப்பிட வேண்டும் என்கிற எந்த கட்டாயமும் இல்லாததால் அவன் எல்லாவற்றையும் சாப்பிட பழகிக் கொண்டான். ஆனால் ஒரு மனிதன் எதை சாப்பிட்டால்? தன் ஆயுளை நீட்டிக்க முடியும்? என்றால் அது காய்கறிகளை அதிகம் சேர்ப்பதால் முடியும் என்பது பதிலாகும். அதிக காய்கறிகளை சேர்த்து மற்ற எல்லாவற்றையும் சரி விகிதமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அந்த வகையில் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உண்டாகக்கூடிய பலன்கள் என்னென்ன? அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பதையும் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

அரிசி உணவை சேர்த்துக் கொள்பவர்கள் அதற்கு இணையாக காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வது தான் முறை ஆகும். ஒரு கப் அரிசி சாதம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் ஒரு கப் அளவிற்கு காய்கறிகளையும் உடன் எடுத்துக் கொள்ள வேண்டும். கோதுமை அல்லது மற்ற தானியங்களை பிரதான உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கும் இதே அளவு தான்.

- Advertisement -

மூன்று சப்பாத்தி சாப்பிட்டால் அந்த மூன்று சப்பாத்திக்கு இணையான காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும். நீங்கள் சேர்க்கும் காய்கறிகளில் மூன்றில் 2 பங்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பங்கை அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும் இவ்வாறு சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம் ஆகும். காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் இரத்தத்தின் அழுத்தம் சீராக இருக்கும். இதனால் இதய நோய் பாதிப்புகள் வெகுவாக குறையும். இன்று இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும், காய்கறிகளை நாம் நம் உணவில் தவிர்ப்பதற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு.

வயிறு, குடல், ஜீரண பாதை ஆகியவற்றை சரியாக இயக்கி மலச்சிக்கல் என்கிற கொடிய நோயை அழிக்கும் அற்புத மருந்து தான் காய்கறி! மலசிக்கல் இருப்பவர்களுக்கு எல்லா நோயும் விரைவில் வரக்கக்கூடிய ஆபத்து உண்டு. எனவே காய்கறிகளை தவறாமல் ஒரு அளவுக்கு கணிசமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சில காய்கறிகளை வேக வைத்து சாப்பிடும் பொழுது நன்மைகள் கிடைக்கும். சில காய்கறிகள் வேக வைக்காத போது நன்மைகள் கிடைக்கும். இதை அறிந்து வைத்து சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை நீட்டிக்கச் செய்யும்.

- Advertisement -

சிலருக்கு காய்கறிகள் பிடிக்காது. அவர்கள் காய்கறிகளை பச்சையாக சாப்பிடும் பொழுது, அதனுடன் கொஞ்சம் மோர், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை குறைவான அளவிற்கு சேர்த்து சாப்பிட்டால் சாலட் போல ருசியாக இருக்கும். எனவே அதை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் இருக்காது. அவரைக்காய், வெள்ளை பூசணி, வெண்டை காய், பீன்ஸ், கோவக்காய், முட்டைகோஸ், நூல்கோல் இது போன்ற காய்கறி வகைகளை வேக வைக்காமல் மிக்ஸியில் அரைத்து ஜூஸ் போல செய்து குடித்தால் அல்லது மோரில் கலந்து சாப்பிடும் பொழுது நம் உடலில் நுண்ணூட்ட சத்து அதிகரிக்கும்.

குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இது போல் செய்து தர ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கும். காய்கறி சாறு பருகுவதால் உடலில் புற்றுநோய் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தாலும் அது அடியோடு தடுக்கப்படும். இவற்றில் இருக்கும் நுண்ணிய சத்துக்கள் மூளை ஆற்றலை அதிகரிக்க செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் எண்ண ஆற்றலையும் அதிகரித்து நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

- Advertisement -