கையேந்தி பவன் இட்லி குருமா. வெறும் 10 நிமிடத்தில் இப்படி வெச்சு அசத்துங்க. 10 இட்லி வச்சாலும் பத்தாது.

pottukadalai-kuruma1
- Advertisement -

சில கடைகளில் வெறும் வெங்காயம் தக்காளியை வைத்து மசாலா வாசத்துடன் இட்லிக்கு தொட்டுக்கொள்ள குருமா கிடைக்கும். அந்த மாதிரி ஒரு சூப்பரான தண்ணி குருமாவை எப்படி வைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்‌. மசாலா வாசனை நிறைந்த ரெசிப்பி பிரியர்களா நீங்கள். இந்த குருமாவை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

paya-kuruma2

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 4, பூண்டு – 6 பல், சிறிய துண்டு – இஞ்சி, தேங்காய் துருவல் – 2 கைப்பிடி அளவு, முந்திரி பருப்பு – 10, சோம்பு – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல இதை மொழுமொழுவென அரைத்துக் கொள்ளவேண்டும். திப்பியாக அரைத்தால் நிச்சயமாக குருமா சுவையாக இருக்காது. அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அந்த குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1 ஸ்பூன், பட்டை – 2 துண்டு, லவங்கம் – 4, கல்பாசி – சிறிய துண்டு, பிரியாணி இலை – 2, இந்த பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் பொரிந்து வந்தவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு சேர்த்து வெங்காயத்தை நன்றாக வதக்கி விடுங்கள்.

paya-kuruma3

வெங்காயம் வதங்கி வந்தவுடன் மீடியம் சைஸ் தக்காளி – 1 பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் தக்காளி வதங்கியவுடன், தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து இந்த பொருட்களையும் எண்ணெயோடு சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, அரைத்து வைத்திருக்கும் விழுதை குக்கரில் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

ஊற்றிய விழுதையும் எண்ணெயில் 5 நிமிடங்கள் வரை வதக்குங்கள். அப்போதுதான் விழுதில் இருக்கும் பச்சை வாசனை சுத்தமாக நீங்கும். இறுதியாக இந்த குருமாவுக்கு தேவையான தண்ணீரை ஊற்றவேண்டும்‌. தாராளமாக தண்ணீரை ஊற்றுங்கள். இதன் பெயரே தண்ணி குருமா தான். அதன் பின்பு குருமாவை நன்றாக கலந்துவிட வேண்டும். குருமா 2 கொதி வந்தவுடன் உப்பு காரம் சரி பார்த்து விட்டு குக்கரை மூடி 2 விசில் விட்டால் போதும் சூப்பரான வாசத்தோடு குருமா தயார்.

இறுதியாக இந்த குருமாவுக்கு கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாற வேண்டியது தான். 10 இட்லி வெச்சு பாருங்க. இட்லி உள்ள எப்படி இறங்குது தெரியாது. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -